By 26 September 2019 0 Comments

MEDICAL TRENDS!! (மருத்துவம்)

தியானம் பழகு!

ஒரு நாளைக்கு குறிப்பிட்ட சில நிமிடங்கள் வரை தியானம் செய்வது உடல் ரீதியான நோய்கள், மனதை அமைதியாக்குதல், மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்றவற்றை சுலபமாக்குகிறது. தியானமானது ஒரு ஆழமான சுய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

வைட்டமின் சி

மிக முக்கியமான வைட்டமின் சி உங்கள் உடல் பல்வேறு வழிகளில் சரியாக செயல்பட உதவுகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது, புற்றுநோய், இதயநோய், நீரிழிவுநோய் மற்றும் சுவாசநோய் போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் இது சருமத்தை ஆரோக்கியமாகவும், சுருக்கங்களின்றி வைத்திருக்கவும் உதவுகிறது.

நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள்

நம் உடல் ஆரோக்கியத்திற்கு நமது குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்கிறது அறிவியல். நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் புளிக்கச் செய்து ஈஸ்ட் உருவாகிய உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகிறது. Yoghurt, Kefir, Sauerkraut போன்ற புளிக்கச் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.

காதல்

நீங்கள் நேசிக்கும் உங்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் உள்ள விஷயங்கள் மற்றும் அலங்காரங்கள் நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கும், உங்கள் ஆன்மாவோடு பேசுவதற்கும் உதவுகிறது.

தூங்கும் நேரம்

ஒரு திடமான, வழக்கமான படுக்கை நேரமானது உங்கள் செயல்பாடுகளை மாற்றி அமைக்கக்கூடியதாக இருக்கிறது. உங்களுடைய உடலானது சூரிய உதயம், சூரிய மறைவு போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கேற்ப உங்களுடைய தினசரி வேலைகள் மற்றும் தூக்கம் போன்றவற்றை அமைத்திருந்தால், ஒரு நாள் பொழுதை எப்போது தொடங்கி, எப்போது முடிக்க வேண்டும் என்பதை உங்கள் உடலே அறிந்துகொண்டு அதன்படி செயல்படும்.

நடைப்பயிற்சி

நடைப் பயிற்சியால் நாம் பல்வேறு பலன்களைப் பெறலாம். உங்கள் மூளையானது நல்ல உணர்வுக்கான ஹார்மோன்களை சுரப்பதற்கு குறைந்தபட்சம் 10 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்வது போதுமானது.

வாசிப்பு பழக்கம்
உங்களுக்கு வயதாகும்போது மனம் தடுமாறத் தொடங்கி நினைவுகள் மங்கத் தொடங்குகின்றன. தாமதத்தை சரி செய்யவோ அல்லது அதை தலைகீழாக மாற்றுவதற்கோ உதவும் வழிகளில் ஒன்றாக இருக்கிறது வாசிப்பு பழக்கம். அது மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதற்கு உதவுகிற ஒரு எளிதான மற்றும் சுவாரஷ்யமான வழியாக இருக்கிறது.

மஞ்சள்

துடிப்பான இந்த வண்ணமயமான மசாலா பொருளானது இஞ்சியைப் போன்றே வேரிலிருந்து கிடைக்கக்கூடியதாக உள்ளது. இதன் பல்வேறு மருத்துவ சிறப்புகளால் தனி ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது. வீக்கம், மன அழுத்தம், மூட்டுவாதம் மற்றும் நீரிழிவு பிரச்னைகளை சரிசெய்ய உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்து செயல்படும் திறனுடையது மஞ்சள் என்பதும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சாப்பிடுவதில் கவனம்

உங்கள் வயிறு நிறைந்திருப்பதாக மூளை பதிவு செய்ய சுமார் 15 நிமிடங்கள் ஆகிறது. உங்கள் மூளை மற்ற பணிகளில் மும்முரமாக இருந்தால், இந்த செய்தி மூளையில் பதிவு செய்யப்படாமல் போகலாம். இதனால் நீங்கள் எப்போதும் பசியுடனேயே இருப்பதோடு, ஒருபோதும் சாப்பிட்ட திருப்தியை அடைய மாட்டீர்கள். இது அதிகப்படியான உணவு எடுத்துக்கொள்வதற்கும், ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்வதற்கும் காரணமாகிறது.

சுவாசமே….

தியானத்திலிருந்து வேறுபட்டது என்றாலும் அதற்கு இணையான ஒன்றுதான் சுவாசத்தில் கவனம் செலுத்துதல். இது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைக் காட்டிலும் எல்லா நேரங்களிலும் உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துவதைப் பற்றியது. மக்கள் தங்கள் நுரையீரலின் மேல் பாதியைப் பயன்படுத்தி மட்டுமே சுவாசிப்பது மிகவும் பொதுவானது.

