வெண்டைக்காய்!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 47 Second

‘வாய் வெண்டைக்காய்… கையோ கருணைக்கிழங்கு’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதன் பொருள் பேசுவது ஒன்று. செய்வதோ மற்றொன்று என்பதாகும். இனிமையாகப் பேசி எரிச்சலூட்டும்படி நடப்பவர்களை இப்படிப்பட்ட பழமொழியால் வேடிக்கையாகக் குறிப்பிடுவது உண்டு. அப்படி வழவழப்புத் தன்மை கொண்ட வெண்டைக்காய் சுவையான ஓர் உணவாவது மட்டுமல்லாமல், சுகமான மருந்தாவதும் கூட என்று நாம் அறிதல் வேண்டும். துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்கிற அளவுக்கு நமக்கு பணச் செலவைத் தந்து ஏழ்மைப்படுத்துகிற பல நோய்களுக்கு வெண்டைக்காய் அரு மருந்தாகிறது.

வெண்டைச் செடியின் தண்டுப்பகுதி சுனை உடையதாய் இருக்கும். இதன் இலைகள் மாற்றடுக்கிலும் மிருதுவானதாகவும் இருக்கும். வெண்டைக்காய் வழவழப்பு

மிகுந்தது. உணவுக்கு உகந்தது. வெண்டைச்செடி வருடம் முழுவதும் பூக்கும் தன்மையது. தமிழில் இதை வெண்டிக்காய், வெண்டக்காய் என்று கூட குறிப்பிடுவர்.

Abelmoschus Esculentus என்பது இதன் தாவரப் பெயர். Okra, Lady’s finger என்பவை இதன் ஆங்கிலப் பெயர்கள் ஆகும். வெண்டைக்காய் உடலுக்கு குளிர்ச்சி

தரவல்லது, காம உணர்வைத் தூண்டக்கூடியது, மேற்பூச்சாகப் பயன்படுத்துகையில் உடலின் உள் அனலைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்கி வெளித்தள்ளி

உடல் வீக்கத்தை வற்றச் செய்வது உள்ளுக்குப் பயன்படுத்தினாலும் மேலுக்குப் பயன்படுத்தினாலும் உடலின் உள்ளுறுப்புகளின் வறட்சியையும் மேற்புறத் தோலின் வறட்சியையும் போக்கி நலம் தரவல்லது.

வெண்டைக்காய் பற்றிய மருத்துவப் பாடல்

கண்ட கிராணி கடிய அதிசாரம்
விண்டவெண் சீதரத்தம் மேவுங்கான் – ஒண்டொடியே!
வண்டற்காம் வெய்யகப வாதமிகும் வாய்க்குணவாம்
வெண்டைக்காய் உண்பார்க்கு விள்

– என வெண்டைக்காயின் பெருமையைப் பற்றிச் சொல்லும் ஒரு மருத்துவப் பாடல் உண்டு.

வெண்டைக்காயை உள்ளுக்குப் பயன்படுத்துவதால் நீண்ட நாட்பட்ட நிணக்கழிச்சல், அதிசாரம் என்னும் நீராய் கழிகிற பெருங்கழிச்சல், சளி போல சீதம் கலந்து

கடுமையான வயிற்றுக் கடுப்போடு அடிக்கடி வெளியேறும் சீதபேதி, மலத்தோடு ரத்தம் கலந்து வெளியேறும் குருதிக் கழிச்சல் போன்ற வயிற்றுக்
கோளாறுகளை குணப்படுத்தும். அதேவேளையில் அளவுக்கு மீறி வெண்டைக்காயை உண்கிற நிலையில் கபநோய்களையும், வாயு சம்பந்தமான நோய்களையும்

உண்டாக்கக்கூடும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள் ஆகும்.

வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள்

* வெண்டைக்காய் அதிக வழுவழுப்புடையதாகையால் இது உணவாகும் குழம்பு வகைகளில் பயன்படுத்தப்படும். வெண்டைக்காயின் விதையினின்று பெறப்படும்

ஒரு வகை வழவழப்பான கொழுப்பு சத்துவம் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கும் (Antioxidant) வல்லமை உடையது.

* வெண்டை விதைகள் எப்படிப்பட்ட கட்டிகளையும் (Tumour) கரைக்கும் தன்மையது. வெண்டைக்காயின் விதையினின்று பெறப்படும் சத்துவம் நுண் கிருமிகளை அழிக்கவல்லது.

* முற்றிய வெண்டைக்காயில் Quercetin, Hyperin, Hyperoside, கொழகொழப்புத் தன்மை(Mucilage), Pro-Anthocyanidins, D-Glucose, D-Glucuronic,

Galacturonic Acid போன்ற மருத்துவ குணம் வாய்ந்த அமிலச் சத்துக்களும் மிகுதியாக இருக்கின்றன. மேலும் வெண்டைக்காயின் பூக்களில் Flavonol

Glycosides மற்றும் Antho cyanins ஆகிய புற்றுநோயைத் தடுக்கவல்ல அல்லது குணப்படுத்தவல்ல Antioxidant அடங்கியுள்ளது.

* வெண்டைக்காய் விதைகள் முற்றிய நிலையில் எண்ணெய் சத்துவம் மிக்கதாக விளங்குகிறது. இதனின்று வடிக்கப்படும் எண்ணெய் சற்று மஞ்சள் நிறம் கலந்த

பசுமை நிறமுடையது. இந்த எண்ணெய் உடலுக்கு நோய் செய்யும் (L.D.L. Cholesterol) கெட்ட கொழுப்புத்தன்மை தராத (Unsaturated Fat) எண்ணெய் சத்துவம் மிகுந்தது. இந்த எண்ணெய் தாவர எரிபொருள்(Bio-fuel) எண்ணெய் ஆகக் கூடப் பயன் தரவல்லது.

* முற்றிய வெண்டைக்காய் விதைகளைச் சேகரித்து உலர்த்தி சற்று கருகும்படி கடாயில் இட்டு வறுத்து எடுத்து நன்கு பொடித்து வைத்துக் கொண்டு காபித் தூளுக்கு பதிலாக இந்த தூளைப் பயன்படுத்தலாம். காஃபின் எனப்பெறும் ஒரு நச்சுப் பொருள் கலவாத ஒரு பானத்துக்கு அல்லது தீநீருக்கு இது உதவும்.

* வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்துவம் நாம் உண்ட உணவினின்று குடல் பகுதி அதிக சர்க்கரை சத்துவத்தை உறிஞ்சாத வண்ணம் தடுத்து நிறுத்துகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகாத வண்ணம் நிலைப்படுத்தப்படுகிறது.

* வெண்டையிலிருக்கும் சளித்தன்மை(Mucilage) கொழுப்புச் சத்துவமும், பித்த அமிலமும் கல்லீரலில் சென்று மிகாத வண்ணம் கட்டுப்படுத்துகிறது.

* வெண்டைக்காயிலுள்ள நார்ச்சத்துவம் மலத்தைக் கட்டுவதோடு அதிலுள்ள வழுவழுப்புத் தன்மை எளிதாக மலத்தை வெளித்தள்ளி குடலைச் சுத்தமாக்க
உதவுகிறது.

* வெண்டையில் மிகுந்துள்ள வழுவழுப்புத் தன்மை உடலில் நச்சுக்கள் மிகாதபடி அவற்றை வெளித்தள்ள உதவுகிறது. வெண்டைக்காயை ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தும்போது எந்த பக்க விளைவுகளும் ஏற்படுத்தாத, பணச் செலவில்லாத, பாதுகாப்பான மருந்தாகிப் பயன் தருகிறது.

* குடற்பகுதியில் உள்ள நல்ல உயிர்க் கிருமிகளுக்கு (Bacteria-probiotic) வெண்டைக்காயினின்று கிடைக்கும் நார்ச்சத்து, ஊட்டந்தந்து ஊக்குவித்து செயல்பட வைக்கிறது. குடற்பகுதி ஆரோக்கியமாக இருப்பதற்கு இது ஆதரவாகிறது.

* வெண்டைக்காய் மன அழுத்தத்தைக் குறைக்கவல்லது. மேலும் மிக்க பலவீனமாக உடல்நிலை கொண்டோருக்கும் மிகச் சோர்வுற்றோருக்கும் நல்ல ஊட்டம் தரும் உணவாகிறது.

* வெண்டைக்காய் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மையது. அதன் கொழகொழப்புத் தன்மை வயிற்றின் குடல் பகுதியில் ஒரு மேற்பூச்சு மருந்து போல படிந்து அமிலத்தால் பாதிக்காதவாறு பாதுகாக்கிறது. வெண்டைக்காய் தொண்டைக்கட்டைப் போக்குகிறது. நுரையீரல் அழற்சியை நீக்குகிறது. அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்னும் உணர்வை அடியோடு அகற்றுகிறது.

* கோடைகால வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள அகமருந்தாகவும், புறமருந்தாகவும் உதவுகிறது.

* ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு கொழுப்புச் சத்துவத்தையும் சேரவொட்டாது தடுக்கிறது.

* வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்துவம் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு நோய் வாராது சுவாச கோளங்களைக் காக்கிறது.

* வெண்டைக்காயை அடிக்கடி உண்பதால் நரம்புகள் வீக்கம் அல்லது அழற்சியுறுதல் ரத்த நாளங்களில் ஏற்படுகிற பாதிப்புக்கள் வாராது.

* நோய் எதிர்ப்பு தரும் தன்மையுடையதாய் இருப்பதால் மலக்குடலில் புற்று நோய் வராமல்(Colorectal cancer) தடுக்கிறது.

* வெண்டைக்காய் சிறு ரத்த நாளங்களுக்கு அதாவது (Capillaries) சிரைகள் எனப்படும் மென்மையான முடி போன்ற ரத்த நாளங்களுக்கு பலமளிக்கிறது.

* உணவில் அடிக்கடி வெண்டைக்காயை சேர்ப்பதால் கண் புரை(Cataracts) வராது தடுக்கப்படுகிறது. மேலும் சருமத்தின் மேல் வரும் பல தொல்லைகளைத்

தவிர்க்கிறது. குறிப்பாக, முகத்தைப் பாதிக்கும் முகப்பருக்கள் வராமல் தடுத்து முகப்பொலிவைக் கூட்டுகிறது.

* உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் அழகுக்கு வெண்டைக்காயும் ஒரு காரணம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர்.

வெண்டைக்காய் மருந்தாகும் விதம்

* வெண்டைக்காய் சாற்றை 1/2 மணி நேரம் தலைக்குத் தேய்த்து வைத்திருந்து பின்னர் குளிப்பதால் தலைப் பொடுகு, தலை அரிப்பு, முடி கொத்து கொத்தாகக் கொட்டுதல் ஆகிய துன்பங்கள் விலகித் தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் விளங்கும்.

* வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதோடு அதன் சாற்றை மேற்பூச்சாகச் சிறிது நேரம் பூசி வைப்பதால் தோலில் ஏற்படும் வண்ண மாற்றங்கள் விலகி தோல் ஆரோக்கியம் பெறும்.

* வெண்டைச் செடியின் இலைகளை மைய அரைத்து சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டிகளின் மேல் இளஞ்சூட்டோடு கட்டி வைக்க விரைவில் கட்டிகள் பழுத்து உடைந்து வலியும் வீக்கமும் வற்றிப் போகும்.

* வெண்டைக்காயைத் துண்டுகளாக நறுக்கி நீர் விட்டுக் காய்ச்சி இனிப்பு சேர்த்துக் கொடுப்பதால் பேதி, அதிசாரம், சீதபேதி ஆகியன குணமாகும்.

* வெண்டைக்காயைப் பொடித்து நீர் விட்டுக் கொதிக்க வைத்து வருகிற ஆவியை சுவாசிப்பதால் தொண்டைப் புண், தொண்டைக் கட்டு, தொண்டை எரிவு ஆகியன குணமாகும்.

* வெண்டைக்காயைப் பிஞ்சுகளாய் தேர்ந்தெடுத்து 150 கிராம் அளவு எடுத்து 1/2 லிட்டர் நீர் சேர்த்து அடுப்பிலிட்டு பாதியாகக் குறையும் வரை கொதிக்க விட்டு போதிய கற்கண்டு பொடி சுவைக்கென சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு வேளைகள் உள்ளுக்குக் கொடுக்க கருப்பை அழற்சி மற்றும் தொற்றுக்கிருமிகளால் ஏற்பட்ட வெள்ளைப்போக்கு, வறட்டு இருமல், குத்திருமல், சிறுநீர்த் தாரை எரிச்சல், சிறுநீர் சொட்டு சொட்டாக சூடாக வெளியேறுதல்,
வயிற்றுக் கழிச்சல், சீத, ரத்தபேதி ஆகியன குணமாகும். உடலும் உரம் பெறும்.

* வெண்டைக்காய் சாறு எடுத்து சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து தைல பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு மூட்டு வலிகளின் மேல் தடவி வர வலி வெகு விரைவில் விட்டோடிப் போகும்.

* முற்றிய வெண்டைக்காய் விதைகளைப் பொடித்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் சேர்த்து உறவாடும்படி கலந்து இருவேளை என ஓரிரு நாட்கள் உள்ளுக்கு சாப்பிட வயிற்றுக் கடுப்பு, வயிற்று எரிச்சல், விட்டு விட்டு வந்து தொல்லை தரும் வயிற்று வலி ஆகியன குணமாகும்.

* முற்றிய விதைகளை கருக வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு காபி பொடிக்கு பதிலாகப் பயன்படுத்தினாலும் மேற்கண்ட நலங்களைத் தரும்.

* வெண்டைக்காய் ஏதோ வயிற்றை நிரப்ப உதவும் ஓர் உணவுப் பண்டமாகத்தான் நாம் அறிந்திருப்போம். இரண்டு வெண்டைக்காய்களைக் குறுக்கே துண்டித்து ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் பருகி வர பல தொல்லைகளுக்குக் காரணமாக விளங்குகிற சர்க்கரை நோய் என்னும் குருதியில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலை நகராகிய கண்ணகி நகர்!! (மகளிர் பக்கம்)
Next post ஈறுகளை பலப்படுத்தும் வெற்றிலை!! (மருத்துவம்)