Archive for July 25th, 2010
இலங்கை செல்ல நடிகர், நடிகைகளுக்கு தடை போடக்கூடாது – தென்னிந்திய நடிகர் சங்கம்..!
கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியப் பட விழாவுக்கு இந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர், நடிகையும் போகக் கூடாது என திரையுலகினர் கூடி போட்ட தீர்மானத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒப்புக் கொண்டு யாரும் போகக் கூடாது என கேட்டுக் கொண்டிருந்தது.
அப்படிப் போன நடிகர் நடிகையர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசப்பட்டது. நடிகை ஆசின் இலங்கை போனதை கடுமையாக கண்டித்திருந்த நடிகர் சங்க செயலாளர் ராதாரவியும், அசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் [...]
ஆளும் கட்சியில் இணையப்போவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை-விஜயகலா மகேஸ்வரன் எம்.பி…!
ஆளும் கட்சியில் இணைப்போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமது கணவர் அமரர் மகேஸ்வரன் உயிருடன் இருந்த காலத்தில் தமது யாழ் இல்லத்திற்கு ஆளும்கட்சி அமைச்சர்கள் விஜயம் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கிற்கு விஜயம்செய்யும் ஆளும்கட்சி அமைச்சர்கள் பலாலியில் அமைந்துள்ள அமரர் மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் செய்வதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததுடன், விஜயகலா மகேஸ்வரன் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் [...]
நடிகை அசின், நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோருக்கு தமிழ் திரையுலகம் தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை..!
மகிந்த ராஜபக்ச அரசின் தூதராக செயல்படும் நடிகை அசின், நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோருக்கு தமிழ் திரையுலகம் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு, மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் கபடி மாறன், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ், தென்னிந்திய மீனவர் பேரவைத் தலைவர் ஜெயபாலன் ஆகியோர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து தமிழக மீனவர்களுக்காக பேசிய ஒரு காரணத்திற்காக கைதுசெய்யப்பட்டு [...]