அழகோவிய ஆப் (app)!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 21 Second

பெண்களையும் அழகு சாதனங்களையும் பிரிக்கவே முடியாது. நான் மேக்கப் எல்லாம் போட்டது இல்லைன்னு எந்தப் பொண்ணும் சொல்ல முடியாது. சாதாரணமாக இருக்கும் பெண் கூட பவுடர் அடித்து பொட்டு வைத்து கண்களில் மை இட்டுக் கொள்வாள். அதற்கு காரணம் அவர்கள் எப்போதும் எந்த வயதிலும் பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்பது தான்.

அதனால் தான் இன்றும் அழகு நிலையங்கள் படு ஜோராக இயங்கிக் கொண்டு இருக்கின்றன. அழகுக்கலை என்பது ஒரு கடல். அதில் ஒரு முறை குதித்துவிட்டால், பலவிதமான முத்துக்களை தேடி கண்டெடுக்க வேண்டும். மேலும் இன்றைய தலைமுறையினர் தங்களை வீட்டில் இருந்தபடியே அழகுபடுத்திக் கொள்ள அதிகம் விரும்புகிறார்கள்.

எப்போதும் பார்லர் செல்ல முடியாது. காரணம் நேரமின்மை. அதனால் வீட்டில் இருந்தபடியே அவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். இயற்கை முறையில் உங்களை எவ்வாறு அழகுபடுத்திக் கொள்ளலாம் என்று இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

ஹோம்மேட் பியூட்டி கைட்ஸ்

இந்த ஆப்பில் முக அழகு குறித்து பல டிப்ஸ்கள் உள்ளன.வீட்டில் உள்ள இயற்கை பொருட்களை கொண்டு எவ்வாறு உங்களை அழகாக்கிகொள்ளலாம் என்பதை இதில் உள்ள டிப்சை பின்பற்றி தெரிந்துகொள்ளுங்கள். கடைகளில் கிடைக்கும் ரசாயன கிரீம்களை தவிர்த்து, இயற்கை முறையில் எவ்வாறு இந்த கிரீம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம் என்ற செய்முறை விளக்கமும் இதில் உள்ளது.

முக அழகு கிரீம்கள் மட்டும் இல்லாமல் மாஸ்க், ஸ்கிரப் மற்றும் ஃபேஸ் பேக் அனைத்திற்கான செய்முறைகள் இதில் உள்ளன. அது மட்டும் இல்லாமல் முக அழகு குறித்த பல சந்தேகங்களுக்காக தீர்வுகள் இதில் குறிப்பிட்டுள்ளன. உதாரணத்திற்கு.. முகப்பரு, கரும்புள்ளிகள் இன்னும் பல. உங்களின் அழகு சார்ந்த பிரச்னைகளை ஹோம்மேட் பியூட்டி கைட்ஸ் மூலம் பெற்று அழகாக மாறுங்கள்.

நெயில் ஆர்ட் :

நெயில் பாலிஷ் கொண்டு உங்களின் நகங்களை எவ்வாறு அழகாக்கலாம் என்பதை இந்த ஆப் மூலம் இலவசமாக தெரிந்து கொள்ளலாம். ஒரு நகத்தின் அளவைக் கொண்டு எவ்வாறு அதை வடிவமைக்கலாம் என்பது மட்டும் இல்லாமல் அதற்கான வீடியோ
முறைகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் நகங்களின் வடிவமைப்புக்கு ஏற்ப டிசைன்கள், பிரஞ்ச் நெயில் கட்டிங் முறைகள், ஆக்ரலி நகங்கள், ஜெல் நகங்கள், ஹலோவீன் நகங்கள்… என பல வகை டிசைன்கள் உள்ளன. இவை எல்லாம் அவ்வப்போது மார்க்கெட் நிலவரங்களுக்கு ஏற்ப அப்கிரேட் செய்யப்படுவதால், உங்களின் நகங்களை நீங்கள் டிரெண்டிங் ஃபேஷனுக்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த ஆப்பினை இலவசமாக உங்களின் மொபைல் போனில் டவுன்லோட் செய்து, உங்கள் நகங்களை ஃபேஷனுக்கு ஏற்ப அழகுப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஹேர்ஸ்டைல் ஸ்டெப் பை ஸ்டெப்

சாதாரணமாக எண்ணை வைத்து பின்னல் போடுவது எல்லாம் அந்த காலம். இப்போது உடைக்கு ஏற்ப பெண்கள் தங்களின் தலைமுடியை அழகுப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். முடியின் நீளத்திற்கு ஏற்ப பல விதமான ஹேர்ஸ்டைல்கள் உள்ளன. அவை அனைத்தையும் படிப்படியாக எளிதில் புரியும் வண்ணம் இதில் கொடுத்துள்ளனர்.

