அரசை எதிர்த்து போராடி உயிரிழக்கும் மக்கள் !! (உலக செய்தி)

Read Time:1 Minute, 36 Second

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த இதேபோன்ற போராட்டங்களின்போது ஈராக் முழுவதும் சுமார் 150 பேர் இறந்தனர்.

அவர்களில் பாதிப்பேர் இராணுவம் மற்றும் அரசு அலுவலக கட்டடங்களுக்குள் நுழைய முற்பட்டபோது இறந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

போரால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் வேண்டும், ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி அங்கு மக்கள் போராடி வருகின்றனர்.

போராட்டங்களை கட்டுப்படுத்த அளவுக்கும் அதிகமான படைகளை அதிகாரிகள் பயன்படுத்தியதை ஈராக் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

ஈராக் மதகுருக்களும், ஐக்கிய நாடுகள் மன்றமும் வன்முறைகளைக் கைவிட அனைத்து தரப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத உள்பிரிவுகளின் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்து கொள்வதை ஷியா முஸ்லிம்கள் தலைமை வகிக்கும் அரசு நீக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம்!! (உலக செய்தி)
Next post வயசான விமானங்களை என்ன செய்கிறார்கள் தெரியுமா? (வீடியோ)