வீட்டில் இருந்துக் கொண்டே வேலை செய்யலாம்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 36 Second

பத்து வருடங்களுக்கு முன் ஒரு ஊழியர் அலுவலகம் வந்தால் அவர் உடனடியாக வருகைப் பதிவேட்டில் தான் பதிவு செய்ய வேண்டும். அவர் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அன்றைய தினம் விடுப்பாக கருதப்படும். ஆனால் இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து வந்த காரணத்தால், அலுவலகம் குறித்த அனைத்து விவரங்களையும் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவர் அலுவலகம் வந்து தான் வேலையை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அவர் வீட்டில் இருந்தபடியே அவரின் அலுவலக வேலையை செய்யலாம். அதற்கு அவர் தன் மேலதிகாரி அல்லது எச்.ஆர் நிர்வாகியிடம் தான் வீட்டில் இருந்தே வேலைப் பார்க்க இருப்பதாக தெரிவித்தால் போதும். மேலும் அவரின் அலுவலகம் சார்ந்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவும் முடியும். இது போன்ற பயன்பாட்டில் இருக்கும் பல ஆப்களை தான் தற்போதுள்ள தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி வருகிறது. அவை என்ன… அதன் சிறப்புகள் என்ன என்று பார்க்கலாம்.

ஃபேக்டோ எச்ஆர் (FactoHR)

இது முழுக்க முழுக்க அலுவலகங்கள் சார்ந்து இயக்கப்படும் ஆப். குறிப்பாக மனித வளத்துறையினர் தங்களின் அலுவலக ஊழியர்களுக்கு தேவைப்படும் அலுவலக விவரங்கள் மற்றும் செய்திகளை இதன் மூலம் ஷேர் செய்யலாம். இதில் உள்ள ‘பிளக் மீ’ என்ற அமைப்பு ஊழியர் அலுவலகத்தில் இல்லாத பட்சத்தில் அலுவலகம் சார்ந்த குறிப்புகள் மற்றும் செய்திகளை பகிர்ந்து கொள்ள உதவும். அது மட்டும் இல்லாமல் இந்த ஆப் மூலம் ஊழியர்கள் தங்களின் அலுவலக சார்ந்த விவரங்களை கண்டறிய முடியும். அவை…

*அவர்களின் வருங்கால வைப்பு நிதி குறித்த அறிக்கைகள்

*வருடாந்திர அறக்கட்டளை அறிக்கை

*ஊதியம் மற்றும், YTD வருவாய் கணக்கு

*ஊதியம் குறித்த விவரங்கள் பதிவிறக்கம் வசதி

*வருமான வரி அறிக்கையைப் பதிவிறக்கம் செய்யலாம்

*வருகை திருத்தும் விண்ணப்பம்

*பயண கோரிக்கை விண்ணப்பம்

*விடுமுறை விண்ணப்பம்

*விடுமுறை இருப்பு குறித்த நிலவரம்

*ஜி.பி.எஸ் முறையில் வருகையை பதிவு செய்யும் வசதி.

*பயண செலவு மேலாண்மை

*மொத்த விடுப்பு, பயணம் குறித்த விண்ணப்பம் போன்றவற்றை நாம் இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஈஸ்எச்ஆர் (EazeHR)

நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரையும் பற்றிய தகவல்களை சேமிக்க உதவும் ஆப் தான் ஈஸ்எச்ஆர்.

*ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் அவர் ராஜினாமா செய்யும் காலம் வரை அவரை பற்றிய முழு தகவல்களை சேமிக்க முடியும்.

*அவர்களின் அலுவலக நேரங்கள், விடுமுறைகள் மற்றும் வேலைக் குறித்த திட்டங்கள் அனைத்தும் இதில் தெரிந்து கொள்ளலாம்.

*பயோமெட்ரிக் மற்றும் ஸ்மார்ட் அட்டை மூலம் அவர்கள் அலுவலகத்திற்கு வந்த நேரத்தை கணக்கிட்டு அவர்கள் குறித்த நேரத்திற்கு வந்துள்ளனரா அல்லது தாமதமாக வந்துள்ளனரா என்று சரி பார்க்க முடியும்.

*ஊழியர்களில் யாரேனும் சிலருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றாலும் அது குறித்த செய்தியினை பகிரவும் மற்றும் அவர்கள் பயிற்சி குறித்த விவரங்களை இதில் தெரிவிக்கலாம்.

