தலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 35 Second

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான மருத்துவ முறைகளை பார்த்து வருகிறோம். இந்நிலையில், தலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள் குறித்து பார்க்கலாம்.

தலைமுடி அழகுக்கு அடையாளமாக விளங்குகிறது. இளமையில் ஏற்படும் வழுக்கை, இளநரை ஆகியவற்றால் மன உளைச்சல் ஏற்படுகிறது. வெங்காயம், கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், கருஞ்சீரகம் போன்றவற்றை கொண்டு பொடுகு, முடிகொட்டுவது உள்ளிட்ட பிரச்னைகளை போக்குவது, முடி கருமையாக வளர்வதற்கான தைலம் குறித்து பார்க்கலாம்.

சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி முடிகொட்டுவதை தடுக்கும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம், நல்லெண்ணெய், ஜடாமாஞ்சில். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். சிறிது ஜடமாஞ்சில், சின்ன வெங்காய பசை சேர்க்கவும். தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி குளிப்பதற்கு முன்பு 15 நிமிடங்கள் ஊறவைத்து தலை குடித்தால் பொடுகு இல்லாமல் இருக்கும். முடி கொட்டுவது குறையும்.

ஜடாமாஞ்சில் மூலிகை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது, முடிவளர்வதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. முடி உதிர்வது, தலையில் அரிப்பு ஏற்பட காரணமாக விளங்கும் பூஞ்சை காளான்களை போக்க கூடியது. பல்வேறு நன்மைகளை கொண்ட வெங்காயம் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. முடிவளர்வதை தூண்டுகிறது. வெள்ளை கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி கூந்தல் தைலம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வெள்ளை கரிசலாங்கண்ணி, தேங்காய் எண்ணெய், கருஞ்சீரகம். 50 மில்லி தேங்காய் எண்ணெய், அரை ஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு ஸ்பூன் வெள்ளை கரிசலாங்கண்ணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைத்து தினமும் தேய்த்து வந்தால், முடி கொட்டுவது நிற்கும், இளநரை மறையும். முடி கருமையாக வளரும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கரிசலாங்கண்ணியில் வெள்ளை, மஞ்சள் என இருவகை உண்டு. இது உவர்ப்பு தன்மை உடையது. பல்வேறு சத்துக்களை கொண்டது. நெல்லிக்காயை பயன்படுத்தி தலைமுடி வளர்வதற்கான தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நெல்லிக்காய், அதிமதுரப்பொடி, தேங்காய் எண்ணெய். துருவிய நெல்லிக்காயுடன், சிறிது அதிமரப்பொடி, தேங்காய் எண்ணெய், பால் விட்டு குழம்பு பதத்தில் காய்ச்சவும்.

இதை ஆறவைத்து தலைக்கு தடவி பின்னர் குளித்தால் முடி கொட்டுவது நிற்கும். தலைமுடி நன்றாக வளரும். தலைமுடி ஆரோக்கியம் அடைகிறது. பொடுகு இல்லாமல் போகும். நெல்லிக்காய் அற்புதமான தலைமுடி தைலத்தை தருகிறது.

நெல்லிக்காய் நோய் நீக்கியாக விளங்குகிறது. இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. நெல்லிக்காய் பல்வேறு நோய்களை போக்க கூடியது. உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. ஆயுளை வளர்க்க கூடியது. வேர்வையால் உண்டாகும் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவத்தை காணலாம். பற்பாடகத்தை பாலில் அரைத்து உடலில் பூசினால் துர்நாற்றம் போகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்!! (மகளிர் பக்கம்)
Next post அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!! (அவ்வப்போது கிளாமர்)