துக்கத்தை மறைத்துக்கொண்டு சிரிப்பது எப்படி? (மருத்துவம்)

Read Time:6 Minute, 33 Second

எங்களுடைய மனங்களுக்குத் தோன்றும் துக்கம், சந்தோஷம், பொறாமை, குரோதம், ஏக்கம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும், எங்களை அறியாமலேயே தோன்றுகின்றன. அதனாலேயே, இந்த உணர்வுகளால் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. துக்கம் என்பதும் இவ்வகையான உணர்வுகளில் ஒன்றாகினும், அதனால் ஏற்படக்கூடிய மன ரீதியான தாக்கம் அதிகமாகும்.

இவ்வாறான துக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் பல உள்ளன. பிடித்தமானவர்களின் விலகிச் செல்லல், மரணித்தல், விபத்தொன்றால் பாரியளவு பாதிக்கப்படுதல், விவாகரத்து உள்ளிட்ட பல விடயங்கள், இந்தத் துக்கத்துக்குக் காரணமாகலாம். இந்தத் துக்கமே, பின்னொரு காலத்தில் மனநோயாகவும் மாறுகிறது. இருப்பினும், அதுபற்றி பெரும்பாலானவர்கள் சிந்திப்பதில்லை.

மன வேதனையால் மன நோய் எவ்வாறு ஏற்படுகின்றது, அதை எவ்வாறு அறிந்துகொள்வது, இதற்கு சிகிச்சை எடுப்பதால் தவிர்த்துக்கொள்ள முடியுமா போன்ற விடயங்களையே இந்தக் கட்டுரை வலியுறுத்துகின்றது.

தாங்கிக்கொள்ள முடியாதளவு துக்கம் ஏற்படும் போது, அது, உடல் மற்றும் உள ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றது. உடல், உள ரீதியான உளைச்சலானது, ஒருவர் அறியாமலேயே அவருக்கு ஏற்படுகின்றதென, ஜோன் பொவ்லி என்ற மனநோய் நிபுணர், தனது ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளார். இதற்குக் காரணம், அந்தத் துக்கத்துக்கான காரணத்தை அவரால் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், அந்தத் தருணத்திலும் தொடர்ந்து சில நாள்களுக்கோ அல்லது காலத்துக்கோ ஏற்றுக்கொள்வதற்கும் இல்லாதிருப்பதே ஆகும்.

இந்த மனநிலை உச்சமடையும் போது, அழுகையை ஏற்படுத்தும். அல்லது, கோபத்தை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில், அந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமற்போகும். அதனால், வீட்டிலுள்ள பொருள்கள், உபகரணங்களைத் தூக்கி நிலத்தில் அடிக்கத்தோன்றும். தூக்கம் இல்லாமல் போகும். தானே இந்தப் பிரச்சினைக்கு காரணகர்த்தா என்று எண்ணத் தோன்றும். முன்னர் இருந்ததைப் போல் இருக்க முடியாமல் போகும். இது, வீட்டு வேலைகளிலும் அலுவலகப் பணிகளிலும் தாக்கத்தைச் செலுத்தும். அனைத்தையும் மறந்துவிடத் தோன்றினாலும், மீண்டும் மீண்டும் அதே பிரச்சினைதான் மனதில் தோன்றும்.

இவ்வாறு அதிக வேதனையில் இருப்பவர்களுக்கு அளிக்கக்கூடிய ஒரே சிகிச்சை, அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதேயாகும். அதுவே, மனதுக்கு சிறிதளவேனும் நிம்மதியை ஏற்படுத்தும். சிலவேளைகளில், இவ்வாறான மனநிலை மாறுவதற்கு, அதிகபட்சம் 6 மாதங்களேனும் ஆகும். அதற்குக் காரணம், உங்களை அறியாமலேயே உங்களுடைய மனம், மாற்றத்தை விரும்புவதால் ஏற்படுவதாகும்.

எவ்வாறாயினும், துக்கம் என்பது, ஒரு மனநோய் அல்ல. அதிகபட்ச மன வேதனையால் ஏற்படக்கூடிய மன எதிர்வினையாகும். அதனால், துக்கத்துக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு, உரிய வகையில் உறுதுணையாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாவிடின், அவர்கள் மனநோயாளிகளாக மாறக்கூடும்.

அவ்வாறு அதிக துக்கத்தில் இருப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமாயின், முதலில் அந்தத் துக்கத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுடைய உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிவதை அவர்களுக்கு விளக்குங்கள்.

மரணத்தால் ஏற்பட்ட துக்கமாயின், மரணித்தவரின் புகைப்படத்தை, இழப்பைச் சந்தித்தவர் எந்நேரமும் காணும் வகையில் தொங்கவிடுங்கள். உயிரிழந்தவரின் நல்ல குணாதிசயங்கள், பழக்கவழக்கங்கள் பற்றி, பாதிக்கப்பட்டவர் முன்னால், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து பேசுங்கள்.

துக்கத்தில் இருப்பவரைப் பார்த்து, துக்கப்பட வேண்டாமென்ற ஆலோசனையை, ஒருபோதும் வழங்காதீர்கள். துக்கத்தில் உள்ளவர் 10 வசனங்களைப் பேசினால், நீங்கள் இரண்டே இரண்டு வசனங்களை மாத்திரம் பேசுங்கள். அது, அவர்களை ஆறுதல் படுத்தும் வசங்களாகப் பார்த்து, நிதானித்துப் பேசுங்கள். துக்கத்தில் அழுதால், அழவிடுங்கள். அழுவதைத் தடுக்க வேண்டாம். அவர்கள் துக்கத்தின் போது கோபப்பட்டால், நீங்கள் பதற்றப்பட வேண்டாம். கோபப்படுவது சாதாரணமென்று அவர்களுக்குப் புரிய வையுங்கள்.

துக்கத்தில் உள்ளவர்களின் குடும்ப நிலை பற்றி எப்போதும் அவதானியுங்கள். அதற்கேற்ற உதவிகளை, உங்களால் முடிந்தளவுக்குச் செய்யுங்கள். உயிரைப் போக்கிக்கொள்ளும் அளவுக்கு அவர்களுடைய துக்கம் அத்துமீறினால், மனநோய் வைத்தியரொருவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

மனநோய் வைத்திய நிபுணர்
என்.குமாரநாயக்க

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலையில் சோறு போட்டு…!! (மருத்துவம்)
Next post சந்திரயான் -2 நிலவில் இறங்கும் இடம் எப்படிப்பட்டது? (வீடியோ)