இயற்கை அழகு வேண்டுமா ? (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 33 Second

எனக்கு 18 வயதாகிறது. நான் கல்லூரியில் படித்து வருகிறேன். வெயில் காலம் வந்தாலே டென்ஷனாகிடும். காரணம் என்னுடைய சருமம் மிகவும் சென்சிட்டிவ்வானது. சிறிது நேரம் வெயிலில் சென்றாலே கருமையாகிவிடும். இதற்காக நான் பல கிரீம்கள் பயன்படுத்தினாலும் அதற்கான பலன் கிடைப்பதில்லை. அதே போல் எனக்கு அதிகம் வியர்க்கும் என்பதால் என் தலை முடிவெயிலினால் வறண்டு காணப்படுகிறது. மேலும் தலையிலும் அதிகம் வியர்ப்பதால் தலைமண்டை பிசுபிசுத்து காணப்படுகிறது. வெயில் காலத்தில் என் சருமத்தை பாதுகாக்க இயற்கை முறையில் தீர்வு காணமுடியுமா. ரசாயனப் பொருட்களை பயன்படுத்தி ஏமாற்றம் கொண்டது தான் மிச்சம். தீர்வு கூறுங்களேன்.
– திவ்யா, திருச்சி

வெயில் காலத்தில் சரும பிரச்னை ஏற்படுவது இயல்பானது. சூரியனின் சுட்டெரிக்கும் பார்வையில் இருந்து நம்மால் தப்பிக்கவே முடியாது. ஆனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். இதற்காக சரும நிபுணரை தான் அணுக வேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தபடியே அதற்கான பாதுகாப்பு முறையினை இயற்கை முறையில் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் அழகுக் கலை நிபுணர் மற்றும் ஆயுர்வேத அரசியான ஷெனாஸ் ஹுசெயின். இவர் வெயில் காலத்தில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் அதற்கு இயற்கை முறையில் எவ்வாறு தீர்வளிக்கலாம் என்று விளக்குகிறார்.

வேர்க்குரு :

வெயில் காலத்தில் எல்லாருக்கும் ஏற்படும் முக்கியமான பிரச்னை வேர்க்குருப் பிரச்னை. சருமத்தில் ரேஷஸ் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பொதுவாக வெயில் காலத்தில் வேர்க்குருவினால் ஏற்படும் ரேஷசுக்கு ஹியூமிடிட்டி ஒரு பெரிய காரணமாக அமையும். இதனால் சாதாரண வேர்க்குருவும் சருமத்தில் தடிப்பாக மாறும் வாய்ப்புள்ளது. இதற்கான சந்தனம் அல்லது வெட்டிவேர் அடைங்கிய பவுடரை பயன்படுத்தினால் வேர்க்குருவில் இருந்து தப்பிக்க முடியும். இவை வேர்க்குருவினை ஆற்றவும் சருமத்திற்கு கூலான உணர்வை ஏற்படுத்தும். இவை தவிர நாம் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை கொண்டே வேர்க்குருவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

*பன்னீருடன் சந்தனத்தை குழைத்து வேர்க்குரு இருக்கும் இடத்தில் தடவலாம். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவலாம். பன்னீருக்கு இயற்கையிலேயே குளுமைப் படுத்தும் தன்மையுண்டு என்பதால் வேர்க்குரு சீக்கிரம் குணமாகும்.

* கற்றாழையை வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி வந்தால் நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.

*ஒரு பங்கு வினிகரில் மூன்று பங்கு தண்ணீரைக் கலக்கவும். இதனை பஞ்சில் நனைத்து முகத்தில் மற்றும் வேர்க்குரு உள்ள இடத்தில் தடவலாம். வேர்க்குருவினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு நீங்கும்.

