சித­றுமா தமிழ் வாக்­குகள் ? (கட்டுரை)

Read Time:17 Minute, 42 Second

பொதுத்­தேர்­தலில் தமிழ் மக்­களின் வாக்­கு­களை மிகக் கவ­ன­மாகப் பயன்­ப­டுத்த வேண்டும் என்றும், அதி­க­பட்ச ஆச­னங்கள் தமிழ் பிர­தி­நி­தி­க­ளுக்கு கிடைப்­பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வலி­யு­றுத்­தப்­பட்­டாலும், அதற்குச் செயல்­வ­டிவம் கொடுக்கக் கூடி­ய­தொரு நிலை இன்று இல்லை என்­பதே நிதர்­சனம்

கொழும்­பி­லி­ருந்து தமிழ்ப் பிர­தி­நி­தித்­துவம் ஒன்­றுக்­கான குறைந்­த­பட்ச வாக்­குகள் கிடைக்­கா­விட்­டாலும் கூட, தேசியப் பட்­டியல் ஆச­னத்தைப் பெறு­வ­தற்­கான வாக்­கு­க­ளை­யா­வது பெற முடியும் என்று கூட்­ட­மைப்பு கரு­து­கி­றது

பொதுத்­தேர்­தலை நோக்கி நாடு நகரத் தொடங்­கி­யுள்ள சூழலில் தமிழ் அர­சியல் கட்­சி­களும் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் தீவி­ர­மாக இறங்­கி­யி­ருக்­கின்­றன.

இந்தப் பொதுத்­தேர்­தலில் ஆளும்­கட்சி மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்­வதை தடுக்கும் வகையில்- தமிழ்க் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து போட்­டி­யிட முன்­வர வேண்டும் என்று, அழைப்பு விடுத்­தி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தமது பங்­காளிக் கட்­சி­க­ளுடன் ஏற்­க­னவே ஆசனப் பங்­கீட்டுப் பேச்­சுக்­களைத் தொடங்கி விட்­டது.

புதிய கட்­சி­களை உள்­வாங்­கு­வ­தற்­கான எந்தப் பேச்­சுக்­க­ளையும் முன்­னெ­டுக்­கா­ம­லேயே, பங்­கா­ளி­க­ளுடன் ஆசனப் பங்­கீட்டுப் பேச்­சுக்­களை ஆரம்­பித்­துள்­ளதில் இருந்தே, கூட்­ட­மைப்பு ஏனைய தமிழ்க் கட்­சி­க­ளுக்­காக காத்­தி­ருக்­கவும் இல்லை, அதற்கு வழி­விடத் தயா­ரா­கவும் இல்லை என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

அதற்கு மாற்­றான அணி என்று கிளம்­பி­யுள்ள சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான புதிய கூட்­டணி தைப்­பொங்­க­லுக்கு முன்­ன­தாக பொது இணக்­கப்­பாடு ஒன்­றுக்கு வரும் முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

அங்­கேயும், சிக்­கல்கள் நீடிக்கத் தான் செய்­கின்­றன.

இந்தக் கூட்­ட­ணியில் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம் ­பலம் தலை­மை­யி­லான, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியைக் கொண்டு வரும் முயற்­சி­களில் எந்த முன்­னேற்­றமும் இல்லை.

ஐங்­க­ர­நேசன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசிய பசுமை இயக்­கமும், முரண்டு பிடிப்­ப­தாக தகவல்.

இதனால், இப்­போ­தைக்கு விக்­னேஸ்­வ­ரனின் தமிழ் மக்கள் கூட்­டணி, சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ், சிறி­காந்தா தலை­மையில் புதி­தாக உரு­வா­கி­யுள்ள தமிழ்த் தேசியக் கட்சி, அனந்­தியின் ஈழத்­த­மிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்­சி­க­ளுடன் தமிழ் மக்கள் பேர­வையும் இணைந்தே மாற்று அணி உரு­வாக்­கப்­படும் சூழ்­நிலை உள்­ளது.

பொதுத்­தேர்­தலில் தமிழ் மக்­களின் வாக்­கு­களை மிகக் கவ­ன­மாகப் பயன்­ப­டுத்த வேண்டும் என்றும், அதி­க­பட்ச ஆச­னங்கள் தமிழ் பிர­தி­நி­தி­க­ளுக்கு கிடைப்­பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வலி­யு­றுத்­தப்­பட்­டாலும், அதற்குச் செயல்­வ­டிவம் கொடுக்கக் கூடி­ய­தொரு நிலை இன்று இல்லை என்­பதே நிதர்­சனம்.

