குழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று! (மருத்துவம்)

Read Time:9 Minute, 45 Second

அறிந்துகொள்வோம்

குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாள முடியாது. குறிப்பாக, 5 வயது வரையிலும் கூடுதல் கவனம் செலுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அவற்றில் குடல் தொடர்பான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர வைக்கிறது ஷிகெல்லா என்கிற தொற்றுநோய்.மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றிக் கூறுவதைப் பார்ப்போம்…

இளம் குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுகிற ஷிகெல்லோசிஸ் என்கிற குடல் சம்பந்தப்பட்ட தொற்றுநோயை உண்டாக்கும் ஒரு பாக்டீரியா குழுவின் பெயர்தான் ஷிகெல்லா(Shigella). பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகின்றனர். இருந்தபோதும் யார் வேண்டுமானாலும் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும்.

ஷிகெல்லா பாக்டீரியாவில் நான்கு வகைகள் உள்ளன. Shigella sonnei அல்லது Group D Shigella, Shigella flexneri அல்லது Group B Shigella ஆகிய இந்த இரண்டு வகைகளும் அமெரிக்காவில் அதிகமாக காணப்படுகிறது. Shigella boydii, Shigella dysentariae ஆகிய இரண்டு வகைகளும் வளர்ந்துவரும் நாடுகளில் மிகவும் பரவலாக காணப்படுகிறது.

இந்நோய் காட்டுத்தீ மற்றும் குறிப்பாக சிறைச்சாலைகள், மருத்துவ இல்லங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் பரவுகிறது. அமெரிக்கர்கள் மத்தியில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் வரை இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாவதாக, அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வருகிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு உடல்நலன் சரியாகிவிடுகிறது. ஆனால், சில சமயங்களில் இத்தொற்றினால் உடல் உறுப்புகளில் மோசமான சுகாதார பிரச்னைகள் ஏற்படுகிறது.

நோய் அறிகுறிகள்

இந்த நோய்த்தொற்றின் முக்கியமான அறிகுறி வயிற்றுப்போக்கு. இது மற்ற வயிற்றுப் பிரச்னைகளைவிட கடுமையானதாக இருக்கும். அடிக்கடி ரத்தத்துடன் கலந்த வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுத் தசைகளில் பிடிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும் என்கிறார் மருத்துவரும் அமெரிக்கக் குடல் மற்றும் இரைப்பை அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான Kara Gross Margolis. குமட்டல், வாந்தி, அரிதான வலிப்புத் தாக்கங்கள், பிந்தைய தொற்று வாதம் என்கிற எதிர்வினை வாதம் போன்ற பிற அறிகுறிகளும் இந்நோயால் உண்டாகிறது.

இந்த வாதத்தின் அறிகுறிகள் பெரும்பாலும் கணுக்கால், முட்டிகள், பாதம் மற்றும் இடுப்புப் பகுதி மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்ற பிற வடிவங்களிலும் இருக்கின்றன. சிலருக்கு குடல் அசைவுகளில் பிரச்னை, மலக்குடல் கீழே சரிந்து போதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஷிகெல்லோசிஸ் நோயின் அறிகுறிகள் பொதுவாக தொற்று ஏற்பட்டதற்கு பின் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தோன்றும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கும்.

நோய் பரவுவதற்கான காரணிகள்

இந்த நோய்க்குக் காரணமான பாக்டீரியா பொதுவாக அசுத்தமான மலம் வழியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. நோய்த்தொற்றுடைய நபரிடம் பாலியல்ரீதியாக தொடர்புடைய மற்றொரு நபருக்கோ, தொற்று உடையவரிடமிருந்து தண்ணீர் மூலமோ, பழங்கள், பச்சைக் கீரைகள், வான்கோழி, கோழி, மதிய உணவு, பால் போன்ற பல்வேறு வகையான அசுத்தமடைந்த உணவு வகைகளின் மூலமோ இந்நோய் பரவக்கூடும் என்கிறார், நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் குழந்தைகளுக்கான இரைப்பை குடலியல், கல்லீரல் பிரிவுகளின் இணைப் பேராசிரியர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணராக உள்ள மார்கோலிஸ்.

நோய்த்தடுப்பு முறைகள்

உங்களை சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்வதை கடுமையான முறையில் பின்பற்றுவது மிகவும் அவசியம். இந்த நோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு சரியான பின்பும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரைக்கும் இந்நோய்த் தொற்று இருக்கும். எனவே, நம்மை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு நம் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

கழிவறைக்கு சென்ற பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகளின் Diaper-ஐ மாற்றிய பிறகு சுத்தமாக கைகளை கழுவுவதோடு அதை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். உங்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்னை இருக்கும் போது உணவு தயார் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த பாக்டீரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பல வழிகளில் பரவும் என்பதால், உங்கள் குழந்தைகளுக்கு இப்பிரச்னை இருந்தால் அது சரியாகும் வரையில் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இதன் மூலம் மற்ற குழந்தைகளுக்கு பரவுவதைத் தடுக்கலாம்.

வெளியிடங்களில் உணவருந்துவதைத் தவிர்த்துவிட்டு வீடுகளில் நாமே சுகாதாரமான முறையில் நமது உணவைத் தயார் செய்து சாப்பிடலாம். இதனால் வெளியிடங்களில் உள்ள சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் மூலம் இத்தொற்று பரவுவதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

வளர்ந்து வரும் நாடுகளில் சுகாதாரமில்லாத இடங்களில் பயணம் மேற்கொள்வதுகூட இந்த நோய்த் தொற்றுக்குக் காரணமாக அமையலாம். இதனால் அதிகளவிலான பயணங்களைத் தவிர்க்கலாம். குறிப்பாக இதுபோன்ற பயணங்களின்போது, நன்கு வேகவைத்த உணவு மற்றும் சுத்தமான தண்ணீர், பழங்கள்போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறை

இந்த நோய்த்தொற்று லேசான அளவில் இருந்தால், அது சாதாரணமாக ஐந்து அல்லது ஏழு நாட்களில் சரியாகிவிடும். ஆனால், குடல் இயக்கங்கள் சரியாகி சாதாரண நிலைக்குவர இன்னும் கூடுதல் காலம் ஆகலாம். மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நோயிலிருந்து மீண்டு வருவதைத் துரிதப்படுத்தலாம். உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்ப்பதற்கும், உடல் சோர்வினைப் போக்கவும் திரவ வகை உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

வயிற்றுப்போக்குக்கு Imodium அல்லது Lomotil போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இதனால் இந்நோயின் நிலை இன்னும் மோசமானதாக மாறிவிடும். எனவே, இதற்கு Bismuth subsalicylate (Pepto-Bismol) என்கிற மருந்தினைப் பயன்படுத்தலாம். மேலும் Acetaminophen காய்ச்சலை சரி செய்ய உதவும். உங்களுக்கோ, உங்கள் குழந்தைக்கோ 101 டிகிரி அல்லது அதற்கும் அதிகமான அளவு காய்ச்சல் இருந்தாலோ, உடல் எடை குறைவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆச்சரியமான திறமை !! (வீடியோ)
Next post நித்தியின் ரகசிய வீடியோக்கள்! அடுத்துடுத்து வெளிவரும் மர்மம்!! (வீடியோ)