*பேக்கிங் சோடாவை தண்ணீரில் பேஸ்ட் போல கலந்து தடவி ஐந்து நிமிடத்தில் கழுவிட வேண்டும். இதுவும் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

சரும கருமை (டேன்னிங்)

வெயில் காலத்தில் எல்லாரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை சரும கருமை. ஆங்கிலத்தில் இதனை taning என்று சொல்லுவர். திறந்தவெளி நீச்சல் குளத்தில் குளித்தாலோ அல்லது வெயிலில் அதிக நேரம் சுற்றினாலோ சருமம் கருமையடையும். சூரிய ஒளியில் சருமம் அதிக நேரம் வெளிப்படும் போது சருமத்தில் மெலனின் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும், இதனால் சருமம் கருமையாக மாறும். மெலனின் சருமத்தின் உள்புறம் தான் சுரக்கும். அது சருமத்தின் மேல் பகுதியில் வரும் போது சருமம் கருமையாக மாறும். மேலும் மெலனின் அடர்ந்த நிறத்தில் இருப்பதால் நம்முடைய சருமம் கருமையாக மாறுகிறது. இதற்கு நம்முடைய சமையல்
அறையிலேயே தீர்வு உள்ளது.

*பாதாம் பருப்பை ஊறவைத்து அதில் சிறிதளவு தயிர், மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனை கருமையான இடத்தில் தடவி லேசாக மசாஜ் செய்து பிறகு குளிர்ந்த தண்ணீரால் கழுவலாம்.

*எலுமிச்சை தோலை காயவைத்து பொடித்துக் கொள்ளவும். இதனை குளிர்ந்த பால் அல்லது தயிரில் கலந்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவலாம்.

*எண்ணெய் சருமத்தில் உள்ள கருமையை நீக்க எலுமிச்சை சாற்றுடன் வெள்ளரி சாற்றினை சம அளவில் சேர்த்து சருமத்தில் 20 நிமிடம் வைத்து பிறகு கழுவலாம். வெள்ளரி விழுதை தயிருடன் கலந்து முகத்தில் தினமும் தடவி 20 நிமிடம் கழித்து கழுவலாம். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் வெள்ளரியை பயன்படுத்துவது நல்லது. காரணம் இது சருமத்தில் வழியும் எண்ணெய்யை கட்டுப்படுத்தும். சன்பர்ன்வெயிலினால் ஏற்படும் சரும எரிச்சலுக்கு இந்த டிப்சை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

* கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவினால் சீக்கிரமே குணமாகும். இதில் சிங்க் இருப்பதால் அது எரிச்சலை கட்டுப்படுத்தும் மேலும் சருமத்தை குளிர்ச்ச்ியடைய செய்யும்.

* தேங்காய் தண்ணீர் அல்லது தேங்காய் பாலையும் சருமத்தில் தடவலாம். இதுவும் வெயிலினால் ஏற்பட்ட சரும பாதிப்பை ஆற்றும். மேலும் சருமத்தில் உள்ள கருமையை நீக்கி சருமம் வெண்மையாக மாற உதவும். தினமும் 20 நிமிடம் சருமத்தில் தடவி பிறகு கழுவலாம்.

*பஞ்சில் குளிர்ந்த பாலை நனைத்து சருமத்தில் தடவி வந்தால் சருமத்தை மிருதுவாக்கி நாளடைவில் கருமையை நீக்கும். எண்ணெய் மற்றும் வியர்வை படிந்த தலைவெயில் காலத்தில் சருமத்தில் வியர்வை ஏற்படுகிறதோ இல்லையே, தலைமண்டையில் வியர்வை ஏற்படும். இதனால் தலைமண்டையில் அதிகமாக வியர்ப்பது மட்டும் இல்லாமல் எண்ணெய் அதிகம் சுரக்கவும் செய்யும். தினமும் குளிக்கும் போது சில சிகிச்சை முறைகளை கடைப்பிடித்தால் இந்த பிரச்னையில் இருந்து தீர்வு காணமுடியும்.

