பிராமணர்கள் எப்போதும் உயர் பொறுப்பில் இருக்க வேண்டும்! (உலக செய்தி)

Read Time:2 Minute, 41 Second

முற்பிறவிகளில் செய்த நல்வினைகள் காரணமாக பிராமணர்கள் இரு முறை பிறந்தவர்கள் என்று கேரள மாநில உயர் நீதிமன்ற நீதிபதி வி. சிதம்பரேஷ் பேசியுள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொச்சியில் நடந்த தமிழ் பிராமணர்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், தூய்மை, உயர்ந்த சிந்தனை, நல்ல குணம், பெரும்பான்மை சைவ உணவுப் பழக்கம், கர்நாடக சங்கீதம் மீதான ஈர்ப்பு போன்ற தனித்துவம் மிக்க குணாதிசயங்கள் அனைத்தும் ஒருங்கே பிராமணர்களுக்கு உண்டு என்று அவர் பேசியுள்ளார்.

பிராமணர்கள் எப்போதும் மதவாதிகளாக இருந்ததில்லை, மக்களை நேசிப்பவர்கள், பிறருக்கு கேடு விளைவிக்காதவர்கள், அஹிம்சாவாதிகள் என்று சிதம்பரேஷ் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

நல்ல காரியங்களுக்கு தாராளமாக பொருளுதவி செய்யும் பிராமணர்கள் எப்போதும் உயர் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“அரசமைப்புச் சட்டப் பொறுப்பில் இருப்பதால் நான் இட ஒதுக்கீடு பற்றி கருத்துக்கூற முடியாது. ஆனால், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடர வேண்டுமா? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டுமா என்பதை இந்த சமூகம் தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். குரல் உயர்த்திப் பேசவேண்டும். அழுகிற குழந்தைதான் பால்குடிக்கும்.”

“நம்மை ஓரம் கட்ட அனுமதிக்கக் கூடாது; நாம் எப்போதுமே மைய நீராட்டத்தில் இருக்க வேண்டும்; தனிக் குரலில் பாடாமல் சேர்ந்து இசைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சிதம்பரேஷ், டிசம்பர் 2012 முதல் நிரந்தரம் ஆக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேமலை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)
Next post ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துவது கடினம்!! (உலக செய்தி)