சமாதானப் பேச்சுக்கான திகதி ஜனாதிபதியினால் அறிவிப்பு! புலிகளின் பதில் இன்று மாலை தெரியவரும்!!

Read Time:2 Minute, 50 Second

LTTE-SLK.jpgஅரசுக்கும் எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை இம்மாதம் 30 ஆம் அல்லது அடுத்த மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது. பேச்சுவார்த்தைக்கான இடம் பின்னர் தீர்மானிக்கப்படலாம் என்று நோர்வே விசேட து}துவர் ஹன்ஸன் பவரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல அறிவித்துள்ளாரர். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது

ஜனாதிபதியின் இச்செய்தி எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு இன்று நோர்வே விசேட து}துவர் மூலம் அறிவிக்கப்படும். கடந்த 23 வருடகால வரலாற்றில் சமாதான பேச்சுவார்த்தை என்கின்ற போர்வையில் எல்.ரீ.ரீ.ஈ.யினர் பல மோசடிகளில் ஈடுபட்டு வந்தனர். எனவே மீண்டும் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை முன்வைக்கும் நிலையில் அரசு உள்ளது.

பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்தில் ஆயுதங்களை கொள்வனவு செய்வதில்லை, அக்காலப்பகுதியில் எவ்விதமான தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளிடம் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் உறுதி வழங்க வேண்டும்.

இந்நிபந்தனைகளை எல்.ரீ.ரீ.ஈ.யினர் மீறினால் அதற்கான பதில் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு அரசுக்கு பூரண அதிகாரம் உள்ளது என்றும் விசேட து}துவரிடம் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இச்செய்தியோடு கிளிநொச்சி சென்றுள்ள ஹான்சன் பவர் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அவர்களின் செய்தியுடன் இன்று மாலை கொழும்பு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கான தேர்தல் : சஷி தரூர் விலகினார்!
Next post 30 கோடியை எட்டும் அமெரிக்க மக்கள் தொகை