ஆளும் கட்சியில் இணையப்போவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை-விஜயகலா மகேஸ்வரன் எம்.பி…!

ஆளும் கட்சியில் இணைப்போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமது கணவர் அமரர் மகேஸ்வரன் உயிருடன் இருந்த காலத்தில் தமது யாழ் இல்லத்திற்கு ஆளும்கட்சி அமைச்சர்கள் விஜயம் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கிற்கு விஜயம்செய்யும் ஆளும்கட்சி அமைச்சர்கள் பலாலியில் அமைந்துள்ள அமரர் மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் செய்வதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததுடன், விஜயகலா மகேஸ்வரன் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்படலாம் எனவும் ஊடகங்கள் யூகம் வெளியிட்டிருந்தன.

Comments

No Comments

Leave a reply

Name *

Mail *

Website