எச்ஆர் மன்திரா (HRMantra)

இப்போது உள்ள கோடிக்கணக்கான ஊழியர்களுள் நேரடியாவோ அல்லது செய்தி மூலம் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் பயன்படுத்துவது தங்கள் கையில் தவழும் ஆண்ட்ராய்ட் செல்போன்களை தான். இதன் மூலம் அலுவலகம் குறித்த செய்திகளை பரிமாறுதல் மட்டும் இல்லாமல், ஒரு வணிகத்தையும் செயல்படுத்த முடியும். ஆனால் ஒவ்வொரு ஊழியர் குறித்த விவரங்களை நாம் சேமித்து வைப்பது அவ்வளவு எளிதல்ல.

அதற்கான வழியினை வகைப்படுத்தி தருகிறது இந்த ஆப். இந்த ஆப் மூலம் ஒரு ஊழியர் தங்களின் நிறுவனத்திற்கு வேலைக்கான நேர்காணலுக்கு வந்த நாள் முதல் அவர் அலுவலகம் சேர்ந்த பிறகு அவரின் வேலைக் குறித்த தகவல்கள் மற்றும் விடுப்பு நிலவரங்கள், கடைசியாக அவர் ராஜினாமா செய்த நாள் குறித்த அனைத்து தகவல்களையும் இதில் பதிவு செய்ய முடியும். இந்த ஆப்பினை எல்லா வகையான ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்த முடியும். ஊழியர்கள் இதில் தங்களுக்கு தேவையான விவரங்கள் அதாவது அவர்களின் அலுவலகம் சார்ந்த திட்டங்கள், கலந்துரையாடல்கள் அனைத்தும் சேமித்து வைக்க முடியும்.

எச்ஆர் ஒன் (HROne)

எச்ஆர் ஒன் ஆப் மூலம் உங்களின் அன்றாட அலுவலக விவரங்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே ஒரு நல்ல ஆரோக்கியமான உறவினை மேம்படுத்த முடியும். மேலும் நீங்கள் அலுவலகத்தில் இருந்தாலோ, வெளியூரில் இருந்தாலோ அல்லது பயணம் மேற்கொண்டாலும், உங்கள் அலுவலகம் சார்ந்த செய்திகள் மற்றும் உங்களின் அலுவலக சக ஊழியர்களுடன் தொடர்பில் இருக்கலாம். அல்லது ஒரு டீமின் தலைவராக இருப்பின் இருக்கும் இடத்தில் இருந்தே அவர்களுக்கான வேலைக் குறித்து அறிவிப்பு தெரிவிக்கலாம். இது மட்டும் இல்லாமல் இந்த ஆப் சில அம்சங்களை வழங்கி வருகிறது.

*அலுவலகம் குறித்து வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது, உங்களின் வருகை பதிவினை நீங்கள் இந்த ஆப் மூலம் குறிப்பிடலாம்.

*நிறுவனத்தில் புதிதாக யாரேனும் சேர்ந்து இருந்தால் அவர்கள் எந்த பிரிவில் சேர்ந்துள்ளனர் என்றும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

*நிறுவனம் குறித்த அறிவிப்புகள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் இதில் குறிப்பிடப்படும்.

*நேர்காணல் மற்றும் சிறப்பு பயிற்சி குறித்த அறிவிப்பும் இதில் வெளியாகும்.

*விடுப்பு எடுப்பது மட்டும் இல்லாமல் அவர்கள் விடுப்பு நாட்கள் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

என்ஸ்பயர் எச்ஆர் (Enspire HR)

ஒரு நிறுவனம் போட்டித் தன்மையுடன் இருக்க புதிய உத்திகளை மாற்றியமைக்க வேண்டும். நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெற்றியை உறுதி செய்வதற்கான முக்கிய துறைகளில் மனித வள மேலாண்மை ஒன்றாகும். ஆகவே, ஒரு நிறுவனத்திற்குரிய சவால்களை போட்டி வணிகச் சூழலில் நிர்வகிக்க ஒரு மனித வள மேலாண்மை அமைப்பு என்பது மிக முக்கிய கருவியாகும். பல அம்சங்கள் கொண்ட என்ஸ்பயர் எச்.ஆர் ஆப் ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் குறித்த அனைத்து விவரங்கள் மற்றும் நிர்வாகத்தினை மிகவும் திறம்பட கையாள உதவுகிறது.

மேலும் இது வணிகத்தின் போட்டித்தன்மையை பல வழிகளில் மேம்படுத்துகிறது. என்ஸ்பயர் என்பது மனித வள மேலாண்மை தகவல் அமைப்பின் ஒரு நிலை. இந்த அமைப்பு ஒரு நிறுவனத்தின் மனிதவள தேவைகளை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. பணியாளர் மற்றும் நிர்வாகத் துறைகளின் செயல்பாடுகளை தானியக்கமாக்குவதற்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வித்தியாசமான பூக்கள்!! (வீடியோ)
Next post இணை தேர்வு வழிமுறை!! (அவ்வப்போது கிளாமர்)