நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 35 Second

கடந்த அத்தியாயத்தில் தொழில்முனைவோர் சந்திக்கும் மனநல சிக்கல்களும் அதற்கான தீர்வுகள் குறித்துப் பார்த்தோம். இந்த பகுதியில் தொழில்முனைவோர் தவிர்க்க வேண்டிய தப்பெண்ணங்கள் குறித்து பார்ப்போம்…

ஒரு தொழில் என்பது வெறும் வருமானத்திற்காக மட்டும் செய்வது இல்லை. ஒரு நவீன நாகரீகத்தில் அனைவருக்குமான தேவைகள் மாறுபடுகின்றன, ரசனை மாறுபடுகிறது. வெகு சிலரால் மட்டுமே தங்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தன்னை பொருத்திக்கொள்ள முடிகிறது. மற்றவர்களுக்கு அது ஒரு பெரும் சவாலாக நிற்கிறது. குடும்பத்தை, சமூகத்தை மீறி தனக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து அதில் வெற்றி அடைய முடிகிறது.

இப்படிப்பட்ட ஒரு மாற்று பாதையை தேர்ந்தெடுக்கும் ஒருவர் வெறும் பணத்தை மட்டுமே லட்சியமாக கொண்டு இயங்க முடியாது.

ஏதோ ஒரு நிறுவனத்தில் தனக்கு சம்பந்தமில்லாத ஒரு வேலையை செய்ய விரும்பாமல் ஒரு மாற்று பாதையை தேர்வு செய்யும் போது நாம் இன்னும் பொறுப்பான இடத்தில் நிறுத்தப்படுகிறோம். சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் நாம் முதலில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது நம் இலக்கில் உறுதியாக இருப்பதும் ஒரு சில மூடநம்பிக்கைகளை தவிர்ப்பதும் தான்.

அப்படி நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய கருத்துக்களின் பட்டியல் கீழே!

1.கருத்து: நிகழ்காலத்திற்கான டிரெண்ட் செட்டிங் ஐடியாக்கள் தேவை யதார்த்தம்: பிரச்னைகளுக்கான தீர்வே நல்ல ஐடியாவாகும்.கோயம்புத்தூரில் சேனிடரி நாப்கின்களை தயாரிக்கும் அருணாச்சலம் முருகானந்தம் எந்தவித பொருள் லாபத்தையும் எதிர்பார்த்து அந்த வேலையை தொடங்கவில்லை. ஒரு சமூக தேவையின் அடிப்படையில் தான் அவர் தனது தொழிலை முன்னெடுத்துச் சென்றார். அதாவது, ஒரு நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வை மட்டுமே அடைய விரும்பினாரே தவிர, புழக்கத்தில் இருந்த டிரெண்டை பொறுத்து தன் வேலையை தொடங்கவில்லை.

ஒரு தொழில் தொடங்க விரும்பும் நம்மை முதலில் அதிகம் கவர்வது நமது ஐடியா ஒரு டிரெண்ட் செட்டராக இருக்க வேண்டும் என்பது தான். இப்படி தொடங்கும் சில வேலைகள் ஒரு சில வருடங்களில் எந்தவிதமான சமூக பயனற்றதாக மாறிவிடும். அதற்கான எந்த அவசிய பயனோ இல்லாமல் மறைந்துவிடும்.

அதனால் ஒரு ஐடியாவை யோசிக்கும்போது அதற்கான வாடிக்கையாளர்கள், அதற்கான டிமாண்ட் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம். சில ஆண்டுகளில் அதன் தேவை வேறு என்னவாக மாறினாலும் அதில் சில மாற்றங்களை கொண்டுவந்தால் போதும் என்ற அளவிற்கு உங்கள் ஐடியா பிரமாண்டமானதாக இருப்பது அவசியம்.

2. கருத்து: அன்லிமிட்டெட் சுதந்திரமும் பொறுப்பும்யதார்த்தம்: சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கும். உங்களுக்கான தொழிலை நீங்கள் தொடங்கும்போது மற்றவர்களை காட்டிலும் கூடுதல் சுதந்திரம் நமக்கு இருப்பது உண்மைதான். நமக்கான வேலை நேரத்தை நாம் தேர்வு செய்து கொள்ளலாம், நமக்கு பிடித்தமான உடையை அணிந்து கொள்ளலாம்.

ஆனால் சுதந்திரத்துடன் சேர்ந்து நமக்கு இருக்கும் பொறுப்பையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் பொறுப்புணர்வு இல்லாமல் நாம் எடுக்கும்ஒரு முடிவு நம்மை மட்டும் இல்லாமல் நம்மை சார்ந்திருப்பவர்களையும் பாதிக்கும். நமக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள், நம்மை ஆதரிக்கும் குடும்பத்தினர், நம் தொழிலில் முதலீடு செய்தவர் என பலரையும் அது பாதிக்க வாய்ப்புள்ளது. அதனால் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரம் நமக்கானதாய் மட்டும் நினைத்துக்கொண்டு இயங்குவது சிக்கலானது.

