நாயுருவின் நற்பலன்கள் இதோ! (மருத்துவம்)

Read Time:1 Minute, 22 Second

நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக் கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி நாயுருவி பற்பொடியும் தயாரித்துக் கொள்ளலாம். நாயுருவிச் செடியால் பல் துலக்க முக வசீகரம் பெறும்.

நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது.

நாயுருவி இலைகளில் அதி காலையில் நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல், பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர, தேமல் என்பன குணமாகும்.

நாயுருவி இலையைக் கசக்கித் தேள் கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும். இதன் இலையை 10 கிராம் எடுத்து அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து, 2 வேளையாக 10 நாள்கள் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘இவர்களை நினைச்சா இரத்தம் கொதிக்குது’ (கட்டுரை)
Next post ‘டொய்லெட் சீட்’ஐ எவ்வாறு பயன்படுத்துவது !! (மருத்துவம்)