டென்மார்க் நாட்டில் மீண்டும் சர்ச்சை- நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரம் வரையும் போட்டி

Read Time:3 Minute, 56 Second

Denmark.jpgடென்மார்க் நாட்டில் நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரம் வரையும் போட்டி நடத்தப்பட்டது. இது அந்நாட்டு டி.வி.யில் காட்டப்பட்டது. இஸ்லாம் மதத்தில் உருவ வழிபாடு கடைபிடிக்கப்படுவதில்லை. இந்நிலையில் டென்மார்க் நாட்டு பத்திரிகை ஒன்று, இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை படமாக வரைந்ததுடன் அவரை கேலி செய்யும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட இப்படம், பின்னர் மற்ற நாட்டு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. இதற்கு உலகம் முழுவதும் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆசிய, ஆப்பிரிக்க, மேற்கு ஆசிய நாடுகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியானார்கள்.

மீண்டும் சர்ச்சை

இந்நிலையில், டென்மார்க் நாட்டில் மீண்டும் நபிகள் நாயகத்தை வைத்து சர்ச்சை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியாக இருப்பது டேனிஷ் மக்கள் கட்சி. இக்கட்சி இனவெறி கொண்ட கட்சியாகும். வெளிநாட்டினர் டென்மார்க் நாட்டில் குடியேறுவதையும் இக்கட்சி எதிர்க்கிறது. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் இக்கட்சி 13 சதவீத ஓட்டு வாங்கி உள்ளது.

இக்கட்சியின் இளைஞர் அணியினருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் நபிகள் நாயகத்தை கேலிச்சித்திரம் வரையும் போட்டி நடத்தப்பட்டுள்ளது. அதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு கேலிச்சித்திரம் வரைந்த காட்சி, தற்போது டென்மார்க் அரசு டி.வி.யில் வீடியோ படமாக காட்டப்பட்டது.

கேலிச்சித்திரங்கள்

ஒரு கேலிச்சித்திரத்தில், பீர் பாட்டில்களுக்கு மத்தியில் நபிகள் நாயகம் அமர்ந்திருப்பது போலவும், பின்னணியில் வெடிகுண்டு காட்சியும் இருக்கிறது. மற்றொரு கேலிச்சித்திரத்தில் நபிகள் நாயகமே பீர் குடிப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளார். இன்னொரு கேலிச்சித்திரத்தில் அவர் ஒட்டகம் போல வரையப்பட்டுள்ளார்.

போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள் பாடிக்கொண்டும், குடித்துக்கொண்டும் கேலிச்சித்திரம் வரைந்த காட்சி, வீடியோ படத்தில் இடம்பெற்றுள்ளது.

கண்டனம்

இந்த செயலுக்கு டென்மார்க் நாட்டின் மற்ற அரசியல் கட்சிகளின் இளைஞர் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளும் லிபரல் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. டேனிஷ் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் கென்னத் கிரிஸ்டன்சன் என்பவரும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இது நகைச்சுவை அல்ல. நான் சம்பவ இடத்தில் இருந்திருந்தால், இந்த போட்டியை நடத்த விட்டிருக்க மாட்டேன். மீண்டும் இப்படி நடக்கக்கூடாது’ என்று அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜப்பானில் நடுக்கடலில் பயங்கரம் சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது; இந்திய மாலுமி சாவு
Next post சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இலங்கை வெற்றி