பெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் !! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:2 Minute, 51 Second

உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள்.

பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப் படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முடடையை வெளியிடுகின்றன. ஒரு பென் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. கருத்தறித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது மாதவிலக்கு ஏற்படுதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான்.

ஒரு பெண் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக் குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. பெண்ணின் உடலில் கருத்தறிப்பதற்கான வாய்ப்பும் முடிந்து போகும். மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் அல்லது மாதவிலக்கு நின்று போதல் அல்லது மோனோபாஸ்.

இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் காமநிலை , காமஉணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது எதாவது பிரச்சினை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது – கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி ! (கட்டுரை)
Next post கலவியில் முத்தம்!! (அவ்வப்போது கிளாமர்)