உலகின் மிகப் பெரிய கட்டடம் எங்கு இருக்கிறது தெரியுமா..? (கட்டுரை)

Read Time:3 Minute, 11 Second

உலகின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனங்களில் அமேஸான் நிறுவனமும் ஒன்று. இப்போது அமேஸான் நிறுவனம், தன்னுடைய மிகப் பெரிய அலுவலகம் ஒன்றைத் திறந்து இருக்கிறது.

அமேஸான் நிறுவனத்துக்கு இந்த உலகில் இருக்கும் அலுவலகங்களிலேயே இப்போது திறந்து இருக்கும் இந்த அலுவலகம் தான் மிகப் பெரியதாம்.

அந்த அலுவலகம் தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் ஹைதராபாத் நகரத்தில் அமைந்து இருக்கிறது.

9.5 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து இருக்கும் இந்த அலுவலகம் தான், அமெரிக்காவுக்கு வெளியே, அமேஸான் நிறுவனம் தன் சொந்த காசைப் போட்டுக் கட்டிய முதல் அலுவலகமாம்.

உலகிலேயே மிகப் பெரிய கட்டடம் என்கிற பெயரையும் இந்த அமேஸான் நிறுவனத்தின் ஹைதராபாத் கட்டிடம் உரிமை கொண்டாடுகிறது.

உலகின் மிகப் பெரிய கட்டிடமான அமேஸான் அலுவலக கட்டடத்தில் 49 லிஃப்டுகள் இருக்கிறதாம். ஒரே நேரத்தில் சுமாராக 970 பேரை பல்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்லுமாம்.

இந்த கட்டடத்தின் மொத்த உயரம் 282 அடியாம். இந்த கட்டடத்தில் சுமாராக 15,000 பேருக்கு மேல் வேலை பார்க்க முடியுமாம். அமேஸான் அலுவலகத்தின் கேம்பஸை முழுவதுமாகச் சேர்த்தால் சுமார் 68 ஏக்கர் நிலப்பரப்பு வருமாம்.

இதில் 12 இலட்சம் சதுர அடி நிலப் பரப்பை பார்க்கிங் வசதி மற்றும் உற்சாகப்படுத்திக் கொள்ளும் சேவைகளுக்கு ஒதுக்கி இருக்கிறார்களாம். பிரான்சில் இருக்கும் ஈஃபில் டவரைக் கட்டப் பயன்படுத்தி இருக்கும் இரும்பை விட, இந்த ஹைதராபாத் அமேஸான் கட்டிடத்தில் 2.5 மடங்கு கூடுதல் இரும்பை பயன்படுத்தி இருக்கிறார்களாம்.

இதை அமேஸான் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜான் ஸ்கோட்டலே கட்டிட திறப்பு விழாவின் போது இதைச் சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமேஸானின் ஹைதராபாத் அலுவலக கட்டடம் இன்னொரு விஷயத்திலும் சாதனை படைத்து இருக்கிறது. 3.25 வொர்க் ஸ்டேஷன்களுக்கு ஒரு கான்ஃபிரன்ஸ் அறை இருக்கை என்கிற சாதனையையும் செய்து இருக்கிறதாம்.

உலக அளவில் சராசரியாக 5 வொர்க் ஸ்டேஷன்களுக்கு ஒரு கான்ஃபிரன்ஸ் ஹால் இருக்கை தான் சராசரியாக இருக்கிறதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊழியருமா?? ஆடிப்போன லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண் குமார்!! (வீடியோ)
Next post இறந்தாலும் உயிர்வாழும் திறன்படைத்த 8 அறிய உயிரினங்கள்!! (வீடியோ)