அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை ஜெனீவாவில்! இம்மாதம் 28 முதல் 30ம் திகதி வரை!! -அரசாங்கம் அறிவிப்பு-

Read Time:1 Minute, 39 Second

00003.gifஅரசாங்கத்துக்கும் எல்.ரீ.ரீ.ஈ. யினருக்குமிடையிலான அடுத்த சுற்றுச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நிபந்தனைகள் எதுவுமின்றி இம்மாதம் 28ம் திகதி முதல் 30ம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறும் என பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்;ளார். இதேவேளை புலிகள் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டால் அதற்கான பதில் தாக்குதல்களை மேற்கொள்ளும் உரிமையை அரசாங்கம் கொண்டு செயற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒக்டோபர் 30 அல்லது நவம்பர் 10ம் திகதிகளில் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தனது விருப்பத்தினை நோர்வேயின் விசேட து}துவர் ஜோன் ஹான்சன் பவரிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

ஆயினும் அரசாங்கத்தின் செய்தியுடன் நேற்று கிளிநொச்சி சென்றிருந்த ஹான்சன் பவரிடம் எல்.ரீ.ரீ.ஈ.யினர் இம்மாதம் 28 முதல் 30ம் திகதி வரை பேச்சுக்களை நடத்துவதற்கான யோசனைகளை தெரிவித்திருந்தனர். புலிகளின் இந்த பதிலை மிக கவனமாக ஆராய்ந்த பின்னரே அரசாங்கம் தனது சம்மதத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சேலம் அரவாணிக்கு அமெரிக்க அரவாணி பிரசாரம்
Next post வட கொரியாவிற்கு அமெரிக்கா, ஐ.நா. எச்சரிக்கை!