இலங்கை நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல்(?)

Read Time:1 Minute, 14 Second

ANI.sflag.gifஇலங்கை நாடாளுமன்றத்துக்கு இந்த ஆண்டுக்குள் திடீர் தேர்தலை நடத்த அதிபர் மகிந்தா ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மொத்தமுள்ள 225 இடங்களில் 126 இடங்கள் மட்டுமே இந்தக் கூட்டணிக்கு உள்ளன. அதிலும் சுதந்திரா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இல்லை. இதனால் 38 இடங்களை வைத்துள்ள கூட்டணிக் கட்சியான சிங்கள இனவாத ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி ராஜபக்சே அரசுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது.

இந் நிலையில் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்தினால் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என ராஜபக்சே நம்புகிறார். தேர்தலுக்கு தயாராகுமாறு தனது கட்சியின் நிர்வாகிகளுக்கு ராஜபக்ஷே உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாக்தாத் நகரில் ஊரடங்கு
Next post தாய்லாந்து பிரதமராக முன்னாள் ராணுவ கமாண்டர் பதவியேற்றார்