2004ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­களின் வழி­காட்­டலில் போட்­டி­யிட்ட போது- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினால் அதி­க­பட்­ச­மாக 22 உறுப்­பி­னர்­களைப் பெற முடிந்­தது.

அதற்குப் பின்னர் கூட்­ட­மைப்­பினால் அவ்­வாறு ஆச­னங்­களைப் பெற்றுக் கொள்ள முடி­ய­வில்லை. அதன் ஆசன பலம் தொடர்ந்து குறைந்து கொண்டே வரு­கி­றது.

இந்­த­முறை கூட்­ட­மைப்­புக்கு 15 ஆச­னங்கள் கிடைக்­குமா என்ற சந்­தேகம் கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளுக்கே வந்து விட்­டது. அண்­மையில் புளொட் தலைவர் சித்­தார்த்தன் இதனை உறுதி செய்­தி­ருந்தார்.

கூட்­ட­மைப்பின் வாக்கு வங்கி சரியத் தொடங்­கி­யி­ருப்­பது இதற்கு ஒரு காரணம் என்றால், தமிழ்த் தேசிய வாக்­குகள் பிரிக்­கப்­பட்டு, சிதறிப் போவதை இன்­னொரு கார­ண­மாக குறிப்­ பி­டலாம்.

வடக்கில் யாழ்ப்­பா­ணத்தைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ்க் கட்­சிகள் பிரிந்து போட்­டி­யி­டு­வதால், தமிழ்ப் பிர­தி­நி­தித்­துவம் குறைந்து போகக் கூடிய அச்­சு­றுத்தல் இல்­லா­வி­டினும், அந்தப் பிர­தி­நி­தித்­துவம் சிங்­களப் பேரி­ன­வாதக் கட்­சி­க­ளுக்கும் பகி­ரப்­பட்டு விடக் கூடிய ஆபத்து உள்­ளது. வன்னி, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, அம்­பாறை மாவட்­டங்­களில் தமிழ்க்­கட்­சிகள் பிரிந்து போட்­டி­யி­டு­வதால், தமிழர் பிர­தி­நி­தித்­துவம் குறைந்து போகும் ஆபத்­துகள் அதிகம் உள்­ளன.

அம்­பா­றை­யிலும், திரு­கோ­ண­ம­லை­யிலும், தமி­ழரின் பிர­தி­நி­திகள் தலா ஒவ்­வொ­ருவர் கிடைப்­பதே பெரிய விடயம் என்ற நிலை ஆகி விட்­டது.

இவ்­வா­றான நிலை­யிலும் கூட, தமிழ்க் கட்­சிகள் பொது இணக்­கப்­பாடு ஒன்றின் அடிப்­ப­டையில் ஒன்­றி­ணைந்து போட்­டி­யிடத் தயா­ராக இல்லை. தமது தனிப்­பட்ட செல்­வாக்கை நிலை­நாட்­டு­வது, தனிப்­பட்ட பகை­மை­க.ைளத் தீர்த்துக் கொள்­வது போன்­ற­வற்­றுக்கே முன்­னு­ரிமை கொடுக்­கின்­றன.

சூழ்­நி­லை­க­ளையும், தமிழர் பிர­தி­நி­தித்­து­வத்தின் ஆபத்­து­க­ளையும் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்­கத்­தக்க மனோ­நிலை கட்­சி­க­ளி­டமோ, தலை­மை­க­ளி­டமோ வர­வில்லை.

ஒன்­றி­ணைந்து போட்­டி­யிட அழைப்பு விடுக்கும் கட்­சிகள், தலை­வர்­களில் எத்­தனை பேர் தமக்­கான இடங்­களை, ஒன்­றி­ணையும் கட்­சி­க­ளுக்கு விட்­டுக்­கொ­டுக்கத் தயா­ராக இருக்­கி­றார்கள் என்ற கேள்வி இருக்­கி­றது.

ஆக, ஒற்­று­மைப்­ப­டுத்தல் என்­பது நடை­முறைச் சாத்­தி­ய­மில்­லாத ஒரு விட­ய­மாக மாறி விட்­டது,

இந்தச் சூழலில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் கிழக்கு மாகாண முக்­கி­யஸ்­த­ரான இரா. துரை­ரத்­தினம் அண்­மையில் வெளி­யிட்­டி­ருந்த கருத்து வர­வேற்­கத்­தக்க ஒன்­றாக பார்க்­கப்­ப­டு­கி­றது.

வடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யுடன் மாற்று அணியில் இருக்­கி­றது, ஆனால் கிழக்கில் அவ்­வாறு இருக்கப் போவ­தில்லை என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்து செயற்­படும் என்று இரா.துரை­ரத்­தினம் கூறி­யி­ருக்­கிறார்.

