இது ரொம்பவும் ஓவர் !! (கட்டுரை)

Read Time:2 Minute, 19 Second

ஒரு வெவஸ்த வேனாமா? எனக் கூறுவதை கேள்விப்பட்டிருப்​போம். அது பேச்சில் மட்டுமல்ல செயலிலும் உண்டு.

நவராத்திரி பூஜைகள் வெகுவிமர்சியாக நடைபெறுகின்றன. பலரும் விரதமிருக்கின்றனர். காணிக்கைகளும் போடப்படுகின்றன.

“காணிக்கை”, இந்து மதத்துக்கு மட்டுமே உரித்தானது அல்ல. ஏனைய மதங்களிலும் காணிக்கை ​செலுத்தலாம். உண்டியல்களும் வைக்கப்பட்டிருக்கும். உண்​டியலை அப்படியே ஆட்டையைப் போட்டவர்களும் உள்ளனர். சில்லறைகளை ​கொடுத்தால், அப்படியே ஆட்டையைப் போட்டவர்களும் இல்லாமல் இல்லை.

இப்படிதான் தந்தையொருவர் சிறுசிறுக சேமித்து, ஊரிலுள்ள கோவில் உண்டியலில் போடுவதற்காக, தன்னுடைய மகளிடம் ​சில்லறைகளை கொடுத்தனுப்பியிருந்தார். கணக்கு கொஞ்சம் ஆயிரத்தை தாண்டியதால், சின்னமகளோ, அப்படியே சுருட்டிக்கொண்டாள்.

விவரமான தந்தை, 20 ரூபாய் தாள்களை சேமித்து, உண்டியலில் போடுவதற்காக தானே! எடுத்துசென்றுள்ளார்.

சும்மா அல்ல. அந்த நாணய தாள்களை நன்றாக கழுவி, ஐயன் பண்ணி, எடுத்துச் சென்றுள்ளார். ஏன்? டடா இப்படி செஞ்சிங்க எனக் கேட்டதற்கு,

“இல்ல மகள், அந்த நாணயத் தாள்களில் யார், யாருடைய கை பட்டிருக்குமோ தெரியாது. சாமிக்குத்தானே! கொஞ்சம் சுத்தமாக இருக்கவேண்டுமல்லவா? அதுதான் அப்படி செய்தேன்” என்றாராம்.

இதுகொஞ்சம் ஓவராக இருந்தாலும், பய பக்தியாக இருக்கும் பக்தர்களின் பணத்தை, சுரண்டுவதிலேயே பல வழிபாட்டிடங்கள் குறியாக இருக்கின்றன என்பதை நினைத்தால்தான், ஊர்க்குருவிக்கு கண்ணீர் வருகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெட்ராஸ் பழைய மெட்ராஸ்!! (மகளிர் பக்கம்)
Next post மனம்தான் நோய் … மனம்தான் மருந்து!! (மருத்துவம்)