ஆண்மையை அதிகரிக்கும் பீட்ரூட்!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 1 Second

காய்கறிகளிலே கலர்ஃபுல்லான காய் பீட்ரூட் தான். இதை நாம் சமையலில் மட்டும் பயன்படுத்துவோம். இதன் வாசனை சிலருக்கு பிடிக்காது. ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பல நோய்களுக்கு, பீட்ரூட் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

பீட்ரூட்டின் இலை, தண்டு முதல் வேர் வரை உண்ணக்கூடியவை. இதன் இலைகள் கீரையை ஒத்திருப்பதால் மற்ற கீரை வகைகளைப் போலவே சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் சிவப்பு நிறத்திற்கு காரணம், இவற்றில் காணப்படும் பீட்டானின் எனப்படும் பைட்டோ கெமிக்கல். சிலவகை உணவுகளுக்கு இயற்கையான வண்ணமூட்டியாகவும் பயன்படுத்தலாம். பச்சையான பீட்ரூட் துருவலை சாலட்டுகளிலும், சூப்களிலும் அலங்காரமாக தூவி சாப்பிடலாம்.

ஒரு கப் பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் ஏ, கே, பி12, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற ரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் ஏராளமாக உள்ளது. உடலில் ரத்தணுக்களின் அளவு சீராக இருக்க, பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பது நல்லது. பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது, ஆண்மை குறைவிற்கு காரணமாக அமையும். தினசரி பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொள்வதன் மூலம், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொண்டு ஆண்மை பிரச்சனை வராமல் தடுக்கலாம். நைட்ரேட் நிறைந்த, முழு பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாலிபரிடத்தில், இயங்கும் செயல்திறனை மேம்படுத்துகிறது. செயற்கையான ஊட்டச்சத்து மாத்திரைகள் மூலம் கிடைக்கும் நைட்ரேட்டுகள் தீங்கு விளைவிக்கக்கூடியவை.

ஆனால், பீட்ரூட் போன்ற முழு காய்கறிகளிலிருந்தும் நைட்ரேட்டுகளைப் பெறுவது சிக்ஸ்பேக் உடலோடு திடகாத்திரமான தோற்றத்தைப் பெற விரும்பும் நபர்களுக்கு நல்ல ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். பீட்ரூட்கள் தோள்பட்டை தசைகளை வலுவாகவும், எரிபொருள் திறனை அதிகரிப்பதாகவும் செயல்படுகிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்கள் நைட்ரேட் சப்ளிமென்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தினசரி பீட்ரூட் ஜூஸை அருந்துவதன் மூலம், தங்கள் விளையாட்டில் மேலும் திறம்பட செயல்பட முடியும். உடற்பயிற்சியின் போது தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைப்பதன் மூலமும், உடற்பயிற்சி செய்யும் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமும், சோர்வு அடைவதற்கு முன்பு ஒருவர் உடற்பயிற்சி செய்யக்கூடிய நேரத்தை நீட்டிப்பதன் மூலமும் செயல்திறனை மேம்படுத்தலாம் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

மேலும், பீட்ரூட்டில் உள்ள அதிக நைட்ரேட் உள்ளடக்கம் குறித்த சமீபத்திய கவனம் பெற்றுள்ளது. அதாவது, உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடிய, பாக்கட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் மூலம் நமது உடலினுள் செல்லும் நைட்ரைட், நைட்ரிக் ஆக்சைடு போன்றவற்றை காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள இயற்கையான நைட்ரேட்டின் மூலம் குறைக்கப்படுவதாக ஆராய்ச்சி கூறுகிறது.

பீட்ரூட்டில், பைட்டோநியூட்ரியண்ட் அந்தோசயினின் இருப்பதால், புரோஸ்டேட், தோல், நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.பீட்ரூட்டில் உள்ள ஃபைபர் சிறந்த அழற்சி எதிர்ப்பு அறிகுறிகளைக் கொண்டுள்ளது, இதில் உள்ள ஃபோலியேட் மற்றும் பீட்டெய்ன் ஆகியவை செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உணவு நார்ச்சத்து இருப்பது மலச்சிக்கலை எளிதாக்க உதவுகிறது.பீட்ரூட் சாறு, உடலின் கெட்ட கொழுப்பின் அளைவை குறைக்க உதவுகின்றன. பீட்ரூட்டில் உள்ள ஃபோலிக் ஆசிட் எலும்புப்புரை நோயால் வரக்கூடிய ரத்தசோகையை போக்கக்கூடியது.

