ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 16 Second

ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரித்துள்ளார்.

ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே அதாவது கிட்டதட்ட 1000 யார்ட்கள் தொலைவில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை புறக்கணித்து அச்சுறுத்தும் வகையில் விமானம் பறந்து வந்ததால் அமெரிக்க தரப்பு தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக டிரம்ப் தெரித்துள்ளார்.

இதேவேளை தமது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று ஈரான் கூறியுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க இராணுவத்தின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 8189 இந்திய கைதிகள் வெளிநாட்டு சிறைகளில்!! (உலக செய்தி)
Next post மாய(ன்) வட்டமா? (மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? (வீடியோ)