3.கருத்து: குறுகிய காலத்தில் வளர்ந்து விடலாம்! யதார்த்தம்: பொறுத்தோர் பூமி ஆள்வார்.சிலருடைய வளர்ச்சியை பார்க்கும்போது அவர்கள் அதிர்ஷ்டசாலி என்றுதான் நினைக்க தோன்றும். ஆனால் அந்த வளர்ச்சிக்காக அவர்கள் எவ்வளவு உழைப்பையும் நேரத்தையும் அளித்திருக்கிறார்கள் என்பது நமக்கு பெரும்பாலும் தெரிவதில்லை.சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு என்னவென்றால் உடனடி ரிசல்டை எதிர்பார்ப்பது.

ஒரு கிரியேட்டிவான ஐடியா நம்மிடம் இருந்தாலும் அது உடனடியாக எல்லோருக்கும் போய் சேர்ந்துவிடாது. வால்ட் டிஸ்னியின் ஐடியாக்கள் எல்லாம் பயனற்றவை என்று அவரை ஒரு பத்திரிகை நிறுவனம் வேலையைவிட்டு நீக்கியது. இன்று டிஸ்னி நிறுவனத்தின் மதிப்பு 130 பில்லியன் டாலர். அதனால் உங்கள் வெற்றியும் தோல்வியும் முற்றிலும் உங்களை சார்ந்ததே தவிர அது ஏதோ அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ கிடையாது என்பதில் தெளிவாக இருங்கள்.

4.கருத்து: முன் – தீர்மானங்களும், ஓவர் கான்ஃபிடென்ஸும் வெற்றிக்கு அவசியம்
யதார்த்தம்: முன் – தீர்மானங்களே சறுக்கல்! ஒரு வெற்றியாளரின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அது அவரின் தனிப்பட்ட வெற்றியில்லை என்பதை நாம் சரியாக புரிந்துகொள்ளாமல் சில நேரங்களில் பல முன் தீர்மானங்களை அடைந்துவிடுகிறோம்.

வெற்றியின் ரகசிய சூத்திரத்தைப் புரிந்துகொண்டுவிட்டதாக நம்மை நாமே ஏமாற்றிகொள்கிறோம். உண்மை என்னவென்றால் அப்படி ஒரு ரகசிய சூத்திரம் எதுவும் கிடையாது. உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு நீங்கள் உங்களை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. அது ஒரு சிலரின் கூட்டியக்கம். உங்கள் வெற்றிக்கு பின்னால் எப்பொழுதும் ஒரு சில முக்கியமான நபர்களின் ஆலோசனை இருப்பது அவசியம்.

தன் மீது அதீத நம்பிக்கை கொண்டிருப்பது நல்லதுதான். ஆனால் ஒருமுறை யாராவது ஒருவரிடம் ஆலோசனை கேட்பது நம்மை எந்த விதத்திலும் பாதிக்க போவதில்லை.5.கருத்து: புது முயற்சியே வெற்றியை வழங்கும் யதார்த்தம்: தொடர் முயற்சியும், உழைப்புமே வெற்றியை கொடுக்கும்!

இது பெரும்பாலானவர்களிடம் காணப்படும் ஒரு மனப்பான்மை. எல்லோரும் பின்பற்றும் சராசரியான வழியை விட்டு விலகி புதிய முயற்சியில் செயல்படுவதால் மட்டுமே தனக்கு பெரிய வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்துவிடும் என்று சிலர் நம்புகிறார்கள்.

இதன் மூலம் ஒரு சில மாதங்களிலேயே பெரிய பணம் ஈட்டும் ஒரு கனவிலும் வாழத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த மனநிலையை தான் நாம் முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்படி ஒன்றும் நடக்கப்போவதில்லை. உங்கள் வெற்றி முழுவதும் உங்கள் உழைப்பை மையப்படுத்தியதே.
ஒரு அசாத்தியமான நம்பிக்கை நம் எல்லோருக்கும் தேவைதான்.

அந்த நம்பிக்கைதான் நம்மை வாழ்க்கையின் பல பரிணாமங்களை காட்டி நம்மை வழிநடத்திச் செல்லும். பல சிக்கலான சூழ்நிலைகளில் நம்மை கொண்டு நிறுத்தும் . அதை அணுகும் முறையும் அதை கடந்து செல்லும் முறையும் தான் நமக்கு கிடைக்கும் அனுபவம். அந்த அனுபவத்தின் அடிப்படையில் நமது நேர்மையான முயற்சிகளே நம்மை சரியான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும்.

தொடர்ந்து, தொழில்முனைவுப் பாதையில் இருந்து நிறுவனங்களாக மாறுபவர்களுக்கான வழிகாட்டல். நிறுவன நடவடிக்கைகளின் வகைகளும், உங்கள் நிறுவனத்திற்கு எது சிறந்தது என்றும் அடுத்து பார்ப்போம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உப்புமாக்கு நான் சொத்தையே எழுதி வச்சிடுவேன்!- நடிகர் சரவணன்!! (மகளிர் பக்கம்)
Next post தமிழர் அரசியலில் கருத்து உருவாக்கிகளின் வகிபாகம் !! (கட்டுரை)