ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு அவசிய ஆலோசனைகள்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 12 Second

உடலில் நச்சுக்கள் அதிகமாகும்போது சிறுநீரகங்கள் பாதிக்கும் வாய்ப்பு விகிதமும் கூடுதலாகும். உடலின் சுத்திகரிப்பு நிலையம் என்றே சொல்லலாம்… சிறுநீரகங்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை. தவறான உணவுப் பழக்கங்கள், மாறிப்போன வாழ்க்கைமுறை, அதிகரித்துவரும் உடல் பருமன்… போன்ற பல காரணங்களால் பலருக்கும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைப் பார்க்கிறோம். ஆரோக்கியமான சிறுநீரகங்களைப் பெற அவசியமான சில
ஆலோசனைகளைத் தெரிந்து கொள்வோமா…

போதுமான அளவு தண்ணீர் வேண்டும்

ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் நீர் அருந்த வேண்டும். அப்போதுதான் சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இருக்கும். போதுமான அளவு தண்ணீர் அருந்தும்போது உடலிலுள்ள நச்சுகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் வெளியேற்றப்படும். ஏற்கனவே சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வேண்டும்.

சிறுநீரக செயலிழப்புக்கு சர்க்கரை நோய் மிக முக்கிய காரணம். சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்படுகின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள அவ்வப்போது சர்க்கரை நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் தாக்குவதற்கு முந்தைய நிலையான Prediabetes இடத்தில் நீங்கள் இருப்பது தெரிந்தால் அது சர்க்கரை நோயாக மாறுவதற்கு முன்பே உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் அதைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம்.

புகையிலையைத் தவிர்க்க வேண்டும்

உடலில் நச்சுகள் அது அதிகமாகும்போது அது சிறுநீரகங்களையும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் வெகுவாக பாதிக்கும். உடலில் நச்சு சேர்வதற்கு வழிவகுக்கும் புகைப் பழக்கத்தையும், புகையிலைப் பொருட்கள் உபயோகத்தையும் அறவே தவிர்க்க வேண்டும்.

உடல் பருமனைத் தவிர்க்க வேண்டும்

உடல் பருமனும், உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. அளவுக்கதிக உடல் பருமன், சிறுநீரகப் புற்றுநோய் ஏற்படவும் காரணமாகலாம். BMI எனப்படும் உடல் நிறை குறியீட்டெண் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொண்டு உயரத்துக்கேற்ற எடையைப் பராமரிக்க வேண்டும்.

மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்

மருத்துவப் பரிந்துரையின்றி சாதாரண வலிகளுக்குக் கூட வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும், அஜீரண மருந்துகளை எடுத்துக் கொள்வதும் சிறுநீரகங்களைப் பதம் பார்த்துவிடும். அதேபோல ஸ்டீராய்டு கலந்த மருந்துகளையும் தவிர்க்க வேண்டும். எந்தப் பிரச்னைக்கும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியம் உங்கள் விரல்நுனியில்!! (மகளிர் பக்கம்)
Next post நொச்சி வளர்த்தால் நூறு நன்மை!! (மருத்துவம்)