வயிற்றுப் புண்ணை நீக்கும் பீட்ரூட்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 50 Second

பீட்ரூட் கிழங்கு வகையை சேர்ந்தது. சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் உள்ள இதனை செங்கிழங்கு என்றும் குறிப்பிடுகிறார்கள். இது சாலட் வகை உணவுகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. ரத்தத்தின் அளவினை அதிகரிக்கும் தன்மைக் கொண்ட பீட்ரூட்டில் பல வகை நன்மைகள் உள்ளன. இதனை சமையல் செய்தும் சாப்பிடலாம் அல்லது பச்சையாகவும் சாப்பிடலாம்.

* பீட்ரூட் கிழங்கைச் சமைத்து அளவாக சாப்பிட்டு வந்தால் உடல் நலம் சிறப்பாக இருக்கும். அதன் கீரையில் வைட்டமின் ‘ஏ’, இரும்புச்சத்து, ரிபோஃபிளேவின் அதிகமாக இருக்கின்றன. பீட்ரூட்டினை மட்டும் சாப்பிடாமல் அதன் கீரையையும் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் தினமும் புதுப்பிக்கப்படும். கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

* மருத்துவக் குணங்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளில் பீட்ரூட் கிழங்கும் ஒன்றாகும். அது பித்தப்பை, சிறுநீரகம் ஆகியவற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலுக்கு நன்மை செய்கிறது.

* ரத்தச் சோகை உள்ளவர்கள் பீட்ரூட் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சம் பழச்சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் ரத்த சோகை நோய் மிக விரைவாகக் குணமாகி விடும்.

* பீட்ரூட் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேனைச் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும்.

* பீட்ரூட் சமைக்கும் போது அதில் எலுமிச்சம் பழச்சாறும் சேருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் வைட்டமின் ‘சி’ நன்கு கிடைத்து வளர்சிதை
மாற்றம் வேகமாக நடைபெறும்.

* மூலநோய் குணமாகும். பித்தக் கோளாறு அகலும். கல்லீரல் பலம் பெற்று மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும்.

* சரும பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட் சாறு இரண்டு டீஸ்பூனுடன் ஒரு டீஸ்பூன் தண்ணீர் கலந்து தடவினால் சரும பிரச்னை நீங்கும்.

* நாள்தோறும் பீட்ரூட் சாற்றினை பருகி வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து செரிமானப் பிரச்னை நீங்கும்.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கி இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும்.

* இதில் உடலுக்கு தேவையான மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், ெபாட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரும மென்மைக்கு கிளிசரின் சோப்! (மகளிர் பக்கம்)
Next post அகத்தை சீராக்கும் சீரகம்!! (மருத்துவம்)