கவலை வேண்டாம்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 16 Second

Coronavirus Special Update

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பெயராக மாறிவிட்டது கொரோனா வைரஸ். சீனாவில் மர்மக்காய்ச்சலாக தொடங்கி தற்போது பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருப்பதால் பீதியும் அதிகமாகி இருக்கிறது. Medical Emergency என்றும் சொல்லும் அளவு சீனா முடங்கிப் போய்விட்டது.
கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது? இந்தியாவுக்கும் ஆபத்து உண்டா? எப்படி தவிர்ப்பது?

கரோனா வைரஸ் என்பது பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகையான தொற்றுநோய். பாதிக்கப்பட்டவர்களின் இருமல், மூச்சுக்காற்று, சளி, ரத்தம் மூலமாக பிறருக்கும் பரவ வாய்ப்புள்ளது.

சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ளது. எனவே பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி உடனே சிகிச்சையளிக்க வேண்டியது அவசியம்.

கரோனா வைரஸ் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுவது காய்ச்சல், சளி, சுவாசக் கோளாறு, தலை வலி, தொண்டை வலி என கண்டறியப்பட்டுள்ளது.

2002, 2003 ஆகிய ஆண்டுகளில் சீனா, ஹாங்காங் நாட்டில் Severe acute respiratory syndrome(SARS) என்ற வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. அந்த சார்ஸின் 70 சதவீதத் தன்மையை கொரோனா கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடல் உணவுகள் விற்பனை நிலையங்கள், கோழிகள், பாம்புகள், வவ்வால்கள், பண்ணை விலங்குகள் ஆகியவை விற்பனை செய்யும் இடங்களில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கும் என தெரிய வந்துள்ளது. மேலும் இதன் மூலம் கரோனா வைரஸ் பாம்புகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்பதற்கான அதிகமான சான்றுகள் கிடைத்துள்ளன. பாம்புகளின் உடலில் இருக்கும் செல்களும் இந்த வைரஸில் உள்ள செல்களுக்கும் அதிகமான ஒற்றுமை இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

இன்னும் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு வரவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஆனாலும் நம் நாட்டில் ஏற்படாமல் தவிர்க்க எச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். கைகளை சுத்தமாகக் கழுவுவது, இருமல் வரும்போதும் தும்மலின்போதும் கைக்குட்டைகளைக் கொண்டு வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை மூடிக்கொள்வது அடிப்படையான பாதுகாப்பு நடவடிக்கைகள்.

வயது முதிர்ந்தவர்கள் மற்றும் குழந்தைகள் வைரஸ் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகக் கூடும். எனவே, இவர்கள் நலனில் கூடுதல் அக்கறை தேவை.

கொரோனா வைரஸ் முதன்முதலில் தொண்டை வழியாகவே உள்ளே செல்கிறது. எனவே, தொண்டைப் பகுதி வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்வது முக்கியமான தடுப்பு வழி. தொண்டைப் பகுதி ஈரமாக இருக்கும் பட்சத்தில் இந்த வைரஸ் உள்ளே செல்லாது என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள். வைரஸ் அபாயம் அதிகம் உள்ளவர்கள் கையில் ஒரு வாட்டர் பாட்டில் வைத்துக் கொண்டு 10 நிமிடத்துக்கொருமுறை தொண்டைப் பகுதியை நனைத்துக் கொள்ள வேண்டும். Keep your Throat Constantly Moist என்பதை தாரக மந்திரமாகவே கொள்ளுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நோய்க்கான பதற்றம் தணியும் வரை பொது இடங்கள், நெருக்கமான மக்கள் வாழும் இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள். சென்றால் மாஸ்க் அவசியம்.

வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். அதிகம் வறுக்கப்பட்ட, எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். இறைச்சி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நிபா, எபோலா போன்ற வைரஸ் நோய்கள் எதிர்கொண்ட நாம் இதிலும் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருந்தால் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க நிச்சயம் தடுக்கலாம். எனவே, கவலை வேண்டாம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்க்கையில் சினிமாவுக்கும் பங்குள்ளது!! (மகளிர் பக்கம்)
Next post மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் ரகசிய கடற்கரைகள் ! (வீடியோ)