பன்னீருக்கு பதிலாக சிக்கன் – 55 ஆயிரம் ரூபா அபராதம் !! (உலக செய்தி)

Read Time:2 Minute, 4 Second

புனேவில் வசிக்கும் வழக்கறிஞர் சண்முக் தேஷ்முக். இவர் ஆன்லைனில் சொமாட்டோ செயலி மூலம் பன்னீர் பட்டர் மசாலா உணவை ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்சல் வந்துள்ளது.

இந்த பார்சலை திறந்து பார்த்தபோது பட்டர் சிக்கன் வந்துள்ளது. இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்ததால் பன்னீர் தான் என நினைத்து சாப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் தான் தெரிந்துள்ளது வந்த பார்சலில் இருந்தது பட்டர் சிக்கன் என்பது. இதையடுத்து சண்முக், புனே நுகர்வோர் நீதிமன்றத்தில் சொமாட்டோ நிறுவனத்தின்மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த புகாரில், ´இது முதன்முறை அல்ல, ஏற்கனவே ஆர்டர் செய்த உணவு மாறி வந்துள்ளது. ஆனால் இம்முறை அசைவம் வந்து விட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்´ என சண்முக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கூறிய சொமோட்டோ நிறுவனம், ´எங்கள் நிறுவனத்தின் மீது குற்றம் இல்லை. உணவு வழங்கப்பட்ட ஓட்டல் தான் உணவை மாற்றி தந்துள்ளது´ என கூறியது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சேவை குறைப்பாட்டிற்காக சொமாட்டோ நிறுவனத்துக்கு ரூ. 50 ஆயிரமும், மேலும் நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.5 ஆயிரமும் சேர்த்து, 45 நாட்களுக்குள் ரூ. 55 ஆயிரத்தினை அபராதமாக சண்முக்கிற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கெட்டுப்போன ரொட்டி சாப்பிட்ட 14 கைதிகள் பலி !! (உலக செய்தி)
Next post இரு வேறு பகுதியில் இரண்டு தற்கொலை சம்பவங்கள்!!