கிழக்கில் தமிழர் பிர­தி­நி­தித்­துவம் பாதிக்­கப்­படக் கூடாது என்றும் அதற்­காக இவ்­வாறு செயற்­படத் தயா­ராக இருப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இது­போன்று, அர­சியல் தீர்­மா­னங்கள், நிலைப்­பா­டுகள், கருத்து வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால், தமிழர் பிர­தி­நி­தித்­து­வத்­தையும், தமிழ்த் தேசிய நிலைப்­பாட்­டையும் காப்­பாற்­று­வ­தற்­கான ஒரு ஒற்­று­மையைத் தான், தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கி­றார்கள்.

வடக்கில் அந்த ஒற்­றுமை துளி­ய­ளவும் இல்­லாத நிலையில், கிழக்கில் இது­போன்­ற­தொரு நிலை­மைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் காட்­டி­யுள்ள பச்சைக் கொடி நம்­பிக்கை அளிக்கக் கூடி­யது.

ஆனால் இதே, விட்­டுக்­கொ­டுப்­புடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நடந்து கொள்ளத் தயா­ராக இருக்­கி­றதா என்ற கேள்­விகள் உள்­ளன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்­த­முறை வடக்கு, கிழக்­கிற்கு வெளியே போட்­டி­யி­டு­வது குறித்து ஆராய்ந்து வரு­வ­தாக வெளி­யா­கி­யுள்ள செய்­திகள் அதற்குச் சான்­றாக உள்­ளன.

கூட்­ட­மைப்­புக்கு இந்­த­முறை வாக்­குகள் கணி­ச­மாக குறையக் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­படும் நிலையில், வடக்கு, கிழக்­கிற்கு வெளி­யிலும் போட்­டி­யிட்டால் தான், இரண்டு தேசியப் பட்­டியல் ஆச­னங்­களைப் பெற முடியும் என்ற சூழல் காணப்­ப­டு­கி­றது.

எனவே, கொழும்பு, கம்­பஹா, போன்ற மாவட்­டங்­களில் போட்­டி­யி­டு­வது குறித்துக் கவனம் செலுத்தி வரு­கி­றது.

கொழும்பில் போட்­டி­யிட வேண்டும் என்ற கருத்து நீண்­ட­கா­ல­மாக வலி­யு­றுத்­தப்­பட்டு வந்த போதும், குறிப்­பாக தமி­ழ­ரசுக் கட்­சியின் கொழும்புக் கிளை அதற்கு கடு­மை­யான அழுத்­தங்­களைக் கொடுத்து வந்த போதும், கூட்­ட­மைப்பு பல்­வேறு கார­ணங்­களால் அதனைத் தட்­டிக்­க­ழித்தே வந்­தது.

ஆனால், இந்­த­முறை அவ்­வா­றான நிலை இல்லை.

கொழும்­பி­லி­ருந்து தமிழ்ப் பிர­தி­நி­தித்­துவம் ஒன்­றுக்­கான குறைந்­த­பட்ச வாக்­குகள் கிடைக்­கா­விட்­டாலும் கூட, தேசியப் பட்­டியல் ஆச­னத்தைப் பெறு­வ­தற்­கான வாக்­கு­க­ளை­யா­வது பெற முடியும் என்று கூட்­ட­மைப்பு கரு­து­கி­றது.

வடக்கு, கிழக்­கிற்கு வெளி­யிலும் போட்­டி­யி­டு­வது குறித்து ஆரா­யப்­ப­டு­வ­தாக கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் வெளி­யிட்­டி­ருந்த கருத்­தினால் ஆடிப் போயி­ருப்­பது, மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழர் முற்­போக்கு கூட்­டணி தான்.

கூட்­ட­மைப்பின் அறி­விப்பு வெளி­யா­ன­துமே, யாரும் எங்கும் போட்­டி­யி­டலாம், என்று மனோ கணேசன், சமூக ஊட­கங்­களில், கூறி­யி­ருந்­த­துடன், நாங்­களும் வடக்கில், போட்­டி­யி­டு­வது குறித்து ஆராய்­கிறோம் என்று பதி­லடி கொடுத்­தி­ருந்தார்.

அது­போ­லவே, இரா­தா­கி­ருஷ்ணன், வேலு­குமார் போன்­ற­வர்­களும், கூட்­ட­மைப்பு ஏனைய இடங்­க­ளிலும் போட்­டி­யி­டு­வ­தற்கு உரிமை உள்­ளது என்றும் கூறிக் கொண்டே, மறு­பக்­கத்தில் இதனால் தமிழர் பிர­தி­நி­தித்­துவம் பாதிக்­கப்­படும் என்று எச்­ச­ரித்­தி­ருக்­கி­றார்கள்.

