ஈராக்கில் இருந்து அமெரிக்கா வெளியேறல் !! (கட்டுரை)

Read Time:12 Minute, 45 Second

உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இராணுவத் தளங்களை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. அது இத்தாலி, ஜப்பான், ஹொண்டுரஸ், பேர்கினா பாஸோ, ஈராக், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் தளங்களை அமைத்துள்ளது. ஐக்கிய அமெரிக்க ஆர்வத்தையும் பிராந்திய ஸ்திரத்தன்மையையும் இராணுவ இருப்பு பாதுகாக்கிறது.

ஆயினும்கூட, குறித்த நிலைமையைத் தக்கவைக்க ஐக்கிய அமெரிக்கா பல தடைகளை எதிர்கொள்கிறது. ஈராக்கில், எதிர்ப்பாளர்களுக்கு எதிரான உள் அமைதியின்மை மற்றும் வன்முறை மோதல்கள் தொடர்கின்றன. அந்நாட்டில் உள்ள ஐக்கிய அமெரிக்கப் படைகளின் இருப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பிலான சட்ட சிக்கல்கள் குறித்து அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர். ஈராக்கில் ஐக்கிய அமெரிக்க இராணுவ இருப்புக்கு எதிராக மக்கள் அழுத்தம் அதிகரிக்கிறது. இது ஐக்கிய அமெரிக்காவுக்கான பிரச்சினைகள் மற்றும் சவால்களைக் குறிக்கிறது.

இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் – குறிப்பாக ஈராக்கில் இராணுவ இருப்பு தொடர்பான பிரச்சினைகள் என்ன என்பது பற்றியே இப்பத்தி விவாதிக்கிறது. தலிபான் – ஐக்கிய அமெரிக்க மோதல்கள் ஒரு முடிவுக்கு வந்ததன் பின்னராக, ஈராக்கில் ஐக்கிய அமெரிக்கா நிலை கொண்டுள்ளமை ஒரு பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்தியகிழக்கைப் பொறுத்தவரை, ஐக்கிய அமெரிக்கா சந்திக்கும் சூழ்நிலைகள் மற்றும் சிக்கல்கள் ஏராளம். முதலாவதாக, அடிப்படை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மேலும், ஈராக் அரசியலில் ஐக்கிய அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகள் சாதாரணமாகிவிட்டன. கூடுதலாக, பயங்கரவாதம் இப்பகுதியில் இன்னும் ஒரு கவலையாக உள்ளது. தவிர, அதிகார சமநிலை மற்றும் பிராந்திய மோதல்களுக்கு மத்திய கிழக்குக்கு அதிக ஆதாரங்கள் தேவைப்படுகின்றன, ஆனால் சீரற்ற ஐக்கிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிலைமையை சிக்கலாக்குகிறது.

ஐக்கிய அமெரிக்க இராணுவ இருப்பு ஆசிய-பசிபிக் முதல் மத்திய கிழக்கு வரையிலான உள்ளூர்வாசிகளின் உணர்வைத் தொட்டுள்ளது. ஈராக்கைப் பொறுத்தவரையில், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் நடந்தன. ஒக்டோபர் மாத அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெளிநாட்டு தலையீட்டுக்கு எதிரானவை மற்றும் ஐக்கிய அமெரிக்க இராணுவத் தலையீட்டால் நிறுவப்பட்ட 2003ஆம் ஆண்டுக்கு பிந்தைய அரசமைப்பை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இவ்வாண்டு ஜனவரி மாதம் நடந்த ஐக்கிய அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அவை சார்ந்த பிரச்சினைகள் குறித்த ஏற்கெனவே மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டங்களின் இரண்டாம் பாகமாக அமைகின்றன. அவை, அனைத்து வெளிநாட்டு படைகளையும் நாட்டுக்கு வெளியே செல்லவே கோருகின்றன.

இரண்டாவதாக, ஈராக் அரசாங்கத்துக்குள் கூட, அதிகாரிகள் பாதுகாப்பை விட இறையாண்மையில் அதிக அக்கறை எழுப்புவதால், ஐக்கிய அமெரிக்க எதிர்ப்பு கருத்து இலகுவில் மங்கப்போவதில்லை. ஈராக், தனது பிராந்தியத்தை தனது அண்டை நாடுகளுக்கு எதிராக ஒரு ஏவுதளமாக பயன்படுத்த அனுமதிக்காது என்று அறிவித்துள்ளது. ஈராக் ஜனாதிபதி சாலிஹ் இது பற்றி கூறுகையில், “நமது அரசமைப்பைக் கடைப்பிடிப்பது நமது இறையாண்மையின் பொறுப்பு. நமது அண்டை நாடுகளுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் ஈராக் ஒரு தளமாக பயன்படுத்தப்படமாட்டாது” என கூறியமை கருத்தில் எடுக்கப்படவேண்டிய ஒரு விடயமாகும்.

மற்றொரு உதாரணம், ஈராக் நாடாளுமன்ற பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர் கரீம் அலவி, “நமது எல்லைகள் மற்றும் வான்வெளியில் உள்ள இடைவெளிகளின் மூலம் ஐக்கிய அமெரிக்கா சிரியாவிலிருந்து ஈராக்குக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழைத்து வரப்போகிறது” என்ற அறிக்கைகளை வெளியிட்டிருந்தமை, ஏன் ஈராக், ஐக்கிய அமெரிக்காவுக்கு இனியும் தொடர்ச்சியான பிராந்திய உதவியாளராக இருக்கமுடியாது என்பதை காட்டியிருந்தது. ஜனாதிபதி சாலிஹ் மற்றும் கரீம் அலவியின் பேச்சு ஈராக் அரசாங்கம், ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ இருப்புக்கு எதிராக சில வலுவூட்டப்பட்ட உள் எதிரிகளைக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படையாகவே குறிக்கிறது.

