அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் யுனிசெவ் வலியுறுத்தல்

Read Time:2 Minute, 9 Second

unicef.jpgஇலங்கையின் உள்நாட்டு மோதலால் பெண்களும் குழந்தைகளுமே அதிகளவு பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெவ்) இலங்கை அரசாங்கத்தையும் புலிகளையும் மோதலை நிறுத்தி பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதி நிறைவேற்று இயக்குநர் ரிமா சலாஹ இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அமைப்பின் தொடர்பாடல் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து யுனிசெவ் நன்கு அறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் சமாதானத்திற்கான குழுவினு}டாக யுனிசெப் அமைப்பு இருதரப்பையும் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புமாறு கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களை படையணியிலிருந்து விலக்கிக் கொள்வதற்காக யுனிசெப் வேண்டுகோள் விடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ள சலாஹ் நியுயோர்க்கில் உள்ள விசேட குழு நிலைமையை அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது nhதடர்பான தனது அறிக்கையை இலங்கை வெகுவிரைவில் பாதுகாப்புச் சபையிடம் சமாப்பிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -EPRLF (Napa)- பத்திரிகை அறிக்கை….
Next post சூதாட்ட கிளப்பில் இளவரசர் வில்லியம்