*ஒரு பழ எலுமிச்சை சாற்றினை பிழிந்துக் கொள்ளவும். அதில் அரை கப் பன்னீரை சேர்த்து கலந்துக் கொள்ளவும். இதை தலை குளித்த பிறகு கடைசியாக தலைமுடியை அலசவும்.

* ஐந்து கப் தண்ணீரில் நான்கு தேயிலையை சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கவும். ஆறியதும் அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்துக் கொள்ளவும். பிறகு தலை குளித்த பிறகு கடைசியாக தலைமுடியை அலசவும். டீயில் உள்ள டானின் முடியை மிருதுவாகவும், பளபளப்பாக இருக்க செய்யும். எல்லா விதமான தலைமுடிக்கும் உகந்தது.

*காபி டிகாஷன், டீ டிகாஷன், ஒரு முட்டை, நான்கு டீஸ்பூன் எலுமிச்சை சாறு இதில் தேவை யான அளவு மருதாணி பவுடரை சேர்த்து தலையில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து குளிக்கலாம். முட்டை பயன்படுத்த விரும்பாதவர்கள் அதற்கு பதில் டீ டிகாஷனை சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெய் சருமம் மற்றும் சரும வெடிப்புசூட்டினால் உங்களின் தலையில் எண்ணெய் அதிகம் சுரப்பது போல் உங்க சருமத்திலும் அதே பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. வெயில் காலத்தில் சருமத்தில் எண்ணெய் அதிகம் சுரக்கும் போது அது பிசுபிசுப்பு தன்மையை ஏற்படுத்தும்.

*முல்தானி மெட்டி சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கும் வல்லமைக் கொண்டது. முல்தானி மெட்டியை பன்னீருடன் கலந்து வாரத்தில் மூன்று நாட்கள் முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு கழுவவேண்டும்.

* டீ டிரீ எண்ணெய் இரண்டு சொட்டு அதில் இரண்டு மேசைக்கரண்டி தண்ணீர் அல்லது பன்னீர் கலந்து பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவலாம்.

* பட்டைப் பொடி ஒரு டீஸ்பூன், அரை டீஸ்பூன் வெந்தயப்பொடி, சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் பரு உள்ள இடத்தில் இரவு படுக்கும் முன் தடவ வேண்டும். இதனை பரு உள்ள இடத்தில் மட்டுமே தடவ வேண்டும். இதனால் பருக்கள் மறைந்து சருமத்தில் கரும்புள்ளி ஏற்படாமல் பாதுகாக்கும்.

* சூடான தண்ணீரில் வேப்பிலையை ஊறவைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டினை முகத்தில் தடவலாம். அல்லது பரு உள்ள இடத்திலும் தடவி வந்தால் முகத்தில் பருக்கள் மறைவது மட்டும் இல்லாமல் சருமமும் பளப்பளப்பாகும்.

*வெந்தய இலையை அரைத்து அதையும் சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவலாம்.

இவை எல்லாம் வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்னைக்கான தீர்வு. இதில் ஒரு சில சிகிச்சை முறைகளை நாம் நாள் தோறும் கடைப்பிடிக்கவும் செய்யலாம். ரசாயனப் பொருட்களை தவிர்த்து வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நமக்கான சிகிச்சை அனைத்தும் செய்துக் கொள்ள முடியும். இயற்கையில் கிடைக்காத அருமருந்து வேறு எதிலும் கிடைப்பதில்லை” என்று ஆலோசனை வழங்கினார் பிரபல அழகுக்கலை நிபுணர் ஷெனாஸ் ஹுசெயின்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்க வீட்டு பக்கத்தில் நாய் குழி தோண்டுறத பாத்தீங்கன்னா எச்சரிக்கை!! (வீடியோ)
Next post சிறு சிறு பொருட்கள் தயாரிப்பு…சிறப்பான வருமான வாய்ப்பு!! (மகளிர் பக்கம்)