மூன்றாவதாக, ஐக்கிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முரண்பாடு, நிலைமையை மோசமாக்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் வாக்குறுதியையும் தாராள மனப்பான்மையையும் நம்பியிருந்த ஐக்கிய அமெரிக்க கூட்டணிகள், ஐக்கிய அமெரிக்காவுடனான அவர்களின் உறவின் செல்லுபடியை கேள்விக்குள்ளாக்கத் தொடங்குகின்றன. நாடுகள், தங்கள் நாடுகளில் ஐக்கிய அமெரிக்க இராணுவத் தளங்களை அனுமதிக்க உள்நாட்டு பாதுகாப்பு முக்கிய காரணமாக இருந்தபோதிலும், ஐக்கிய அமெரிக்க இராணுவ இருப்பு நாடுகளைப் பாதுகாக்கிறதா அல்லது அண்டை நாடுகளுக்கு விரோதப் போக்கை அதிகரிக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பதை உணர தலைப்படுகின்றன. நாட்டுக்குள் இருந்து ஏவப்பட்ட ஐக்கிய அமெரிக்க ஏவுகணை வீச்சுக்கள் குறித்து ஈராக் மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. தலைநகர் பக்தாத்தில் ஈரானிய இராணுவத் தளபதி குவாசிம் சொலைமானி கொல்லப்பட்டதைக் கண்டு ஈராக் ஐக்கிய அமெரிக்காவில் மேலதிகமாகவே ஏமாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்காவதாக, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதச் சிந்தனைகள், ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியாக ஈராக்கில் நிலைத்து நிற்பதை சிக்கலாக்குகின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் தோல்வி ஒரு ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான மேற்கின் வெற்றியாக இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பில் சர்வதேச நாடுகள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. தீவிரவாதிகள் ஜிஹாத் என்ற பெயரில் போராளிகளை அணிதிரட்டுகின்றனர். தீவிரவாதத்தின் உளவியல் வளைகுடா போரை அடிப்படையை கொண்டு அறியமுடியுமாயின், இதில் பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் வெற்றிகரமான ஈடுபாட்டைப் பற்றி கோபமடைந்தன.

மேற்கத்திய படையெடுப்பாளர்களிடமிருந்து முஸ்லிம் உலகைப் பாதுகாக்க ஜிஹாதிசத்தின் உணர்வு மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ளது. ஒருபுறம், ஒரு நபர், ஒரு குடும்பம் மற்றும் ஒரு அரசின் பாதுகாப்பின்மை பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் ஒரு தேர்வாக ஆக்குகிறது. மறுபுறம், நிலையற்ற அரசியல் சூழல் பயங்கரவாதத்தை வளர்ப்பதற்கான சூழலை வழங்குகின்றது. தீவிரவாதிகள் தமது இலக்குகளை அடைய மதத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் இந்நிலை, ஐக்கிய அமெரிக்கா பிராந்தியத்திலிருந்து வெளியேறாவிட்டால், அது நூற்றுக்கணக்கான ஜிகாதிகள் உருவாக்கத்துக்கு காரணமாக அமையும்.

ஐந்தாவது, ஒரு பெரிய மூலோபாய கண்ணோட்டத்தில் அமெரிக்காவின் ஈராக்கிய இருப்பை பார்ப்பதாயின் அது பிராந்திய அதிகார சமநிலையை பேணுவதில் பிரச்னையை தோற்றுவிக்கும். ரஷ்யாவும், சீனாவும் இப்பகுதியில் அதிக செல்வாக்கை நாடுகையில், அது ஐக்கிய அமெரிக்க மூலோபாயத்தை பாதிக்கும். பிராந்திய விவகாரங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ​​நாடுகள் ஐக்கிய அமெரிக்காவை முழுமையாகவே தங்கியிருக்காது. மாறாக, அவர்கள் இரண்டு தரப்பிலிருந்தும் நன்மைகளைப் பெற விரும்புகிறார்கள். பிற சக்திகளின் ஈடுபாடு ஐக்கிய அமெரிக்க மூலோபாயத்தின் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. உதாரணமாக, ஐக்கிய அமெரிக், கா ஈரானிடமிருந்து பிற நாடுகளை எண்ணெய் பொருட்கள் வாங்குவதை தடை செய்ய விரும்புகிறது.

ஈரானுக்கு சீனா அல்லது பிற வாங்குபவர்களுடன் வர்த்தகம் செய்ய ஒரு தேர்வு இருக்கும் பொழுது ஈரான் ஐக்கிய அமெரிக்கா குறித்த பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்துவதை விரும்பாது – விரும்பவில்லை. கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் முதல், சீனாவும் ஈரானும் சீன யுவானில் வர்த்தக எண்ணெய் குறித்து விவாதித்தன. ஈரானின் எண்ணெய் பொருளாதாரத்தில் சீனா 280 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யும் என்று கூறப்படுகிறது; இது பிராந்தியத்தில் சீனா – ஐக்கிய அமெரிக்கா போட்டி நிலையை உருவாக்குவதுடன், அப்போட்டியில் மத்தியில் ஒரு வலிமையற்ற நாடாக இருக்க ஈராக் விரும்பவில்லை

இவற்றின் மத்தியிலேயே, ஈராக் தொடர்ச்சியாக அமெரிக்க வெளியேற்றம் தொடர்பாக கவனம் செலுத்திவருவதை அவதானிக்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி!! (மகளிர் பக்கம்)
Next post குழந்தை வளர்ப்பு! கவனக் குறிப்பு!! (மருத்துவம்)