வந்தாச்சு… மாத்திரை? (மருத்துவம்)

Read Time:2 Minute, 45 Second

விநோதம்

சமீபத்தில் Anti Whats App என்ற புதுவகை மாத்திரை பற்றிய தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியதுடன், ஆர்வத்தையும் தூண்டியது. மாத்திரை உறையின் மேல் ஆண்களுக்கு – 1, பெண்களுக்கு – 3 என்றும் அச்சடிக்கப்பட்டு இருந்தது. நோய்த்தொற்றுக்கு எப்படி ஆன்ட்டிபயாடிக் மாத்திரை இருக்கிறதோ அதேபோல வாட்ஸ் அப் அடிக்‌ஷனிலிருந்து மீள இந்த மாத்திரை என்ற தகவலும் அதனுடன் பரவியது. பலர் இது எங்கு கிடைக்கும் என்றும் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

மருத்துவ வட்டாரத்தில் விசாரித்த பிறகே ஓர் உண்மை தெளிவானது. அப்படி ஒரு மாத்திரை எதுவும் தயாராகவே இல்லை. சினிமா நடிகர்களின் ரசிகர்கள் தங்களுடைய அபிமான நடிகரின் படத்தை Fan made poster என்று வெளியிடுவார்கள். அதுபோன்ற யாரோ ஒரு குறும்புக்கார இணையதள ஆசாமிதான் இப்படி ஒரு மாத்திரை இருப்பதுபோல் வடிவமைத்து வைரலாக்கி இருக்கிறார்.

ஏற்கனவே Anti Selfie Tablet வெளிநாடுகளில் கிடைக்கிறது. இணையதளங்களில் ஆர்டர் செய்தும் வாங்கலாம். அது உண்மைதான். பல் தேய்ப்பதிலிருந்து பாத்ரூம் போவது வரை எல்லாவற்றையும் செல்ஃபி எடுத்துக் கொண்டே சிலர் இருப்பார்கள். ஆன்டி செல்ஃபி மாத்திரை எடுத்துக் கொள்ளும்போது செல்ஃபி எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தடுக்கும் என்றும் கூறுகிறார்கள்.

அதுபோல் எதிர்காலத்தில் நிஜமாகவே ஆன்டி வாட்ஸ் அப் மாத்திரை வந்தாலும் ஆச்சரியம் இல்லைதான். ஏனெனில் ஸ்மார்ட் போன் உபயோகத்தால் கழுத்தெலும்பு தேய்மானம், கட்டைவிரல் தேய்மானம் என மருத்துவர்கள் எச்சரித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதன் அடுத்த கட்டமாக அடிக்‌ஷனுக்கான மாத்திரை தேவையும் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஆன்டி ட்விட்டர் டேப்லட், ஆன்டி ஃபேஸ்புக் டேப்லட் எல்லாம் கூட தேவைதான்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்! (மகளிர் பக்கம்)
Next post அழகு சிகிச்சைகள்!! (மருத்துவம்)