தெருவோர குட்டி நூலகம்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 23 Second

நீண்ட தூரப் பயணத்தின்போது புத்தகம் வாசிப்பது பலரது வழக்கம். இதற்காக ரயில் பயணத்தின்போது பலர் தங்களுக்கு விருப்பமான புத்தகத்தை எடுத்து செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது விருப்பமான நூலை எடுத்து செல்ல முடியாவிட்டால் இனி கவலைப்பட வேண்டாம். நாட்டின் வடகிழக்கு மாநிலமான மிஸோரமின் தலைநகர் ஐசாவால் பகுதியில் நீங்கள் பயணம் செய்தால் உங்களுக்கு சாலையோரங்களில் நிறுவப்பட்டுள்ள குட்டி நூலகம் உங்களின் வாசிப்பு பசிக்கு உதவக்கூடும்.

இந்திய வருவாய்த் துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் என்பவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், மிஸோரமின் தலைநகர் ஐசாவிலில் நிறுவப்பட்டுள்ள சாலையோர குட்டி நூலகம் பற்றிய தகவலை படங்களுடன் வெளியிட்டிருந்தார். அதில் இதைத்தான் நாட்டில் உள்ள எல்லா நகரங்களும் இனி பின்பற்ற வேண்டும். ஐசாவாலில் இதுபோல இரண்டு சாலையோர குட்டி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு நாட்டை உருவாக்குவதில் நூலகங்களின் பங்கு சிறப்பானது’ என்ற வாசகத்துடன் கூடிய நூலக வீடியோ வைரலாகி வருகிறது.

Lalhruaitluanga Chawngte என்பவர் இந்த நூலகத்தை அமைத்து பராமரித்து வருகிறார். எனவே இனி உங்களது விருப்பமான கதை புத்தமாகட்டும், நாவலாகட்டும், கட்டுரை என எதையும் தவற விட வேண்டியிருக்காது.. இதில் உள்ள நோட்டில் உங்கள் பெயரை எழுதி நீங்கள் எடுத்துள்ள புத்தகங்களின் பெயர் மற்றும் உங்களின் செல்போன் எண்ணைக் குறிப்பிட்டால் போதும். இதற்கான கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை. மீண்டும் அவ்வழியே திரும்பும்போது அந்த புத்தகத்தை திருப்பி தந்தால் போதும்.

இத்தகைய நூலகங்கள் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, இலவசமாக புத்தகங்களை பரிமாறிக் கொள்ள உத வு வதன் மூலமாக வாசிப்பு சார்ந்த குழுக்களை உண்டாக்க உதவுகிறது. அவரது இந்தப் பதிவிற்கும், சாலையோர நூலகம் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும் ட்விட்டர் பயனாளர்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த சாலையோர நூலகங்களின் வாசகர்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், தற்போது செல்போன்தான் உலகம் என்று இருக்கும் இந்த தலைமுறையினருக்கு இது போன்ற புத்தக வாசிப்பு என்பது மிகவும் அவசியமானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்!! (மகளிர் பக்கம்)
Next post தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)