பாரசிக வளைகுடாவில் சர்வதேச அரசியல் !! (கட்டுரை)

Read Time:9 Minute, 41 Second

பிரெஞ்சு, பாகிஸ்தான் மற்றும் பிற நாட்டு தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் ஒரு பக்கமாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈரானிய ஜனாதிபதிகள் இடையே ஒரு சந்திப்பை ஏற்படுத்த முற்படுகையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பெரிய அதிகாரப் போட்டி பாரசிக வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலின் நீரில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஜனாதிபதிகள் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஹஸன் றொஹானி ஆகியோருக்கு இடையில் நேருக்கு நேர் சந்திப்பதற்கான வாய்ப்புகள் மிக மெலிதாக இருப்பது – குறிப்பாக, ட்ரோன் தாக்குதல்களுக்குப் பின்னர் சவுதி முக்கிய எண்ணெய் வசதிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு பாதுகாப்பில் கவனம் செலுத்துதல் – அது தொடர்பில் இவ்விரண்டு நாடுகளும் இணைந்து ஈரானுக்கு எதிரான சர்வதேச பிரசாரத்தை மேற்கொள்ளல் ஒரு பக்கம் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இன்னமும் இரண்டு நாடுகளும் எந்த ஒரு இராணுவ முனைப்பிலும் ஈரானுடன் ஈடுபடாதிருப்பது, இரண்டு பக்க துருப்புகளுக்கும் இடையில் ஏற்படும் என அச்சப்பட்ட இராணுவ மோதலின் அபாயத்தை தற்காலிகமாக தணித்துள்ளது எனக் கருத முடியும்.

ஆயினும், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் குறித்த தாக்குதல்களுக்கு பிறகு, மத்திய கிழக்கின் நீர்வழிகளைப் பாதுகாக்க ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இணைந்திருந்தது. இதற்கு மேலதிகமாக குறித்த இக்கூட்டணியில் பிரித்தானியா, பஹ்ரைன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை பங்கேற்க உறுதியளித்திருந்தன.

ஜப்பான் குறித்த கூட்டணியில் இணைவதற்கு மறுத்துவிட்டது, ஆனால் பிராந்தியத்தில் தகவல் சேகரிக்கும் பணிகள் குறித்து தனது கடல்சார் தற்காப்புப் படையை குறித்த கூட்டணியுடன் இணைந்து செயல்படுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகக் அறிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் ஈரான் இணைவதை ஆதரித்ததுடன், அந்நிலை ஹொர்முஸ் நீரிணையை பாதுகாப்பு கட்டமைப்புக்குள் கொண்டுவரும் எனக் கருதிய போதும், அது தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முற்பட்ட போதிலும், ஜப்பான் குறித்த முயற்சியில் வெற்றிகாணவில்லை.

நிலை இவ்வாறிருக்க, ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறை, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், வளைகுடா நட்பு நாடுகளுக்கு உறுதியளிக்கும் முயற்சியாகவும் கடந்த வாரம் இரண்டு நாடுகளுக்கும் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான துருப்புக்களையும் உபகரணங்களையும் அனுப்புவதாக அறிவித்துள்ளது.

அதே வாரத்தில், ஈரானிய பிரிகேடியர் ஜெனரல் காதிர் நெசாமி, ஈரானிய இராணுவ, சர்வதேச மற்றும் இராஜதந்திர விவகாரங்களின் தலைவர், ஈரானிய கடற்படை ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியப் பெருங்கடல் மற்றும் ஓமான் கடலில் கூட்டுப் பயிற்சிகளை நடத்தப்போவதாகக் கூறியுள்ளமை இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான இராணுவ முரண்பாட்டை மற்றோரு தளத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

