தமன்னாவின் திடீர் முடிவு !! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 38 Second

இந்தியில் தமன்னா நடிப்பில் வெளியான படம் ´காமோஷி´. இந்தப் படம் படுதோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தமிழில் ´பெட்ரோமாக்ஸ்´, ´ஆக்‌ஷன்´, தெலுங்கில் ´சைரா நரசிம்மா ரெட்டி´ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, புதிதாக நடிக்கவுள்ள படங்களுக்காகக் கதைகளைக் கேட்டு வருகிறார்.

இதில் தமன்னாவிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகவுள்ளன. ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தைத் தொடர்ந்து, நாயகியை மையமாகக் கொண்ட இரண்டு, மூன்று கதைகளை தமன்னா கேட்டிருக்கிறார். கதை பிடித்திருந்தால் கணிசமாகத் தனது சம்பளத்தைக் குறைக்கவும் அவர் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

முக்கியத்துவம் இல்லாத காட்சிகள் கொண்ட கதைகள் என்றால், அது பெரிய நாயகர்கள் நடிக்கும் படமாக இருந்தாலும் ஆர்வம் செலுத்த வேண்டாம் என்ற முடிவிலும் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ´பெட்ரோமாக்ஸ்´ படம் தீபாவளி வெளியீடாகவும், ´ஆக்‌ஷன்´ படம் நவம்பர் வெளியீடாகவும் திரைக்கு வரவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுமக்கள் அறியாத 5 விமான ரகசியங்கள்!! (வீடியோ)
Next post நிலநடுக்கத்தினால் 30 பேர் பலி!! (உலக செய்தி)