6 மாதங்களுக்கு அரிசி இலவசம்!! (உலக செய்தி)

Read Time:2 Minute, 12 Second

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் இரண்டு பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 206 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- கொரோனா பரிசோதனைகளுக்கு தேவையான கூடுதல் உபகரணங்களை மத்திய அரசு மேற்குவங்காளத்திற்கு வழங்க வேண்டும்.

பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் ஒரு கிலோ அரிசி அடுத்த 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

மேற்குவங்காள அரசு மாநில நிவாரண நிதி கணக்கை துவங்க உள்ளது. இந்த கணக்கு மூலம் கொரோனாவை எதிர்கொள்ள மாநில அரசுக்கு மக்கள் நிதி உதவி வழங்கலாம்.

மேலும் மாநில அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மக்கள் தன்னிச்சையாக வீடுகளிலேயே இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ்த் தேசியமும் கொரோனா வைரஸும் !! (கட்டுரை)
Next post ஐரோப்பாவில் 5 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி!! (உலக செய்தி)