மறுபுறத்தில், குறித்த இராணுவ கூட்டு பயிற்சி தொடர்பில் ரஷ்யா இன்னமும் உறுதிப்படுத்தாத அதேவேளை, குறித்த நிகழ்ச்சி நிரலை மய்யமாகக் கொண்டு, வரும் வாரங்களில் சவுதி செல்லவுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஏற்கெனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட ரஷ்யாவின் எஸ் -400 எதிர்ப்பு ஏவுகணை முறையை கொள்வனவு செய்வதற்கு சவுதியை வலியுறுத்துவார் என எண்ணப்படுகின்றது. அக்கணக்கீடு சரியானதாக இருக்குமாக இருந்தால், அது சவுதியை ஐக்கிய அமெரிக்கா – ரஷ்யா இடையிலான புதிய பனிப்போர் யுகத்தில் தீர்க்கமாகவே ஐக்கிய அமெரிக்காவின் பக்கம் தலைசாய செய்வதுடன் அது ஈரானுக்கு ரஷ்யா மேலதிக இராணுவ உதவுகரமாக உருப்பெறுவதற்கு வழிவகுக்கலாம்.

மாறாக, ரஷ்யா குறித்த கொள்வனவை ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால், அது சவுதி அரேபியாவுக்கு மேலதிக இராணுவ கட்டமைப்பு உதவிகளை ரஷ்யா வழங்க வழிவகுக்கும் என்பதுடன், ஐக்கிய அமெரிக்க நம்பகத்தன்மையைப் பற்றி நிச்சயமற்றதாய் இருக்கும் சவுதி அரேபியா, அதன் எண்ணெய் சொத்துக்களைப் பாதுகாப்பதில் மற்ற நாடுகளை ஆதரிப்பதற்காக அணுகக்கூடிய ஒரு நேரத்தில், ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு குடைக்கு மாற்றாக வளைகுடாவில் ஒரு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான சீன ஆதரவு ரஷ்ய திட்டத்தை ஆதரிக்கும் எனவும் கருதமுடியும்.

தென் கொரியாவின் யொன்ஹாப் செய்தி நிறுவனம் கடந்த வாரம், சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான், சவுதியின் வான் பாதுகாப்பு முறையை வலுப்படுத்த தென் கொரிய உதவியைக் கோரியதாக அறிவித்தமை, சவுதி தனது பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த நீண்ட பூகோளவியல் திட்டத்தை வகுப்பதை காணலாம். இது, பாரசிக வளைகுடாவின் பாதுகாப்பு கட்டமைப்பானது தனியாகவே சவுதி மதிப்பிடுவது போல சவுதி – ஐக்கிய அமெரிக்க வெளிவிவகார கொள்கை சார்ந்தது மட்டுமல்ல என்பதை காட்டுகின்றது. ஏனெனில், குறித்த வளைகுடா தொடர்பிலான ஐக்கிய அமெரிக்க நம்பகத்தன்மை மற்றும் அக்கறை என்பன ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஈரானுடனான மேற்கொண்டிருந்த சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைக்கு முந்தையது என்ற போதிலும், அண்மைய சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு மீதான தாக்குதல்களுக்கு பின்னர் சவுதி குறித்த சவுதி – ஐக்கிய அமெரிக்க வெளிவிவாகர கொள்கையை மட்டும் நம்பியிருக்கவில்லை.

மத்திய கிழக்கு அரசியல் ஆய்வாளரும், ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் முன்னாள் ஆலோசகருமான பிலால் ஒய். சாப், பாரசிக வளைகுடாவில் ஐக்கிய அமெரிக்கா தங்கள் பாதுகாப்புக்கான உறுதிப்பாட்டை படிப்படியாக குறைத்து வருகிறது என்றும், அப்பாதுகாப்பு கட்டமைப்பு ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலேயே வலுப்பெறுகிறது என கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக, சவுதி, ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகியவை மாறுபட்ட மற்றும் சிக்கலான பல தள கொள்கைகளை பேணுதல், அவரவர் நாட்டின் தேசிய நலன் சார்ந்தது என்ற போதிலும், இந்நிலை ஒரு நிலையான இருப்புக்கு வழிவகுக்கும் ஒன்றில்லை என்பதே இப்போதைய உண்மையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 இயக்குனர்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்கள்!! (சினிமா செய்தி)
Next post மிரளவைக்கும் வெறித்தனமான 6 கப்பல் வகைகள்!! (வீடியோ)