மைக்கேல் ஜாக்சனை ரகசியமாக படம் பிடித்த விமான கம்பெனி அதிபருக்கு 6 மாதம் ஜெயில்

Read Time:2 Minute, 8 Second

mickal.Jakson.jpgபிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறுவனுடன் செக்ஸ் உறவு கொண்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக் கில் சரண் அடைவதற்காக மைக்கேல் ஜாக்சன் தனது வக்கீலுடன் சாந்தா பார்பரா கோர்ட்டுக்கு விமானத்தில் சென்றார். அவர் சென்ற தனியார் ஜெட் விமானத்தின் உரிமையாளர் ஜெப்ரி ரகசியமாக மைக்கேல் ஜாக்சன் விமானத்தில் பயணம் செய்வதையும் வக்கீலுடன் பேசுவதையும் படம் பிடித்தார்.

இது மைக்கேல் ஜாக்சனின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவது ஆகும் என்று அந்த விமானக் கம்பெனி அதிபர் மீது கோர்ட்டில் புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் இப்போது லாஸ்ஏஞ்சல்ஸ் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஜெப்ரிக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும் இ.ரூ. 4 லட்சம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இது தவிர 3 ஆண்டுகள் அவர் சமூக சேவை நல்லொழுக்க பயிற்சி வகுப்புக்கு செல்ல வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஜெப்ரியின் மனைவி உடல் நாம் இல்லாமல் இருப்பதால் ஜெப்ரியை 6 மாதம் அவரது வீட்டிலேயே தங்கியிருந்து வீட்டுக் காவலாக தண்டனையை அனுபவிக்கலாம் என்றும் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. செக்ஸ் வழக்கில் இருந்து மைக்கேல் ஜாக்சன் ஏற்கனவே விடுதலை பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

mickal.Jakson.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இன்றைய தேவை பொது தேசிய கொள்கையை வகுப்பதே
Next post தாய்லாந்து வேட்பாளர் ராஜினாமா -ஐ.நா.பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில்