மனம்தான் நோய் … மனம்தான் மருந்து!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 59 Second

Centre Spread Special

மலர்களைப் பிடிக்காதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? அதிலும் ரோஜாவின் அழகிலும், நிறத்திலும், நறுமணத்திலும் மனதைப் பறிகொடுக்காதவர்கள் யார் இருக்கிறார்கள். ஆனால், விதிவிலக்குகளும்தானே இருக்கிறது மருத்துவ உலகில்…

அரிதாக சுவாசம் மற்றும் சருமம் தொடர்பான அலர்ஜிகள் சிலருக்கு மலர்கள் காரணமாக வருவதுண்டு. இதனை Immunoglobulin E என்கிறார்கள். அலர்ஜியான சூழலில் இந்த ஆன்டிபாடிகள் செல்களுக்குள் பயணித்து குறிப்பிட்ட வேதிப்பொருட்களை வெளியிடுகின்றன. இந்த அரிதான பிரச்னை லண்டனைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணுக்கு ஏற்பட்டிருந்தது.

ஒரு ரோஜா பூவை அருகில் கொண்டு சென்றாலே அந்த பெண்ணுக்கு கண்ணீர் வந்துவிடும். தும்மல், வாந்தி உணர்வு என்று ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் ரோஜா மலர்களே அருகில் வராதபடி பார்த்துக் கொள்வார்.ஒரு நாள் அலுவலக வேலை தொடர்பாக ஒரு மீட்டிங்குக்கு சென்றிருந்தார் அந்தப் பெண். குளிரூட்டப்பட்ட சிறிய அறை அது. அறைக்குள் நுழைந்தவுடன் ஒரே அதிர்ச்சி.

டேபிளின் மையமாக நிறைய ரோஜா மலர்களை அலங்காரத்துக்காக வைத்திருந்தார்கள். ‘இத்தனை மலர்கள் மத்தியில் எப்படி மீட்டிங்கில் பங்கு கொள்ளப் போகிறோம். மற்றவர்களிடம் சொல்லியும் விளக்க முடியாதே’ என்று குழம்பியபோதே தொடர்ச்சியாகத் தும்மல் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது. கண்களில் இருந்தும் நீர் வந்தது.

அந்த நேரத்தில் ஏற்கெனவே அந்த அறையில் இருந்த ஒருவர் எழுந்து வெளியில் சென்றார். அவர் சொன்னார்.‘இந்த பூக்களை… பாருங்கள் நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன’ என்று கூறிக்கொண்டே சென்றார். அப்போதுதான் அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தது, அவை உண்மையான மலர்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள். இதுதான் நமது மனம்.

மனதால் நோய்களை உருவாக்கவும் முடியும்; அதனை குணப்படுத்தவும் முடியும். நமது எண்ணங்கள் உடலியல் செயல்பாடுகளின்மீது எத்தகைய தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதன் அடிப்படையை பல ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. பல மெடிக்கல் மிராக்கிள் சம்பவங்களும் நோயாளிகளின் மன உறுதியைப் பொறுத்தே நிகழ்ந்துள்ளது.

மருத்துவ உலகில் இதை Placebo effect என்று குறிப்பிடுகிறார்கள். பல மருந்துகள் இந்த கருத்தின்படி செயல்படுவதால் அதனை போலி சிகிச்சை என்றும் குறிப்பிடுகிறார்கள். ‘இந்த மருந்தில் நம் உடல்நலனைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது’ என்று நோயாளியை நம்ப வைப்பதுதான் போலி சிகிச்சையின் நோக்கமே. உண்மையில் அத்தகைய சக்தி அந்த மருந்துக்கு இருக்காது. எனவே, முதலில் மனதால் நோய்களை குணப்படுத்துங்கள். மனதால்ஆரோக்கியமாக இருங்கள்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இது ரொம்பவும் ஓவர் !! (கட்டுரை)
Next post எட்டு வழியில் இன்பம் எட்டலாம்! (அவ்வப்போது கிளாமர்)