ஆனால் அரிதாக எப்போதாவது ஆழமான, முழு சுவாசத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் உதரவிதானத்தை முழுமையாக விரிவடையச் செய்யலாம். நாம் சரியாக சுவாசிக்கவில்லை என்றால் அதிகமான அளவு ஆக்சிஜனைப் பெற முடியாது என்பதோடு தேவையற்ற கார்பன்டை ஆக்சைடை வெறியேற்றவும் முடியாது.

குளிர்சிகிச்சை

திரவ நைட்ரஜன் மூலம் அதிக குளிரை உருவாக்கி அளிக்கப்படும் சிகிச்சை குளிர்சிகிச்சை (Cryotherapy) என்று சொல்லப்படுகிறது. இந்த சிகிச்சை வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு பிரச்னைகளைக் குறைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழக்கமான உடற்பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது நுரையீரல் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. உடலில் உள்ள மிக முக்கியமான இந்த இரண்டு உறுப்புகளையும் நல்ல முறையில் வைத்திருக்க விரும்பினால் இதய ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளுக்கு ஒவ்வொருநாளும் சராசரியாக 30 நிமிடங்கள் ஒதுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

மரம் நடுங்கள்

இயற்கைச் சூழலில் நடைப்பயிற்சி செய்வது மன அமைதியைத் தரும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அடர்த்தியாக மரங்கள் இருக்கும் சூழல் மன இறுக்கத்தை மேலும் குறைக்கும் என்கிறது ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் Environment and Behavior இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை.

மேலும், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரம் பற்றிய சர்வதேச பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இயற்கை மிகுந்த உருவங்களை வெறுமனே படங்களாக பார்த்தாலே, மன அழுத்தம் குறைவதை உடலியல் குறிப்புகள் (Physiological markers) வெளியிடுவதாக தெரிவிக்கிறது.

நம் வீட்டைச்சுற்றி எவ்வளவு மரங்கள் வளர்க்கிறோமோ, அந்த அளவிற்கு உடலுக்கும் சரி, மனதுக்கும் சரி ஆரோக்கியம் என்பதை
சொல்லியிருக்கிறது இந்த ஆய்வு.

நட்ஸ்

கொட்டை வகை உணவுப் பொருள்கள் பல்வேறு நன்மைகளைப் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்தனியான ஆரோக்கிய பலன்களுக்
குரிய பட்டியலைப் பெற்றிருக்கிறது. அவை மன அழுத்தத்தைத் தணிக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகின்றன. இவை புரதம் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களைப் பெற்றுள்ளதோடு, இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.

மன அழுத்த மேலாண்மை

மன அழுத்தம் ஏற்பட ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு காரணி இருக்கும். மேலும் பலருக்கு இதற்கான காரணிகள் அதிகமாகவும் இருக்கும். ஆனாலும் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதோடு மனதையும், உடலையும் மீட்டெடுக்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் உங்கள் வாழ்நாளில் நம்பமுடியாத முடிவுகளைப் பெற முடியும்.

மாதுளை

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் போன்றவற்றைப் பெற்றுள்ளதால் இந்தப் பழம் சிறப்பான உணவுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது உயர் ரத்த அழுத்தம், சில புற்றுநோய்கள், இதயநோய் மற்றும் வீக்கம் போன்ற பிரச்னைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

வெள்ளைப் பொருள் வேண்டாம்

சமீபத்திய லான்சட் பத்திரிகையில் வெளியான ஆய்வறிக்கையின்படி, இந்தியர்களுக்கு 50 சதவீதம் இதயநோய் அதிகரித்திருக்கிறதாம். இதற்குக் காரணம் உணவுப் பழக்கமே. இயல்பாகவே இந்தியர்கள் உப்பு, சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்க்கிறார்கள். இவர்களின் இந்த உணவுப்பழக்கம் மட்டும் அல்லாது புதிதாக காற்று மாசுபாடும் இந்தியர்களின் இதயநோயைத் தூண்டுவதற்கான கூடுதல் காரணியாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

நம்பிக்கை

நம்பிக்கை உடையவர்களை பார்க்கும்போதே உங்களுக்கு தெரியும். நம்பிக்கை உடையவர்கள் பெரும்பாலும் நன்றாக உடையணிந்து, சிறந்த தோரணையுடன், உயரமாக நடந்துகொள்வதோடு, நம்பிக்கையான ஒரு மனநிலையைக் கொண்டிருப்பார்கள். நம்பிக்கையுள்ளவர்கள் மகிழ்ச்சியாகவும், குறைவான அழுத்தத்துடனும், அதிக வெற்றிகரமாகவும் உள்ளனர். தினசரி சிறிய இலக்குகளை நீங்களே அமைத்துக்கொண்டு அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளலாம்.Post a Comment

Protected by WP Anti Spam