வைத்தியரின் வீட்டில் கிடைத்த 2246 கருக்கள்!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 18 Second

அமெரிக்காவின் இலினோய் மாகாணத்தில் முன்னாள் கருக்கலைப்பு வைத்தயர் ஒருவரின் வீட்டில் 2000 க்கும் மேற்பட்ட இறந்த கருக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3 ஆம் திகதி அவர் இறந்த பின்பு, வைத்தியர் அல்ரிச் க்லொஃபெர் குடும்பத்தினர் அவர் சொத்துகளைப் பிரிக்கும்போது இதை கண்டறிந்துள்ளனர்.

மொத்தம் 2,246 கருக்களை அந்த வீட்டில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.

வைத்தயர் க்லொஃபெருடைய வைத்தியசாலை இந்தியானா மாகாணத்தில் சௌத் பெண்ட் எனும் இடத்தில் இருந்தது. 2016 இல் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

ஒரு 13 வயது சிறுமிக்கு அதிகாரிகளிடம் கூறாமல் கருக்கலைப்பு செய்துவிட்டார் என அவர் மேல் அப்போது குற்றம் சுமத்துப்பட்டது.

அவர் கருக்கலைப்பு நடந்த போது அங்கு அதிகாரிகள் இருந்ததை உறுதிப்படுத்த தவறினார் என கூறப்படுகிறது.

எலும்பு மற்றும் தசை நிபுணராக இருந்த அவர் தன் 43 வருடங்களில் கருகலைப்பு செய்யும் போது ஒரு நோயாளியைக்கூட இழந்ததில்லை என அவரது அறிக்கை தெரிவிக்கிறது.

“பெண்களே கருத்தரிக்கின்றனர். ஆண்கள் இல்லை. எனவே, அவர்கள் தங்கள் வாழ்கைக்கு எது சிறந்தது என நினைக்கிறார்களோ அதை நாம் மதிக்க வேண்டும். நான் இங்கு யாரையும் அதிகாரம் செய்வதற்கு இல்லை யாரையும் மதிப்பிடுவதற்காகவும் இல்லை,” என அவர் விசாரணையின் போது கூறியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.

இந்த கருக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..! (வீடியோ)
Next post கரீனாவின் ஃபிட்னெஸ் ரகசியம்!! (மகளிர் பக்கம்)