கொரோனா வைரஸ் – இதுவரை 80 பேர் பலி – 3000 பேர் பாதிப்பு!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 31 Second

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல், அதனைக் கட்டுப்படுத்த சீன அரசு எடுத்துள்ள முயற்சிகள், சீனாவில் உள்ளவர்களின் நிலை பற்றிய முழுமையான விபரங்கள்…

கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் புத்தாண்டு விடுமுறையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல நகரங்களுக்குப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அரசு கணக்கின்படி, சீனாவில் 2744 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 300 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிகிறது.

ஹூபே மாகாணத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56லிருந்து 76ஆக உயர்ந்துள்ளது.

சீனாவுக்கு வெளியே, தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், தைவான், மலேசியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், நேபாளம், கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 41 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவுக்கு வெளியே எந்த மரணமும் பதிவாகவில்லை.

வுஹான் நகரத்திலிருந்து தான் இந்த நோய் தோற்று ஏற்பட்டுள்ளது. அந்த நகரத்தில் 11 மில்லியன் பேர் வசிக்கிறார்கள். அந்த நகரத்திலிருந்து பிற இடங்களுக்குப் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து லட்சம் மருத்துவர்கள் சிகிச்சை மற்றும் வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சீன நகரமான வுஹானில் ஆறு நாட்களில் ஒரு மருத்துவமனையை உருவாக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் ரயில் முன்பு நின்று செல்பி எடுத்த பெண் உயிரிழப்பு!! (உலக செய்தி)
Next post அழியாத கோலங்கள்-கலை வடிவில் போராட்டத்தை வைரலாக்கிய பெண்கள்!! (மகளிர் பக்கம்)