இன்று `மிஸ்வேர்ல்டு’ போட்டி: இந்திய அழகி நடாஷா பட்டம் வெல்வாரா?

Read Time:2 Minute, 23 Second

world.Beauty1.jpgஉலக அழகி போட்டி போலந்து நாட்டின் வார்சா நகரில் இன்று நடக்கிறது. இந்திய அழகி நடாஷா வுக்கு இணைய தளம் மூலம் நடந்த கருக்கணிப்பில் அதிக ஓட்டுக்கள் கிடைத்துள் ளது. 56-வது உலக அழகிப் போட்டி (மிஸ் வேர்ல்டு) போலந்து நாட்டின் வார்சா நகரில் இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இந்திய அழகி நடாஷா சூரி உள்பட 104 அழகிகள் வார்சா சென்றனர்.

ஆடை அலங்கார போட்டி, கடற்கரை அழகி, நீச்சல் உடை, அறிவுத்திறன் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆரம்ப கட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் வெனிசுலா, இந்திய நாடுகளை சேர்ந்த அழகி களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன.

உலக அழகி பட்டத்தை வெல்வது யார்ப என்று இந்தி யாவில் உள்ள ஒரு ஆங்கில பத்திரிகை சார்பில் இணைய தளம் மூலம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. செப்டம்பர் 18 முதல் 28 வரை இந்த ஓட் டெடுப்பு நடத்தப்பட்டது. 4083 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஓட்டெடுப்பில் இந்திய அழகி நடாஷாவுக்கு 2322 ஓட்டுகள் கிடைத்தன.

மலேஷிய அழகிக்கு 512 ஓட்டுகளுடன் 2-வது இடம் கிடைத்தது. ஆஸ்ரேலிய அழகிக்கு 231 ஓட்டுக்களுடன் 3-வது இடம் கிடைத்தது. பிரான்சு அழகி 137 ஓட்டு களுடன் 4-வது இடத் தையும் 114 ஓட்டுகளுடன் ஹங்கேரி அழகி 5-வது இடத்தையும் பிடித்தனர். அமெரிக்கா, டென் மார்க், இந்தோனேஷியா, மாசி டோனா, ஜாம்பியா அழகி களுக்கு தலாஒரு ஓட்டு கிடைத் தது.

இன்னொரு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் வெனிசுலா-இந்திய அழகிக்கு இடையே இழுபறி நிலை ஏற்பட்டது. உலக அழகி தேர்தலில் பொதுமக்களின் கருத்துக்களை யும் நீதிபதிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளும் புதிய முறை இப்போது கடைபிடிக் கப்படுகிறது.

world.Beauty1.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ராணுவம் – புலிகள் மோதலில் 15 பேர் பலி
Next post போலி பாஸ்போர்ட் மோசடி வழக்கில் மோனிகாவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை