அவுஸ்திரேலியாவை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம் !! (உலக செய்தி)

Read Time:2 Minute, 18 Second

சில மாதங்களுக்கு முன்பு சென்னை தண்ணீர் பஞ்சம் சர்வதேச தலைப்பு செய்தி ஆனது. ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி கேப்ரியோ சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இப்போது நிலைமை சரியாகிவிட்டதாக அரசு அறிவித்துவிட்டது. ஆனால், இப்போது அவுஸ்திரேலியாவைக் கடுமையாக ஆட்டிப்படைக்கிறது தண்ணீர் பஞ்சம்.

தண்ணீரைப் பயன்படுத்தப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆஸ்திரேலியா அரசு. கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது, இரு பக்கெட் தண்ணீர் கொண்டுதான் வாகனங்களைக் கழுவ வேண்டும், நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பச் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

இதனை மீறும் தனி நபர்களுக்கு 150 அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும், வணிக நிறுவனங்களுக்கு 550 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்கிறது அவுஸ்திரேலிய அரசு.

அதே நேரம் வெப்பமும் கடுமையாக அங்கு அதிகரித்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ள வெப்பத்தின் காரணமாகக் காட்டுத்தீ சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் மட்டும் 100 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

இதற்குக் காலநிலை மாற்றமும் முக்கிய காரணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தின் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் அவர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னித்திரையின் பங்கு என்ன? (அவ்வப்போது கிளாமர்)
Next post நித்யானந்தா எங்கே? – இன்னும் 2 நாட்களில் தெரியும்!! (உலக செய்தி)