By 29 August 2019 0 Comments

வைரம் பற்றித் தெரியுமா? (மகளிர் பக்கம்)

* வைரம் என்பது கரிதான் என்றால் சிலர் நம்பமாட்டார்கள். ஆனால் அது கரியேதான். உறுதியான, சுத்தமான, ஒளி ஊடுருவக்கூடிய கார்பன்தான் வைரம் எனப்படும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூமிக்கடியில் அமுங்கி பல்வேறு உயிரியல், ரசாயன மாற்றங்களால் கெட்டியாகிய கரி என்ற கார்பன் தான் வைரம் ஆகிறது.
* வைரத்தின் ஆங்கிலப் பதமான ‘டைமண்ட்’ கிரேக்க வார்த்தையான ‘அடாமஸ்’ என்ற சொல்லிலிருந்து தோன்றியது. இதன் பொருள் ‘வெல்ல முடியாதது’.
* சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வைரத்தின் மதிப்பை அறிந்திருந்ததால் கிரேக்கர், ரோமானியர், இந்தியர் இதனை வெகுவாக மதித்தனர்.
* வைரம் என்பது அன்பு, அழகு, காதல், தெய்வீகம் இவற்றின் குறியீடாக இருந்தது. அதிலும் அரசர்களே இதை உரிமையாக வைத்திருத்தல் என்ற முறை இருந்தது.
* 1868-ல் தென்ஆப்பிரிக்காவிலுள்ள ஆரஞ்சு நதிக்கரையில் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் வைரம் ஒன்றை கண்டெடுத்தான். அந்த இடம்தான் இன்று புகழ்பெற்ற ‘கிம்பர்லி’ சுரங்கமாக விளங்குகிறது. ‘கிம்பர்லி’ என்ற ஆங்கிலேயரின் பெயராலேயே இப்பெயர் பெற்றது.
* வைரம் ‘காரட்’ என்ற அலகில் அளவிடப்படுகிறது. ஒரு காரட் என்பது 200 மி.லி. கிராம்.
* இன்றைக்கு வைர மார்க்கெட்டில் முதலிடம் வகிப்பது ‘தென் ஆப்பிரிக்கா’.
* ஒரு காரட் வைரத்தை பூமியிலிருந்து எடுக்க 250 டன் நிலத்தை நாம் தோண்ட வேண்டும்.
* முதல் தரமான வைரம் நிறமற்றதாக இருக்கும். என்றாலும் ஒவ்வொரு இடத்தில் கிடைக்கும் வைரங்களும் நிறங்களில் சற்று மாறுபாடாக இருக்கும்.
* வைரத்தில் ஒளி ஊடுருவும் தன்மை தெளிவாக இருந்து, ஒளி பிரதிபலிப்பும் சரியாக இருந்தால் மதிப்பு கூடும்.
* பட்டை தீட்டப்படுவதை பொறுத்தே வைரம் மதிப்பு பெறுகிறது. 54 பட்டைகளை சரியான கோணத்தில் தீட்டப்பட்ட வைரமே அதிக மதிப்பு வாய்ந்தது.
* வைரம் எந்த அளவிற்கு நிறமற்று உள்ளதோ அந்த அளவிற்கு தரம் உயர்ந்ததாக கருதப்படுகிறது.
* வைரம் பல்வேறு வடிவங்களில் பட்டை தீட்டப்படுகிறது. பட்டை தீட்டினால் தான் அது வைரக்கல்.
* பிரபலமான வடிவம் வட்டம். மேலும் ஓவல் வடிவம், இருபுறமும் கூர்மையாக காணப்படும் மார்க்யூஸ் வடிவம், இதய வடிவம், செவ்வக வடிவம், பியர் வடிவம், சதுர வடிவம் என பல்வேறு வடிவங்களில் பட்டை தீட்டப்படுகிறது.
* பட்டை தீட்டும் விதங்கள் – பாயின்ட் கட், டேபிள் கட், தின் கட், மஜரின் கட் என பல்வேறு விதங்களில் உள்ளன.
* வெறும் வைரத்தை எளிதாக எடை போடலாம். ஆனால் நகைகளாக மாறிய பின்பு எடையிட தனிப்பட்ட எடைக் கருவியும், விதிமுறைகளும் உண்டு.
* வைரத்தில் வேறு எந்த உலோகமும் சிராய்ப்பு ஏற்படுத்த முடியாது. வைரத்தை வைரம் மட்டுமே அறுக்கும்.
* வைரங்களில் மஞ்சள், நீலம், பிரவுன் போன்ற கற்களும் கிடைக்கும்.
* நிறம் மங்கிய கற்களை வாங்கக்கூடாது.
* வைரங்கள் பல்வேறு நிறங்களில் பளிச்சிட அவற்றில் அடங்கி உள்ள ரசாயனப் பொருட்களே காரணமாக அமைகின்றன.
* நைட்ரஜன் அதிகமாக இருந்தால் வைரம் மஞ்சள் நிறத்திலும், போரான் அதிகமாக இருந்தால் நீல நிறத்திலும் ஜொலிக்கும்.
* வைரம் மின்னணு சாதன தயாரிப்புத் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.
* வைரத்தின் பொடி உயிரை மாய்த்து விடும் தன்மை கொண்டது..
* வைரங்களின் மதிப்பையும், விலையையும் நிர்ணயிக்கும் மைய விற்பனைக் கழகம் லண்டனில் உள்ளது.
* இந்த மைய விற்பனைக் கழகம் சி.எஸ்.ஓ (சென்ட்ரல் செல்லிங் ஆர்கனைசேஷன்) பெயர் மாற்றப்பட்டு டைமண்ட் ட்ரேடிங் கோ (டிடிசி) என்று அழைக்கப்படுகிறது. தோண்டி எடுக்கப்படும் வைரங்களை அதன் தன்மை, தூய்மை, நிறம், எடைக்கேற்ப பிரித்து இக்கழகம் வாங்கிக் கொள்கிறது. 1930ல் இக்கழகம் உருவாக்கப்பட்டது.
* உலக வைர உற்பத்தியில் மூன்றிலொரு பங்கு ஆஸ்திரேலியாவிலுள்ள ‘அர்ஜைல்’ சுரங்கத்திலிருந்து கிடைக்கிறது.
* ஆண்டுதோறும் உலகில் சுமார் 20 டன் வைரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
* மிக உயர்ரக வைரக்கற்கள் போட்ஸ்வானா நாட்டிலிருந்து கிடைக்கின்றன.
* வைரங்களை பாலிஷ் செய்வதில் இந்தியா முன்னணியாக விளங்குகிறது.
* இந்தியாவில் எடுக்கப்பட்ட 186 காரட் ‘கோகினூர்’ வைரம் உலகப் பிரசித்திப் பெற்றது. கோகினூர் என்றால் ‘பிரகாசிக்கும் மலை’ என்று பொருள்.Post a Comment

Protected by WP Anti Spam