சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியல் இந்தியாவின் இந்திரா நூயி முதலிடம்

Read Time:1 Minute, 21 Second

Woman.Fower.jpgஅமெரிக்காவில் இருந்து `பார்ச்சூன்’ என்ற வர்த்தக இதழ் வெளிவருகிறது. இதில் வர்த்தக துறையில் உலக அளவில் சக்தி வாய்ந்த 50 பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியாகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் சென்னையில் பிறந்த இந்திரா நூயி முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் உலக குளிர்பான உலகில் ஜாம்பவனாக திகழும் பெப்சி கோலாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நேற்றுமுன்தினம் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் கடந்த 2 ஆண்டாக இ-பே நிறுவன தலைவர் மெக் விட்மேன்தான் முதலிடத்தில் இருந்தார். அப்போது கடந்த ஆண்டில் இந்திரா நூயி 11-வது இடத்தில் இருந்தார். தற்போது அவர் 10 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். விட்மேன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜெராக்ஸ் சேர்மன் அன்னி முல்கே 2-வது இடம் வகிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாய்லாந்தில் பதவி இழந்த பிரதமர், கட்சிதலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்
Next post ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -EPRLF (Napa)- பத்திரிகை அறிக்கை….