வைரலாகும் பகீர் வீடியோ – புலம் பெயர்ந்த தொழிலாளர்களா? (உலக செய்தி)

Read Time:2 Minute, 43 Second

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் பகீர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பகல் நேரத்தில் சாலையில் சென்ற நபரை இருவர் கொடூரமாக தாக்குகின்றனர். இருவரில் ஒருவர் தாக்குவதும், மற்றொருவர் தாக்கப்படும் நபரிடம் இருந்து பணத்தை பறிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது.

வைரல் வீடியோ டெல்லியின் பல்ஜீத் நகரில் எடுக்கப்பட்டது என்றும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிறார்கள் என்றும் தெரியவந்து இருக்கிறது. மேலும் தாக்குதலுக்கு ஆளான நபர் புலம் பெயர்ந்த தொழிலாளி இல்லை என்பதும், அவர் உயிருடன் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ பதிவுகளில், இரவு நேரத்தில் தனியாக வெளியில் செல்ல வேண்டாம். இரவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அப்பாவி மக்களை கொன்று அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் நகைகளை பறித்து செல்கின்றனர், என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் ஏப்ரல் 14, 2020 அன்று எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் வழங்கியுள்ள தகவல்களின் படி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 18 வயது நிரம்பாத சிறார்கள் என்றும் இவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

வைரல் வீடியோவில் உள்ள சிறார்கள் மொபைல் போன் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வைரல் வீடியோவில் இருப்பவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post WHO க்கு கெடு விதித்த அமெரிக்கா – சீனா பதிலடி!! (உலக செய்தி)
Next post அடுப்படியில் தேடப்படும் ’யானை’ !! (கட்டுரை)