உயிரோடு தான் இருக்கிறாரா கிம்? (உலக செய்தி)

Read Time:2 Minute, 35 Second

கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று வடகொரியா. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் அந்நாட்டின் கிம் ஜாங் உன் (36) செயல்பட்டு வருகிறார்.

உலக நாடுகளுடன் பெரும்பாலும் வர்த்தகம் உள்ளிட்ட எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளாத வடகொரியாவில் ஊடகங்கள் உள்பட அனைத்து துறைகளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வெளிநாட்டு ஊரடங்கள் அந்நாட்டில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் வெளி உலகிற்கு தெரியாமலேயே உள்ளது.

இதற்கிடையில், குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தை கொண்ட வடகொரிய ஜனாதிபதி கிம் கடந்த 12 ஆம் திகதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அதன் பின்னர் ஜனாதிபதி எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அவரது நிலைமை என்ன என உலக நாடுகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதற்கிடையில், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட கிம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் அவர் உயிரிழந்து விட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், கிம் குறித்து கடந்த 20 நாட்களாக எந்த ஒரு தகவல்களும் கிடைக்காத நிலையில் அவர் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில் புதிதாக அமைக்கப்பட்ட உரத்தொழிற்சாலையை ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேற்று நேரில் வந்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நிகழ்ச்சி நடைபெற்றதையோ, அதில் ஜனாதிபதி கிம் பங்கேற்றதையோ உறுதிபடுத்தும் விதமாக எந்த ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவையோ வடகொரிய அரசு செய்தி நிறுவனம் ஆதாரமாக வெளியிடவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவில் கொரோனா பாதிப்பு 37,000 – உயிரிழப்பு 1218!!! (உலக செய்தி)
Next post ஊரடங்கின் போது வலம் வரும் விலங்குகள்!! (கட்டுரை)