சிவப்பு மஞ்சள் பச்சை… மறக்க முடியாத அனுபவம்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 30 Second

மலையாள கரையோரத்தில் இருந்து தமிழ் திரையுலகத்திற்கு பூத்திருக்கும் புது மலர் லிஜோமோல். இவர் தமிழில் நடித்த முதல் படமான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் அழகான சிரிப்பு மற்றும் கண் அசைவிலேயே பலரின் நெஞ்சங்களில் அம்சமாக பதிந்துவிட்டார். இதில் அக்காவின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப யதார்த்த நடிப்பில் கலக்கியிருக்கும் லிஜோமோல் தமிழ் திரையுலக அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

முதல் படம்…

என்னுடைய முதல் படம் மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்.’ அதில் ஃபஹத் ஃபாசிலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அப்ப நான் கிராஜுவேஷன் படிச்சிட்டு இருந்தேன். சினிமா பற்றி எல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. ஆடிஷனுக்காக கூப்பிட்டு இருந்தாங்க போனேன், செலக்டெட்ன்னு சொல்லிட்டாங்க. முதல் படமே பெரிய ஹீரோவோட நடிச்சேன். அந்த படத்தை பார்த்திட்டு தான் தமிழில், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சென்னைக்கு இரண்டு முறை ஆடிஷனுக்கு வந்தேன்.

சில சீன் நடிக்கவும் செய்தேன். அக்கா கேரக்டர் என்றாலும், நல்ல ரோல் என்று சொன்னாங்க. ஒரு நாள் வரை முழுப் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார்கள். பிறகு, நீங்க ஊருக்கு போங்க. நாங்க கூப்பிடும் போது திரும்ப வந்தால் போதும்ன்னு சொல்லிட்டாங்க. அதன் பிறகு ஒரு நாள் போன் வந்தது. நாளை முதல் ஷூட்டிங் நட்க்கிறது நீங்க கிளம்பி வாங்கன்னு சொல்லிட்டாங்க. இப்படித்தான் தமிழ் பட வாய்ப்பு எனக்கு வந்தது.

தமிழ் சினிமா அனுபவம்?

படப்பிடிப்பில் நல்ல அனுபவம் கிடைச்சது. தமிழ் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன திரும்ப சரளமாக பேசத் தெரியாது. ஆனால் யாராவது தமிழில் பேசினா புரிஞ்சிப்பேன். சில சமயம் திரும்ப பேசவும் முயற்சிப் பண்ணுவேன். எந்த ஒரு மொழியா இருந்தாலும், அது புரிந்தாதான் சினிமாவில் நிலைச்சு இருக்க முடியும். காரணம் மொழி தெரியாமல் நம்மால் அற்கான எக்ஸ்பிரஷன் கொடுக்க முடியாது. சினிமா மட்டும் இல்லை… எல்லா துறையிலும் நாம் எங்கு வேலைப் பார்க்கிறோமோ அந்த லோக்கல் மொழி தெரிந்து கொள்வது அவசியம். இங்க தமிழ் சினிமால ரொம்பவும் மரியாதை கொடுக்கிறாங்க. டைரக்டர், நடிகர் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் எல்லாரும் எனக்கு ரொம்பவே ஹெல்ப் செய்தாங்க.

இயக்குநர் சசி…

சசி சார்தான் எனக்கு டயலாக்கை சொல்லிக் கொடுப்பார். எனக்கான வசனம், அதன் அர்த்தம் எல்லாம் ரொம்ப தெளிவாக சொல்லிக் கொடுப்பார். சில சமயம் டயலாக் எனக்கு புரியாது. அப்ப மறுபடியும் சொல்லித் தருவார். ஷூட்டிங் ஸ்பாட்ல எது நடந்தாலும், உடனே சரி செய்து வசதி படுத்திக் கொடுப்பாங்க. படப்பிடிப்பில் ஆரம்பம் முதல் கடைசி பேக் அப் வரை எல்லாருக்கும் பாதுகாப்பா இருந்து வழி நடத்திக் கொடுப்பார். நான் நடிக்க போகும் ஒவ்வொரு சீனுக்கு முன்னாடி வந்து அது என்ன சீன், என்ன சூழ்நிலை, அதை எப்படி நடிக்கணும்ன்னு சொல்லி புரிய வைப்பார். அப்படியும் புரியலைன்னா நடிச்சும் காண்பிப்பார். நாம் நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறணும் அப்பதான் யதார்த்தமா இருக்கும்னு அடிக்கடிச் சொல்லுவார்.

படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்?

முதன் முதலில் சித்தார்த் கூட நடிக்க போறேன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் பயமா தான் இருந்தது. அவர் ரொம்ப சீனியர் ஆர்டிஸ்ட். நான் நடிக்கும் சீன்ஸ்ல நிறைய டேக் போச்சின்னா, என்னுடைய சீனையும் மறுபடியும் நடிக்க சொல்வாங்க. அதனால கொஞ்சம் பயந்து தான் போனேன். அவரோ நடிக்கும் போது டென்சனா இருக்கும். ஆனால் அவர் சீனியர் எல்லாம் பார்க்காம, நான் டயலாக் பேசும் போது, அதில் ஏதாவது பிழை இருந்தா உடனே எப்படி சொல்லணும்னு சொல்லித் தருவார். நல்லா பண்ணிட்டேன்னா குட் என்று உற்சாகம் கொடுப்பார்.

கேமரா முன்னாடி என்னுடைய முகம் மட்டும் இருந்தாலும் அவர் என் முன்னாடி ரீஆக்‌ஷன் கொடுத்துட்டு இருப்பார். இதுபோல் நிறைய சப்போர்டிங்கா இருந்தார். ரொம்ப என்கரேஜ் செய்வார். ஆரம்பத்தில் பயமா இருந்தது, அதன் பிறகு அவருடன் நடிப்பது ரொம்பவே கம்ஃபர்ட்டபிளா மாறிடுச்சு. தினமும் ஜாலியா இருக்கும். படத்தில் எலியும் பூனையுமா ஜீ.வி.பிரகாஷ், சித்தார்த் நடிச்சிருப்பாங்க. ஆனா, உண்மையில் இருவருமே ரொம்ப நல்ல ஃபிரண்ட்ஸ். சித்தார்த் சங்கீதம் தெரிந்தவர், ஜீ.வி.பிரகாஷ் மியூசிக் டைரக்டர். இரண்டு பேரும் இசை பத்தி பேசினால் மணிக்கணக்கில் பேசுவாங்க.

படத்தில் ஜீ.வி.பிரகாஷ் எப்படியோ அப்படியே தான் நிஜத்திலும். ஒரு பிரதர் அபெக்‌ஷன் அவரிடம் இருந்தது. ஷூட் முன்னாடி ஒர்க் ஷாப் இருந்தது. அதில் என்னிடமும், ஜீ.வி.பிரகாஷிடமும் அக்கா, தம்பி மாதிரி இருக்கணும்னு சொல்லிட்டே இருப்பார். அந்த கெமிஸ்ட்ரிதான் படத்திலும் பிரதிபலிச்சது. அவருடன் நடிக்கும் போது நான் எந்த ஒரு டென்ஷனும் ஃபீல் செய்யல. ஒரு சீன், ரெஸ்டாரன்ட்டில் அவரை அடிக்கிற மாதிரி சீன். என்னால் அவரை அடிக்க முடியல. பல முறை டேக் வாங்கிய பிறகு தான், அந்த ஷாட் ஓ.கே ஆச்சு.

நடிக்க இருக்கும் படங்கள்…

இப்ப மலையாளம், தமிழ் படங்களில் மட்டும் நடிச்சிட்டு இருக்கேன். சிவப்பு மஞ்சள் பச்சை-க்குப் பிறகு எந்தப் படத்திலும் கமிட்டாகல. என்னுடைய நீண்ட நாள் கனவு, பி.ஹெச்.டி முடிச்சிட்டு கல்லூரில கல்வி விரிவுரையாளராக வேலை பார்க்கணும். அதுக்காகத்தான் போஸ்ட்கிராஜுவேட் படிச்சேன். பிஹெச்.டி-க்கும் போஸ்ட் தேர்வுக்கும் ரெடி செய்துகொண்டே இருக்கேன். அதுக்காக சினிமாவில் நடிக்க மாட்டேன்னு இல்லை. எனக்கான கதாபாத்திரம் வந்தா கண்டிப்பா நடிப்பேன். அடுத்த கதைக்காக காத்துக் கொண்டு இருக்கேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதியோருக்கான உணவுமுறை!! (மருத்துவம்)
Next post இனிதாய் கடக்கலாம் பிரீ மெனோபாஸ்!! (மகளிர் பக்கம்)