பீட்ரூட் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது, எடை குறைக்க உதவுகிறது, கண்புரை, பல் நோய்களைத் தடுக்கிறது, ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவை அதிகரிக்கிறது, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கிறது.பீட்ரூட்டில் வைட்டமின்கள், பீட்டேன், கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளதால், இது கல்லீரலுக்கு நன்மை பயக்கும், மேலும் இது சிறுகுடல் மற்றும் கல்லீரல் வழியாக எளிதில் பாயும் பித்தநீர் ஓட்டத்திற்கும் உதவுகிறது. கல்லீரலில் படிந்துள்ள கழிவுகளை அகற்றி சுத்தப்
படுத்துவதற்கும் உதவுகிறது.

மூளை நரம்பியல் தன்மையை மேம்படுத்தவும் பீட்ரூட் உதவுகிறது. பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்பட்டு, மூளை செல்களை மேம்படுத்தவும், சிறந்த மூளை ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கவும் உதவுகிறது. இதன்மூலம் அல்சைமர் நோயை உருவாக்கும்அபாயத்தையும் குறைக்கிறது.கர்ப்ப காலத்தில் பீட்ரூட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது; வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி, அழற்சியைக் குறைக்கிறது; ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது; கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது, பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கிறது மற்றும் வைட்டமின் சி வழங்குவதன் மூலம், உணவிலிருந்து இரும்புச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவுகிறது.

இதனால் கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாட்டினால் வரக்கூடிய ரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது . கர்ப்ப காலத்தில் வரக்கூடிய காலை நேரத்திய மயக்கம், வாந்தி போன்ற காலைநேர நோய்களை தடுக்க உதவுகிறது. இரண்டாவது மூன்றாவது மாதங்களில் உணவில் பீட்ரூட்டைச் சேர்ப்பது சிறந்த வழியாகும். ஏனெனில், பீட்ரூட் ஃபோலிக் அமிலத்தின் மிகவும் வளமான மூலமாக இருப்பது கருவில், நரம்புக் குழாய் குறைபாட்டின் வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது.

ஃபோலிக் அமிலம் ,ரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் அளவை சரிபார்ப்பதன் மூலம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப அதிக அளவு பீட்ரூட் சேர்ப்பதும் ஆபத்தே. குறிப்பாக, நைட்ரேட்டுகள் கர்ப்ப காலத்தில் சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும்.

பீட்ரூட்டின் இலைகளில் பீட்டாயின் உள்ளது, இது கர்ப்ப காலத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது, மேலும், இதை அதிக நாட்கள் உட்கொள்பவர்களுக்கு சிறுநீர், மலம் சிவப்பு கலரில் வெளியேறலாம். ஆராய்ச்சியின் படி, பீட்ரூட் மற்றும் பீட்ரூட் கீரைகளில் அதிகப்படியாக உள்ள ஆக்ஸலேட், கால்சியம் உறிஞ்சப்படுவதைக் குறைக்கின்றன. மேலும், திரவ உணவின் மூலம் ஆக்சலேட்டின் அளவை எடுத்துக் கொள்வது சிறுநீரக கற்களின் வளர்ச்சிக்கான அபாயத்தையும் அதிகரிக்கும்.

மற்றொரு ஆராய்ச்சியின்படி பீட்ரூட் ஜூஸை மட்டும் நேரடியாக எடுத்துக் கொள்ளாமல் அதோடு மற்ற காய்கறிகள், பழங்கள் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம. தூய பீட்ரூட் ஜூஸை நேரடியாக எடுத்துக் கொள்வதால், குரல் வளையத்தை (Vocal chard) செயலிழக்கச் செய்யலாம் அல்லது ஒரு படை நோயை ஏற்படுத்தலாம்; இதயத் துடிப்பு அதிகரிக்கும்; அல்லது குளிர் மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடும். இது கல்லீரல் நச்சுத்தன்மை, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியையும் ஏற்படுத்தும்.

பீட்ரூட்டை சாலட், சூப், தோசையில் சேர்க்கலாம், இட்லி அல்லது பெசரட்டு சப்பாத்தி அல்லது வேறு எந்த காய்கறி, சிற்றுண்டி, மற்ற பழங்களுடன் கலக்கலாம் அல்லது சாறு தயாரிக்கலாம், பீட்ரூட்டை அல்வா, சட்னி மற்றும் பீரூட் புலாவ் செய்தும் சாப்பிடலாம்.

பீட்ரூட்டின் வாசனை மற்றும் சுவை சிலருக்கு பிடிக்காது என்பதால் பச்சையாக சாறாகவோ, சாலட்டாகவோ செய்வதற்குப் பதில் ஆரோக்கியமான பீட்ரூட் அல்வா செய்து கொடுத்தால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சமையல்கலை நிபுணர் நித்யா நடராஜன் பீட்ரூட் அல்வா செய்யும் முறையை விளக்குகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம்மை உறையவைக்கும் வெறித்தனமான வாகனங்கள்!! (வீடியோ)
Next post ஆயுதமல்ல அந்தரங்க உறவு!! (அவ்வப்போது கிளாமர்)