பிஸியோதெரபியே போதும்! (மருத்துவம்)

Read Time:2 Minute, 48 Second

தோள்பட்டை இடப்பெயர்வு(Shoulder dislocation) பிரச்னை ஏற்படும்போது அறுவை சிகிச்சை செய்தே எலும்புகளை இணைத்து வருகின்றனர். ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக பிஸியோதெரபி என்னும் இயன்முறை மருத்துவத்தின் வழியேயும் பின் விளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிக்கலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள் இயன்முறை மருத்துவர்கள்.

சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகளால் எலும்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கலாம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்தும்கூட மீண்டும் அதே இடத்தில் பிற்காலத்தில் வலி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கெல்லாம் இயன்முறை மருத்துவம் நல்ல பலனைத் தருகிறது. முதலில் தோள்பட்டை இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளதா என்று X-Ray, MRI ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதற்கு ஏற்ற Shoulder brace அணிவித்து பிஸியோதெரபிஸ்ட்டுகள் சிகிச்சை அளிப்பார்கள். தோள் பட்டை இடப்பெயர்வு முதற்கட்ட சிகிச்சையாக வலி நிவாரண மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. இயன்முறை மருத்துவத்தில் தோள்பட்டை தசை பகுதிகளை வலுவூட்ட உடற்பயிற்சி, சுடு ஒத்தடம் அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுக்கப்படுகிறது.

இத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை முறையிலும் மாற்றம் தேவை. இதுபோல் பிசியோதெரபி சிகிச்சை முறையை எடுத்துக் கொள்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. மற்ற சிகிச்சைமுறை போன்று அறுவை சிகிச்சை வலியோ இதில் கிடையாது. உடலிலிருந்து ரத்தம் வெளியேற வாய்ப்பில்லை. தொற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பில்லை. பிஸியோதெரபி சிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் தசை உறுதி பெறுவர். உடைந்த எலும்பு இணைப்பு பலம் பெறும். மேலும் Shoulder Brace அணிவதால் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் குணம் அடைந்து பழைய இயல்பு நிலைமைக்கு மாறிவிடலாம் என்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடனமே என் சிறகுகள்!! (மகளிர் பக்கம்)
Next post உலகில் உள்ள 10 வித்தியாசமான மற்றும் அதிசய தாவரங்கள்!! (வீடியோ)