கூட்­ட­மைப்பு மலை­ய­கத்தில் போட்­டி­யிட முனை­ய­வில்லை. ஆனால் மலை­ய­கத்­திலும் போட்­டி­யி­டலாம், ஆனால் அதன் மதிப்புக் கெட்டு விடும் என்று கூறிய இரா­தா­கி­ருஷ்ணன், பின்னர் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா தம்­முடன் தொலை­பே­சியில் பேசி­ய­தா­கவும், மலை­ய­கத்தில் கூட்­ட­மைப்பு போட்­டி­யி­டாது என்று அவர் உறு­தி­ய­ளித்­துள்ளார் என்றும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

மறு­பக்­கத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வேலு­குமார், கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான பிர­சா­ரத்தில் இறங்­கி­யி­ருக்­கிறார்.

கூட்­ட­மைப்­புக்கு தெற்கில் வேலை இல்லை என்றும், கூட்­ட­மைப்பின் அணு­கு­மு­றை­களால் அது வாக்கு வங்­கியை இழந்து விட்­ட­தா­கவும் அவர் கூறி­யி­ருப்­ப­துடன், அதற்கு சுமந்­தி­ரனே காரணம் என்று தனிப்­பட்ட தாக்­கு­த­லையும் தொடுத்­தி­ருக்­கிறார்.

கூட்­ட­மைப்பு கொழும்பு, கம்­ப­ஹாவில் போட்­டி­யி­டு­வது பற்றி ஆராய்­வ­தா­கவே கூறி­யி­ருந்­தது. ஆனால் இன்­னமும் முடி­வெ­டுக்­க­வில்லை.

கூட்­ட­மைப்பு கொழும்பில் போட்­டி­யிட்டால், தமிழர் முற்­போக்கு கூட்­ட­ணிக்கு பாதிப்பு வரும் சாத்­தி­யங்கள் உள்­ளன. அதனால் தான் அந்தக் கட்­சியின் தலை­வர்­களும், எம்.பிக்­களும் கொந்­த­ளிக்­கி­றார்கள்.

அதே­வேளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு, தமது பிர­தி­நி­தித்­துவ பலத்தை தக்­க­வைத்துக் கொள்­வதில் மாத்­தி­ர­மன்றி, கொழும்பில் தமிழர் பிர­தி­நி­தித்­து­வத்தைக் காப்­பாற்ற வேண்­டிய பொறுப்பும் உள்­ளது.

கொழும்பில் கூட்­ட­மைப்பும் போட்­டி­யிட்டு வாக்­கு­களைப் பிரிக்க, தமிழர் முற்­போக்கு கூட்­ட­ணிக்கு கிடைக்கும் வாக்­கு­களும் குறைந்து போக, இரண்டு தரப்­பு­களும் ஏமாந்து போய் விடக்­கூ­டாது.

இவ்­வா­றான நிலையை எல்லா தரப்­பு­களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதேவேளை, கொழும்பில் தமிழர் முற்போக்கு கூட்டணி ஐ.தே.க.வை விட்டு விட்டு, கூட்டமைப்புடன் இணைந்து தனியாகப் போட்டியிடவும் முன்வரப் போவதில்லை.

கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது பற்றி ஆராய்வதாக கூறியதும், நாங்களும் வடக்கில் போட்டியிடுவது பற்றி ஆராய்கிறோம் என்ற தொனியில் மனோ கணேசன் கூறியிருப்பது, ஏட்டிக்குப் போட்டியே ஆகும்.

தமிழ்க் கட்சிகளின் தலைமைகள், கட்சி ரீதியாக, இனத்துவ, பிராந்திய ரீதியாகவே சிந்திக்க முற்படுகின்றனவே தவிர, தமிழர் பிரதிநிதித்துவம் என்பதையும் ஒட்டுமொத்த தமிழர் நலன் என்பதையும் கண்டுகொள்வதாக இல்லை.

பொதுத்தேர்தலில் தமிழர்களின் ஒற்றுமையும் பலமும் சிதைக்கப்படுவதைக் காண்பதற்காக சிங்களப் பேரினவாத சக்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தலைமைகள், கட்சிகள் அவர்களின் ஆவலைத் தீர்ப்பதற்காகப் போட்டி போட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், குறைந்தபட்ச ஒற்றுமை பற்றிக் கூட ஆசைப்பட முடியா நிலையில், தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யூடியூப் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வருமானம்!! (மகளிர் பக்கம்)
Next post வௌிநாட்டுத் துருப்புக்கள் வௌியேற வேண்டும் என ஈரானில் தீர்மானம் நிறைவேற்றம்!! (உலக செய்தி)