மார்கழி பனியை எப்படி சமாளிப்பது? (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 42 Second

“மார்கழி மாசத்து பனியிலே ஏகப்பட்ட உடல் உபாதைகள் வருது. எப்படி சமாளிக்கலாம்னு ஆலோசனை சொல்லுங்களேன்?” என்று கேட்டிருக்கிறார் ஜீவா, சேலம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் உடல் நோய்கள் என்ன, அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று விளக்குகிறார் குழந்தைகள் மற்றும் பொதுநல மருத்துவர் சதீஷ்.‘‘மழைக்காலத்தில் வரும் நோய்கள் ஒரு பக்கம் என்றால், மழைக்கு பின் வரும் நோய்கள் மறுபக்கம். சொல்லப் போனால் மழைக்கு பிறகு வரும் நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். வைரல்ஃப்ளூ என்று அழைக்கப்படும் ஒரு வகையாக சளி பிரச்னை பொதுவான நோய். மழைக் காலத்தில் இருந்து திடீரென்று பனிக்காலம் தொடங்கும் போது வைரல் கிருமிகள் காற்றில் அதிகமாக பரவி இருக்கும். இதனால் குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களையும் இது பாதிக்கும்.

அடுத்த பிரச்னை தண்ணீரால் பரவும் நோய். மழைக்கு பின் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கும். இது கொசு உற்பத்தியாகும் இடம். இதன் மூலம் டெங்கு மற்றும் மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவும். அதனால் மாலை ஐந்து மணிக்கு மேல் ஜன்னல்களை மூடுவது நல்லது. அல்லது கொசு வராமல் இருக்க ஜன்னலில் கொசு வலை அடிக்கலாம். புகை வரும் கொசுவத்தியை தவிர்த்துவிட்டு லிக்விட் பயன்படுத்தலாம். குறிப்பாக குழந்தைகள் கொசு விரட்டி கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டின் முன் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். டெங்கு போலவே ஒருவித ஜுரம் உள்ளது. இந்த ஜுரத்தால், மூட்டுவலி, சருமத்தில் தடிப்பு மற்றும் ஜுரம் அதிகமாக இருக்கும். இதனை ரத்த பரிசோதனை மூலம் அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மழை தண்ணீருடன் சாக்கடை நீர் கலப்பது பொதுவான விஷயம். இதனால் குடிக்கும் தண்ணீரும் மாசுபடுகிறது. அதை நாம் பருகும் போது, வயிற்றுப்போக்கு, குடல்புண் மற்றும் குடல்பூச்சி போன்ற பிரச்னைகள் உண்டாகும். பனிக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகாது. அதனால் இரவு எட்டு மணிக்கு முன் இரவு உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதிக எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகளை தவிர்த்து எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ணவேண்டும். பேக்கரியில் கிடைக்கும் கிரீம் கேக்குகளை தவிர்க்கவேண்டும். சாலையோர உணவுகளை சாப்பிடாமல், வீட்டில் தயாரித்த உணவுகள் மற்றும் நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பதன் வழியாக இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

இந்தக் காலத்தில் குளிர்ந்த காற்று வீசும். அது நுரையீரலை பாதிக்கும். குறிப்பாக வீசிங், சைனஸ் மற்றும் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இரவு நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே சென்றாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், ஸ்வெட்டர் மற்றும் காதுகளை மறைக்க குல்லா அணிந்து செல்லலாம். பனிக் காலத்தில் சரும பிரச்னையும் ஏற்படும். சருமம் வறண்டு போவதால், அதை சமாளிக்க மாய்சரைசிங் லோஷன் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, சருமமானது மேலும் வறண்டு போய் செதில் செதிலாக உதிரும். இவர்கள் சருமநிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது’’ என்கிறார் டாக்டர் சதீஷ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனதை உருக்கும் மாளிகாவத்தை சோகம்!! (கட்டுரை)
Next post பிளாஸ்டிக் குப்பைக்கு தீர்வு! வந்தாச்சி, கேன்வாஸ் வாட்டர் பாட்டில்!! (மகளிர் பக்கம்)