நௌகாசனம்!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 27 Second

செய்முறை

விரிப்பின் மேல் வசதியாக மல்லாந்து படுத்துக்கொள்ளவும். இது ஆரம்பநிலை.ஆழமாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். சுவாசத்தை உள்ளடக்கி, இரு கால் மற்றும் கைகளைத் தரையில் இருந்து 15 செ.மீ. மேலே தூக்கவும். அதே நேரம் கழுத்து மற்றும் தோள்பட்டையை உயர்த்தி கால் விரல்களைப் பார்க்கவும்.புட்டப்பகுதியில் உடலை சமநிலைப்படுத்தி நிற்பது இறுதிநிலை. உடல் ஒரு படகு போல இருப்பதால் இதற்கு நெளகாசனம் என்று பெயர். 10 விநாடிகள் இறுதி நிலையில் நின்று பின் மெதுவாக சுவாசத்தை வெளியேற்றி ஆரம்பநிலைக்கு வரவும். 3-5 முறைகள் இப்பயிற்சியைச் செய்யலாம்.

பயன்கள்…

இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. டென்ஷனை குறைத்து ஓய்வளிக்கிறது. காலை எழுந்தவுடன் செய்தால் சோம்பல் நீங்கி உடனடி புத்துணர்வு கிடைக்கும். வயிற்றுத் தசைகளை இறுக்கம் அடையச் செய்வதனால் எடை குறைய உதவுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…!! (மருத்துவம்)
Next post தனுராசனம்!! (மகளிர் பக்கம்)