60க்கும் மேற்பட்ட சிகை அலங்காரங்கள் உங்களின் தேவைக்கு ஏற்ப இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மணப்பெண் அலங்காரம், பிறந்தநாள், விடுமுறை, பள்ளிக்கான அலங்காரம், கல்லூரிப் பெண்களுக்கு… பெண்களின் பல தேவைகளுக்கு ஏற்ப இதில் சிகை அலங்காரங்கள் உள்ளன. அதில் உங்களின் தேவைக்கு ஏற்ப நீங்கள் தேர்வு செய்த தலைமுடியினை அழகுப்படுத்திக் கொள்ளலாம். இதற்கான எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. உங்கம் மொபைல் போனில் இந்த ஆப்பினை இலவசமாக டவுன்லோட் செய்தால் போதும், கையடக்கத்தில் பல விதமான ஹேர்ஸ்டைல்களை பெறலாம். அப்புறம் என்ன இனி நீங்கள் சாதாரணமா கோயிலுக்கு சென்றாலும் புதுவிதமான ஹேர்ஸ்டைல் செய்துகொள்ளலாம்.

டிரஸ் கட்டிங் டுடோரியல்ஸ்

ஆள் பாதி ஆடை பாதி என்ற சொல் நிதர்சனமான உண்மை. நன்றாக மேக்கப் போட்டுக் கொண்டு அதற்கு ஏற்ப உடை அணியவில்லை என்றால் பார்க்க நன்றாக இருக்காது. அழகு நிலையத்திற்கு அடுத்த உடையலங்காரம் தான் இப்போது டிரன்டிங்காக உள்ளது. சாதாரண புடவைக்கு மேட்சிங் பிளவுஸ் தைக்க கொடுக்கும் டிசைன்களை பார்த்தால் நமக்கே மலைப்பாக இருக்கும்.

இப்படி எல்லாம் கூட டிசைன் செய்ய முடியுமா என்று எண்ணத் தோன்றும். உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப நீங்களே விரும்பும் உடைகளை தைத்து கொள்வதற்கான டுடோரியல் ஆப் தான் டிரஸ் கட்டிங் டுடோரியல். பிராக் முதல் சல்வார் கமீஸ், அனார்கலி ஸ்டைல் உடைகள் என பலதரப்பட்ட உடைகளை எவ்வாறு தைக்கலாம் என்று இதில் நாம் படிப்படியாக தெரிந்துகொள்ளலாம்.

ஒருவரின் அளவினை எவ்வாறு எடுக்க வேண்டும் என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு எடுத்த அளவிற்கு உடையினை எவ்வாறு கட்டிங் செய்யவேண்டும் என்பதை வீடியோ மூலம் புரியும் படி இதில் உள்ளது. இதற்காக நீங்கள் பிரத்யேகமாக பயிற்சிக்கு எல்லாம் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த ஆப்பில் குறிப்பிட்டு இருப்பது போல் வீட்டில் இருந்த படியே நாம் கற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு உங்களுக்காக மட்டும் இல்லாமல் உங்களின் நண்பர்களுக்கும் சேர்த்து நீங்களே உடைகளை வடிவமைக்கலாம்.

ஸ்கின்கேர் டிப்ஸ்

ஒருவரின் வயதினை அவர்களின் சருமத்தை கொண்டு கண்டறியலாம். சிலர் 60 வயதானாலும் பார்க்க இளமையாக இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்களின் சருமம். சருமத்தில் சுறுக்கம் மற்றும் கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையம் எல்லாமே ஒருவரை மிகவும் வயோதிகமாக எடுத்துக் காட்டும். இதற்கென பல விதமான சரும பராமரிப்புகள் உள்ளன. சில கிரீம்களை இரவு படுக்கும் முன் முகத்தில் தடவி படுக்க வேண்டும். சில கிரீம்கள் கருவளையத்தை போக்க மட்டுமே பயன்படும்.

மார்க்கெட்டில் இதற்கென தனித்தனி கிரீம்கள் இருக்கின்றன. இவை எல்லாம் ரசாயனம் சார்ந்த கிரீம்கள் என்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் இதனை பயன்படுத்தினாலும் எந்த பலனும் கிடைக்காது. இயற்கையோடு ஒன்றி வாழும் போது சருமம் வயதாவதையும் தடுக்க முடியும். இயற்கை மற்றும் ஆயுர்வேத முறையில் சருமம் சார்ந்த கிரீம்கள் மற்றும் அழகுக் குறிப்புகள் குறித்து இந்த ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிராமத்தில் திறமை மறைந்திருக்கு!! (மகளிர் பக்கம்)
Next post வாலிப வயோதிக அன்பர்களே…!! (அவ்வப்போது கிளாமர்)