By 3 October 2019 0 Comments

ராட்சசி ராக்ஸ்டார்! (மகளிர் பக்கம்)

‘ராட்சசி’ படத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ‘கதிர்’ ஆக கலக்கிய சுட்டிப் பையன் கமலேஷ். நடிப்பில் மட்டுமல்ல, திரைப்பாடல்களை அவர்களின் மாடுலேஷனிலேயே பாடுவதிலும் வல்லவனாக திகழ்கிறார். கமல், ரஜினி, அஜித், விஜய், தனுஷ் என டாப் ஹீரோக்களின் பாடல்கள், டயலாக்குகள் அத்தனையையும் இந்த சுட்டிக்கு அத்துப்படி. தெளிவான வரிகளை பிழையில்லாமல் உச்சரிக்கும் இந்த குட்டி ராக்ஸ்டாரை சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் சந்தித்தோம்.

இன்னிசை மேல் ஆர்வம் ஏற்பட காரணம்?

எல்லாமே அப்பாவை பார்த்து வந்ததுதான். அப்பாவும் மேடை கச்சேரி பாடகர். இன்னிசை நிகழ்ச்சியில் மட்டும் இல்லாமல் சினிமாவிலும் பாடல்களை பாடி இருக்கார். கோயில் திருவிழா நிகழ்ச்சிகளில் மேடை பாடகராக பாடி வருகிறார் என பணிவு காட்டும் கமலேஷிற்கு ராக்
ஸ்டார் என்ற பட்டமும் உண்டு.

ராக்ஸ்டார் பட்டப்பெயர் யார் கொடுத்தாங்க?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சரிகமப’ இசை நிகழ்ச்சியில் தான் எனக்கு ராக் ஸ்டார் பட்டம் கொடுத்தாங்க. நயன்தாரா, அனிருத், கார்த்திக், விஜயபிரகாஷ், சீனிவாசன், சுஜாதா, வைரமுத்து எல்லாரும் சேர்ந்து தான் பட்டம்
கொடுத்தாங்க.

உங்கள் ஃபேமிலி பற்றி சொல்லுங்கள்?

சென்னை, மூலக்கொத்தளத்தில் வசிக்கிறோம். மின்ட்டில் உள்ள லிட்டில் ரோஸ் கான்வென்டில் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன். அப்பா ஜெகன். அம்மா பிருந்தா. அக்கா ஹன்சிகா. எனக்கு கிரிக்கெட், ஃபுட்பால் விளையாட்டுகள் விளையாட பிடிக்கும். அப்பா பாட்டுக் கச்சேரிக்கு போகும் போதெல்லாம் என்னையும் கூட்டிட்டு போவார். அவர் பாட்டுக் கச்சேரியில் பாடும் போது, எப்படி பாடுறார்ன்னு உன்னிப்பா கவனிப்பேன். அதை நானும் பிராக்டீஸ் செய்து பார்ப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக புரிஞ்சிகிட்டு அவரைப் போல பாடத் தொடங்கினேன்.

அது தான் டி.வி நிகழ்ச்சியில் மூணு வயசுல பாட ஊக்கம் அளித்தது. இப்ப ஆறாண்டுகளாக பாடி வருகிறேன். ஸ்கூல் போக ஃபிரீ டைமில், ‘சரிகமப’ போட்டியில் கலந்து கொண்டு நிறைய கானா பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. எல்லாரும் ராக்ஸ்டார்னு தான் கூப்பிடறாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

ராட்சசி பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?

சின்ன வயதிலிருந்தே நான் பாடிய கானாபாடல்களை அப்படியே டேப் செய்து, யூடியூபில் அப்பா பதிவு செய்து வைப்பார். அதை பார்த்து தான் எனக்கு மற்ற நிகழ்ச்சிக்கான வாய்ப்பு வரும். ராட்சசி பட வாய்ப்பும் அப்படித்தான் கிடைச்சது. வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் என் போட்டோவை டைரக்டர் கெளதம்ராஜ் சார் பார்த்துவிட்டு உடனே வரச்சொன்னார். நானும் அவரை சந்திக்க போனேன். டைரக்டர் ஃப்ரெண்ட்லியா ஜாலியாக பழகினாரு. படத்தில் மேக்கப் இல்லாம நடிக்கணும்ன்னு சொன்னார். இரண்டாம் வகுப்பு மாணவன் எப்படி இருப்பானோ அப்படி இருக்கணும்னு சொல்லி நடிக்க பயிற்சி கொடுத்தார்.

ஜோதிகா மேடம் என்னை ராக்ஸ்டார்னு தான் கூப்பிடுவாங்க. என் நடிப்பை பார்த்து பாராட்டவும் செய்தாங்க. ஒரு முறை ஷூட்டிங்கிற்கு நடிகர் சூர்யா சார் வந்திருந்தாங்க. என்னை பாட்டுப் பாடச் சொன்னவர், கூட சேர்ந்து பாடினாங்க. ெராம்ப ஜாலியா இருந்தது.

உங்களுக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?

நிறைய பேரை பிடிக்கும். ரொம்பப் பிடிச்சது ரஜினி சார் மட்டும் தான். அவர் நடிச்ச காலா படத்தில் பேசின வசனம் எப்பவும் என் மெமரில இருக்கும். ரஜினி சாருக்கு அடுத்து ஜோதிகா மேடம் தான்.Post a Comment

Protected by WP Anti Spam